இந்தியா மீது இன்னும் 100% வரியை போடுங்க! ஜி7க்கு பிரஷர் போடும் டிரம்ப்.. இன்று நடக்கும் முக்கிய மீட்டிங்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சமீப காலங்களாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக எடுத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்தியா மீது வரி விதிக்குமாறு சொல்லியிருந்தார். இதற்கிடையே ஜி7 அமைப்பும் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த மாதம் இந்தியா மீது 50% வரிகளை விதித்தார். ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதாலேயே உக்ரைன் போர் தொடர்வதாகச் சொல்லி அமெரிக்கா இந்த வரிகளை விதித்தது. இதன் மூலம் இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு வர்த்தகம் இதனால் 40% வரை குறையலாம் எனச் சொல்லப்படுகிறது.

US to Push G7 for 50 to 100 Tariffs on India and China Over Russian Oil Purchases says Reports

அமெரிக்கா வரி

இது ஒருதலைபட்சமான வரி என்றும் ரஷ்யப் பொருட்களை வாங்கும் சீனா மீது வரிகள் விதிக்கப்படாதது ஏன் என்றும் இந்தியா கேள்வி எழுப்பியது. அமெரிக்காவிலேயே கூட பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்தியா மீதான வரியைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும், டிரம்ப் இத்தோடு விடுவது போலத் தெரியவில்லை. அடுத்த கட்டமாக அவர் ஒட்டுமொத்த ஜி7 நாடுகளையும் இந்தியா மீது அதிக வரி விதிக்க அறிவுறுத்தியிருக்கிறார்.

ஜி7 அமைப்பு

அதாவது ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் இந்தியா மற்றும் சீனா மீது அதிக வரி விதிக்குமாறு G7 நாடுகளை டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவைப் பேச்சுவார்த்தைக்குக் கட்டாயப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்..இந்த கூடுதல் வரிகள் 50 முதல் 100% வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது கூடுதல் வரிகளை விதிக்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தி இருந்தது. இப்போது அடுத்தகட்டமாக ஒட்டுமொத்த ஜி7 நாடுகளும் டிரம்ப் தரப்பு பிரஷர் கொடுக்க ஆரம்பித்துள்ளது.

இன்று முக்கிய மீட்டிங்

ஜி7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய G7 நாடுகளைக் கொண்ட அமைப்பாகும். டிரம்ப் நிர்வாகத்தின் கோரிக்கை தொடர்பாக இன்று ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்கள் வரி தொடர்பாக விவாதிக்கவுள்ளனர். இப்போது ஜி7 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு கனடாவிடம் இருக்கிறது. இந்தியா சீனா மீதான வரி விதிப்பு தொடர்பாக இன்று ஆலோசனை நடத்துவதைக் கனடா உறுதி செய்துள்ளது.

அமெரிக்கா சொல்வது என்ன

இது குறித்து அமெரிக்க டிரஷரி செய்தி தொடர்பாளர் கூறுகையில், "சீனாவும் இந்தியாவும் ரஷ்ய எண்ணெய்யை வாங்குகிறார்கள். இதுவே புதின் போரைத் தொடர நிதியளித்து வருகிறது. அப்பாவி உக்ரைன் மக்கள் கொல்லப்படவும் இது காரணமாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளுக்கு நாங்கள் இந்த வாரத் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தினோம். தங்கள் சொந்த மண்ணில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் தீவிரமாக இருந்தால், எங்களுடன் இணைந்து கூடுதல் வரிகளை விதிக்க வேண்டும். போர் முடிவடைந்தவுடன் இந்த வரிகள் ரத்து செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

அதேநேரம் இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் கச்சா எண்ணெய் தொடர்பாக எந்தவொரு வரியையும் கூடுதலாக விதிக்கவில்லை. இந்த சூழலில் தான் இந்தியா மீது ஜி7 நாடுகளும் கூட கூடுதல் வரிகளை விதிக்க வேண்டும் என டிரம்ப் தரப்பு வலியுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+