உக்ரைன் விவகாரம்: சூப்பர்ங்க! இதை வரவேற்கிறோம்.. பிரதமர் மோடியை பாராட்டி தள்ளிய அமெரிக்கா
வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று பேசிய நிலையில், அமெரிக்கா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. கடந்த 10 மாதங்களை கடந்து இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியிருந்தாலும் ரஷ்யா நினைத்த அளவுக்கு இந்த போரில் முன்னேற முடியவில்லை.

உக்ரைனில் போர் பதற்றம்
முடிவே இல்லாமல் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யா கடந்த சில நாட்களாக உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பகுதிகளிலும் ரஷ்யாவின் தீவிர தாக்குதல் நடைபெற்று வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒருநாளில் மட்டும் ஏவுகணைகளை மழை போல ரஷ்ய படைகள் வீசின. இதனால், உக்ரைனில் போர் பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இருநாடுகளுக்கு இடையேயான ராணுவம்
இத்தகைய சூழலில், ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது ஜி 20 நாடுகள் அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருவது குறித்தும் இந்தியாவின் முதன்மையான பணிகள் குறித்தும் புதினிடம் பேசினர். இருநாடுகளுக்கு இடையேயான ராணுவம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

அமெரிக்கா வரவேற்பு
இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் மீதான போர் விவகாரம் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழிமுறைகள் மூலமே போருக்கு தீர்வு காண வேண்டும் என்றும் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்த நிலையில், உக்ரைன் போர் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பேசிய பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் வேதந்த் படேல் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது வேதந்த் படேல் கூறியதாவது:-

சொந்த முடிவை மேற்கொள்ளும்
பிரதமர் மோடியின் கருத்துக்களை வரவேற்கிறோம். அவரது வார்த்தைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். பிற நாடுகள் ரஷ்யாவுடனான உறவில் தங்கள் சொந்த முடிவை மேற்கொள்ளும். போரினால் ஏற்படும் தாக்கங்களின் தீவிரத்தை குறைக்க பிற நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்" என்றார். முன்னதாக இந்த மாத செப்டம்பரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இந்தியாவின் நிலைப்பாடு
அப்போது, புதினிடம், இன்றைய காலம் போருக்கானது அல்ல என்று தனது வலுவான வாதத்தை முன்வைத்து இருந்தார். மேலும், போரினால் ஏற்பட்டுள்ள உணவு, எரிபொருள், பாதுகாப்பு மற்றுங்கள் உரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றியும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்பு குறித்தும் வேதாந்த் படேலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வேதேந்த் படேல் மேற்கண்ட பதிலை அளித்தார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications