மனசாட்சி இடம் கொடுக்கல.. ஈரான் போரால் டிரம்புக்கு எகிறும் பிரஷர்.. அமெரிக்க டாப் அதிகாரி ரஜினாமா
வாஷிங்டன்: ஈரான் மீதான போரை மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது என்று அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தலைவர் ஜோஷப் கென்னட் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவுக்கு உடனடியாக எந்த அச்சுறுத்தலும் ஈரானிடம் இருந்து இல்லை. இஸ்ரேல் அழுத்தத்தின் பேரிலேயே டிரம்ப் இந்த போரை தொடர்ந்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் இன்று 18-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், எண்ணைய் உள்கட்டமைப்புகளை ஈரான் தாக்கி வருகிறது.

டொனால்டு டிரம்ப் கோரிக்கை
அதேபோல ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் பாதிக்கப்பட்ட நாடுகள், போர்க்கப்பலை அனுப்ப வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்தார்.
ஆனால் டிரம்பின் இந்த கோரிக்கையை எந்த நாடும் ஏற்காததால் விரக்தி அடைந்தார். இதையடுத்து டிரம்ப் கூறுகையில், ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு விவகாரத்தில் எங்களுக்கு உதவ யாரும் தேவையில்லை. நாங்கள் உலகின் வலிமையான நாடு. உலகில் உள்ள நாடுகளிலேயே மிகவும் வலிமையான ராணுவத்தை நாங்கள் கொண்டுள்ளோம்.
பதவியை ராஜினாமா செய்தார்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உதவுவதற்கு உலக நாடுகள் போதிய ஆர்வம் காட்ட மறுக்கிறது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களால் நான் திடுக்கிட்டு போனேன். ஈரான் இவ்வளவு வலியமாக தாக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஈரான் தற்போது தனது ராணுவ வலிமையை இழந்து வருகிறது" என்று கூறினார்.
இது ஒருபக்கம் இருக்க, ஈரான் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்த நாட்டிலும் எதிர்ப்பை சந்தித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தலைவரான ஜோஷப் கெண்ட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்த விவகாரம் தொடர்பாக தனது பதவியை விட்டு விலகியுள்ளார் ஜோஷப் கென்னட். அமெரிக்காவுக்கு உடனடியாக எந்த அச்சுறுத்தலும் ஈரானிடம் இருந்து இல்லை. இஸ்ரேல் அழுத்தத்தின் பேரிலேயே டிரம்ப் இந்த போரை தொடர்ந்துள்ளார். ஈரான் மீதான போரை மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு மீது அமெரிக்கா போர் தொடுப்பது உயிர்களையும் அமெரிக்கவில் வளத்தையும்தான் வீணடிகும் என்று டிரம்புக்கு ஜூன் 2025 வரை தெரியும். இஸ்ரேலின் சீனியர் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஊடகங்களில் "செல்வாக்கு வாய்ந்த சிலர்" இணைந்து, "தவறான பிரசாரம் செய்து திட்டமிட்டு போர் ஆதரவு கருத்துகளை பரப்பி, ஈரானுக்கு எதிரான போரை தூண்ட முயன்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் சிந்தித்து பார்க்க வேண்டும்
நாம் ஈரானில் என்ன செய்கிறோம், அதை யாருக்காக செய்கிறோம் என்பதை டிரம்ப் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இப்போது துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நீங்கள் இந்த பாதையை மாற்றி, நாட்டிற்கு ஒரு புதிய திசையை அமைக்கலாம். இல்லையெனில், நாம் மேலும் வீழ்ச்சிக்கும் குழப்பத்திற்கும் இழுக்கப்பட அனுமதிக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் உங்கள் கைகளில்தான் உள்ளது என்றும் ஜான் கென்னட் என்று கூறியுள்ளார்.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications