US Tariff: சீனாவுக்கு சலுகை.. இந்தியாவுக்கு மட்டும் வரியா? டிரம்புக்கு குட்டு வைத்த சொந்த கட்சி நிக்கி ஹேலே!
வாஷிங்டன்: ‛‛இந்தியாவுக்கு வரிப்போட்டு (US Tariff) சீண்டாதீங்க.. ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு வரியை நிறுத்தி வைத்துவிட்டு இந்தியாவை மிரட்டுவது ஆபத்தானது. இதன்மூலம் நட்பில் உள்ள இந்தியாவின் உறவை தீயிட்டு எரிக்க வேண்டாம்'' என்று குடியரசு கட்சியை சேர்ந்த நிக்கி ஹேலே தெரிவித்துள்ளார். இந்தியா மீது தனி பாசம் வைத்துள்ள நிக்கி ஹேலே டிரம்புக்கு எதிராக அதிபர் தேர்தலில் களமிறங்க முயன்றார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த முயற்சி கைகூடாத நிலையில் அவர் தற்போது டிரம்பை வார்னிங் செய்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தற்போது நம் நாட்டை சீண்ட தொடங்கி உள்ளார். நம் நாட்டுக்கு 25 சதவீத வரிகளை விதித்துள்ளார். இது வரும் 7 ம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது நம் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டிரம்ப்பின் வரி விதிப்பு என்பது நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இங்கிருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு நிறுவனங்கள் கூடுதல் வரியை வழங்க வேண்டியிருக்கும்.
டிரம்பின் இந்த வரிவிதிப்புக்கு பின்னணியில் ரஷ்யா உடனான நம் உறவு தான் காரணம். ரஷ்யாவிடம் இருந்து நாம் அதிகப்படியான கச்சா எண்ணெயை வாங்கி வருகிறோம். இதனை வாங்க கூடாது என்று டிரம்ப் கூறி வருகிறார். உக்ரைன் போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. டிரம்பும் இந்த போரை நிறுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்க திட்டமிட்டுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் நாம் வழங்கும் பணம் உக்ரைன் போருக்கு பயன்படுகிறது. இதனால் நம் நாடு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது. மீறினால் இப்போது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத வரியை விட அடுத்த 24 மணிநேரத்தில் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டி உள்ளார். இந்நிலையில் தான் டிரம்பின் இந்த நடவடிக்கையை சொந்த கட்சியை சேர்ந்த பிரபலமே கடுமையாக கண்டித்துள்ளார். அதோடு இந்தியாவை சீண்ட வேண்டாம் என்று டிரம்புக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக நிக்கி ஹேலே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க கூடாது. ஆனால் சீனா ரஷ்யா மற்றும் ஈரானிடம் (அமெரிக்காவின் இன்னொரு எதிரி நாடு.. ஈரான் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது) இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. ஆனால் சீனா மீதான வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விஷயத்தில் சீனாவுக்கு அனுமதி கொடுத்துவிட்டு இந்தியா போன்ற நம்முடன் நல்ல நட்பில் உள்ள நாட்டின் உறவை தீயிட்டு எரிக்க வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.
இந்த கருத்தை கூறியுள்ள நிக்கி ஹேலே அமெரிக்காவில் உள்ள பிரபலமான தலைவர்களில் ஒருவராக உள்ளார். இவர் ஐநா சபையில் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றியவர். தற்போது டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியில் செயல்பட்டு வருகிறார். கடந்த அதிபர் தேர்தலில் நிக்கி ஹேலே குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக முடிவு செய்தார். டிரம்புக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டார்.
குடியரசு கட்சிக்கான அதிபர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக நடந்த தேர்வில் டிரம்பும், நிக்கி ஹேலேவும் தான் ரேஸில் இருந்தனர். குடியரசு கட்சியில் டொனால்ட் டிரம்புக்கான ஆதரவு அதிகரித்த நிலையில் நிக்கி ஹேலே பின்னடைவை சந்தித்தார். இதனால் அவரால் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாமல் போனது.
நிக்கி ஹேலே தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா உறவு வலுவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதேவேளையில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்க்க வேண்டும் என்றால் அதன் அண்டை நாடான நம் நாடு மிகவும் முக்கியம் என்று பலமுறை அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தான் தற்போது இந்தியாவுக்கு டொனால்ட் டிரம்ப் வரி விதிப்பதையும் அவர் எதிர்த்துள்ளார்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications