“அட்றா சக்க”.. ஜாதி பாகுபாடுக்கு தடை! வரலாறில் இடம்பிடித்த அமெரிக்க நகரம் -இந்திய பெண் வம்சாவளி மாஸ்
அமெரிக்காவிலேயே முதல் முறையாக ஜாதிய பாகுபாடுகளுக்கு அந்நாட்டின் சியாட்டில் நகரத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்: இந்தியாவைபோல் அமெரிக்காவிலும் அங்கு வாழும் இந்திய வம்சாவளிகள் மற்றும் இந்திய பணியாளர்கள் மத்தியில் ஜாதியை பாகுபாடுகள் தொடர்ந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்த நிலையில், அமெரிக்காவிலேயே முதல் முறையாக ஜாதிய பாகுபாடுகளுக்கு அந்நாட்டின் சியாட்டில் நகரத்தில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக அழிக்க முடியாத விஷமாக வேறூன்றி இருக்கிறது ஜாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு. அரசியல், கல்வி, விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும், அனைத்து பகுதிகளிலும் ஜாதிய கொடுமை தலைவிரித்தாடுகிறது.
பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் இந்த மோசமான நடைமுறையை படித்தவர்களும் பின்பற்றி வருவதுதான் வேதனை. நாட்டில் நிகழும் பல்வேறு மோதல்களுக்கும் பிரச்சனைகளுக்கு வேறாக இருப்பது இந்த ஜாதிதான்.

ஜாதி கொடுமைகள்
தந்தை பெரியார், அம்பேத்கர், அயோதிதாசர், பிர்சா முண்டா, பூலே,
அறிஞர் அண்ணா என பல தலைவர்கள் போராடினர். ஒடஒதுக்கீடு, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்டவற்றால் தமிழ்நாட்டிலும் ஓரளவு ஜாதி கொடுமைகள் குறைந்தாலும் முழுமையாக அது நிற்கவில்லை. வட இந்தியாவில் இந்த நிலை மோசம்.

வெளிநாடுகளிலும் ஜாதி
இந்தியாவில்தான் இப்படி என்றால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, வளைகுடா நாடுகளுக்கு சென்றும் ஜாதியை தூக்கிபிடித்துக் கொண்டு நிற்கிறார்கள். அங்கே தங்கள் ஜாதி பெயரில் அமைப்பை தொடங்கி அதை வளர்த்து வருகிறார்கள். கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியர்கள் தலைமையேற்று பெருமை தேடி தருகிறார்கள்.

அமெரிக்காவில் ஜாதி பாகுபாடு
அமெரிக்க துணை அதிபர், பிரட்டன் பிரதமர் ஆகியோர் இந்திய வம்சாவளிகள் என்று நாம் பெருமை அடைகிறோம். அதே நேரம் அங்குள்ள இந்தியர்களே ஜாதியை தூக்கிப்பிடித்து நாட்டின் பெயரையும் கெடுத்து வருகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை அங்கு பணிபுரியும் இந்த உயர்சாதியினர் ஜாதி ரீதியாக ஒடுக்குவதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

கூகுளில் ஜாதி
கடந்த ஆண்டு கூகுள் நிகழ்வில் தலித் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் தேன்மொழி சௌந்தரராஜன் உரையாற்ற சில ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டது சர்ச்சைக்கு உள்ளானது. இதனை கண்டித்து அந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்த கூகுள் நியூசின் மூத்த மேலாளர் தனுஜா குப்தா ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

சியாட்டில் நகரம்
இப்படி அமெரிக்காவிலும் ஜாதியை ஏற்றத்தாழ்வுகள் தலைவிரித்து ஆட தொடங்கி இருக்கும் சூழலில்தான், அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது அமெரிக்காவின் சியாட்டில் நகரம். ஆம், ஜாதியை ஏற்றத்தாழ்வுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம்தான் அது.

ஜாதி பாகுபாட்டுக்கு தடை
அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளியும், சியாட்டில் நகர கவுன்சில் அதிகாரியுமான சஷ்மா சாவந்த், சியாட்டில் நகரத்தில் ஜாதிய ஏற்றத்தாழ்வுக்கு தடை விதிக்கும் அவரச சட்டத்தை முன்வைத்து இருந்தார். இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதல் தெரிவித்ததை தொடர்ந்து ஜாதி ஏற்றத்தாழ்வுக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்திய வம்சாவளி
இதுகுறித்து பேசிய சஷ்மா சாவந்த், "நமது இயக்கம் அமெரிக்காவிலேயே முதல் முறையாக சியாட்டில் நகரத்தில் ஜாதி பாகுபாடுகளுக்கு தடை விதித்து இருக்கிறது. நாடு முழுவதும் இந்த வெற்றியை பரப்புவதற்கு ஒரு இயக்கத்தை உருவாக்கிட வேண்டும்." என்றார். இந்த தடையை தொடர்ந்து அமெரிக்காவின் மற்ற நகரங்களிலும் ஜாதி பாகுபாட்டுக்கு தடை விதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications