Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியர்களுக்கு ஆப்பு வைத்த டிரம்ப்! அமெரிக்கரை கல்யாணமே பண்ணாலும் கிரீன் கார்டு ஈஸியா கிடைக்காது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் குடியேற்ற விசா விவகாரத்தில் முக்கிய மாற்றத்தை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் முகமை அறிவித்துள்ளது. குறிப்பாகத் திருமண அடிப்படையில் வழங்கப்படும் விசாக்களில் மோசடிகள் நடப்பதால் அது குறித்து மிகவும் கவனமாக ஆராய புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையான குடும்பங்களுக்கு மட்டுமே கிரீன் கார்டு அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அமெரிக்க விசா வழிமுறைகள் கடுமையாக்கப்பட்டே செல்கிறது. டிரம்ப் அதிபரானது முதல் இப்போது வரை 7 மாதங்களில் அமெரிக்க விசா முறை தலைகீழாக மாறியுள்ளது. அமெரிக்கா செல்ல விசா வாங்குவதே கஷ்டம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் குடும்ப உறவுகள் அடிப்படையில் வழங்கப்படும் விசாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

US Tightens Green Card Rules for Married Couples

அமெரிக்க குடியுரிமை

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் அடிவரவு சேவைகள் முகமை இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. திருமண அடிப்படையில் வழங்கப்படும் விசாக்களில் பல மோசடிகள் அரங்கேறுவதால் அதை ஆய்வு செய்ய இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்கள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.. தற்போது நிலுவையில் உள்ள மற்றும் புதிதாகத் தாக்கல் செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் இவை பொருந்தும்.

என்ன காரணம்

இது குறித்து அமெரிக்கக் குடியுரிமை முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மோசடியான அல்லது தகுதியற்ற குடும்ப அடிப்படையிலான குடியேற்ற விசா விண்ணப்பங்கள், சட்டபூர்வ நிரந்தர குடியுரிமை (LPR) பெறுவதற்கான குடும்ப அடிப்படையிலான வழிகள் மீதான நம்பிக்கையை அழிக்கிறது. மேலும், அமெரிக்காவில் குடும்ப ஒற்றுமையையும் பலவீனப்படுத்துகின்றன. இதுபோல இருக்கும் வெளிநாட்டினரைக் கண்டறிந்து, அவர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றி அமெரிக்கர்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்" என்றார்.

வழிகாட்டுதல்கள் என்ன

  • திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் கடுமையான ஆவண சரிபார்ப்பு நடைமுறைகளை உறுதி செய்கிறது.
  • குடும்ப அடிப்படையிலான விண்ணப்பங்களுக்கான தகுதிச் சரிபார்ப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
  • உண்மையான திருமணங்களை நிரூபிக்கப் புகைப்படங்கள், நிதி ஆவணங்கள் மற்றும் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் வாக்குமூலங்கள் போன்ற ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
  • தம்பதிகளுக்குக் கட்டாய நேர்முகத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது அவர்கள் உறவு குறித்துத் தெரிந்து கொள்ள உதவும்.
  • ஒரே ஸ்பான்சரால் அல்லது ஒரே பயனாளிக்காகத் தாக்கல் செய்யப்பட்ட பல விண்ணப்பங்கள் உட்பட, முந்தைய விண்ணப்பங்களின் மறுஆய்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  • குறிப்பாக, H-1B போன்ற பிற விசாக்களில் அமெரிக்காவில் உள்ளவர்கள் திருமணத்தின் மூலம் நிலை மாற்றத்தை நாடும்போது, அவர்களின் வரலாறு தீவிரமாக ஆராயப்படும்.
  • கிரீன் கார்டு விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட நபர் தகுதியற்றவராக அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவராகக் கண்டறியப்பட்டால், அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்,
  • குடும்ப அடிப்படையிலான விசா கிடைப்பது மட்டும் ஒருவர் அமெரிக்காவில் நிரந்தமாகத் தங்கும் உரிமையைக் கொடுக்காது என்று அமெரிக்கக் குடியுரிமை முகமை தெரிவித்துள்ளது.
  • தகுதியான திருமணங்கள் மற்றும் குடும்ப உறவுகளைப் பரிசோதித்து, அவை உண்மையானவையாகவும் அனைத்து சட்டங்களுக்கும் இணங்குபவை என்பதை உறுதி செய்த பிறகே விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகள்

புதிய விதிமுறைகள்படி, ஒரு அமெரிக்கக் குடிமகன் ஒரு வெளிநாட்டுத் துணையை, உதாரணமாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை, ஸ்பான்சர் செய்தால், அந்த தம்பதியினர் இப்போது உண்மையாகவே ரிலெஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கூட்டு நிதி ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடமிருந்து கடிதங்களை சமர்ப்பிக்கலாம். சமீபத்தில் இதுபோன்ற மோசடி வழக்குகள் அமெரிக்காவில் அதிகரித்த நிலையில், இந்த விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+