விடமாட்டேன்.. கதறிய டிரம்புக்கு மீண்டும் ஜெர்க்.. பிடன் வெற்றியை எதிர்த்து தொடுத்த கேஸ்கள் தள்ளுபடி
டிரம்புக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது
வாஷிங்டன்: மறுபடியும் மறுபடியும் "பன்" வாங்கி கொண்டுள்ளார் டிரம்ப்.. டெக்சாஸ் உள்பட 17 மாநிலங்களில் ஜோபிடன் வெற்றியை எதிர்த்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட் ஒரேடியாக தள்ளுபடி செய்துவிட்டது.. இதுதான் டிரம்புக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர் தேர்தலில் தான்தான் வெற்றி பெறுவேன் என்று கடைசி நேரம் வரை உறுதியுடன் நம்பி கொண்டிருந்தார் டிரம்ப்.. அதனால்தான், ஜோபிடனின் பிரச்சாரத்தைகூட, ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை.. அவரை விமர்சனம்கூட செய்யாமல், தன் புராணத்தையே புகழ்பாடி கொண்டிருந்தார் டிரம்ப்.

இந்த அதீத அலட்சியத்தினால், ஜனநாயககட்சி சார்பில் போட்டியிட்ட ஜோபிடன் அமோக வெற்றி பெற்று விட்டார்.. ஆனாலும் இந்த வெற்றியை டிரம்ப்பால் ஜீரணிக்கவே முடியவில்லை.. தோல்வியை ஏற்கவும் முடியவில்லை.. தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக சொன்னார்.. இந்த வெற்றியை எதிர்த்து கோர்ட்டுக்கு போக போகிறேன் என்று ஆவேசமாக கர்ஜித்தார்.
இறுதியில், அதன்படியே ஜோபிடன் வெற்றியை எதிர்த்து கோர்ட்டுகளில் டிரம்ப் தரப்பினர் வழக்குகளை தொடர்ந்தனர். இப்படித்தான், பென்சில்வேனியா மாநில தேர்தல் முடிவை எதிர்த்து சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர, அது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.. இப்போது டெக்சாஸ் உள்பட 17 மாநிலங்களிலும் தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக தள்ளுபடி செய்திருக்கிறது.
நடந்து முடிந்த தேர்தலில் முறைகேடு நடந்ததற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதிகள் சொல்லிவிட்டனர்.. இப்படி தொடரப்படும் வழக்குகள் எல்லாம் ஒவ்வொன்றாக தள்ளுபடி செய்யப்பட்டு வருவது மேலும் மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications