மரண அடி வாங்கும் பங்குச்சந்தைகள்.. "பார்க்கவே அழகா இருக்கு!" டிரம்ப் சொன்ன வார்த்தை.. இது ஓவர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த புதன்கிழமை ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். டிரம்பின் இந்த ரெசிப்ரோக்கல் வரி சர்வதேச அளவில் பதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆசிய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்து வருகிறது. ஆனாலும் தனது நடவடிக்கை சரி என்றே சொல்லி வரும் டிரம்ப், அமெரிக்க வரி என்பது பார்க்கவே அழகான விஷயம் என்றும் கூறியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் உலக நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். இது சர்வதேச வர்த்தகத்தை பாதிப்பதாக இருக்கிறது. அவர் புதன்கிழமை வரியை அறிவித்த நிலையில், அடுத்த இரு நாட்கள் பங்குச்சந்தைகள் சரிந்தன.

வரலாறு காணாத அளவுக்கு சரியும் பங்குச்சந்தைகள்
குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தை 5%க்கு மேல் சரிந்தன. அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவுக்கு சரிய தொடங்கியுள்ளன. ஜப்பான், தைவான் நாடுகளின் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகம் தொடங்கியது முதலே படுவேகமாக சரிந்து வருகிறது. இது அமெரிக்க சந்தையிலும் எதிரொலிக்கும் என அஞ்சப்படுகிறது. வல்லுநர்கள் பலரும் நிலைமையை சரி செய்ய டிரம்ப் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
50 நாடுகள் பேச்சுவார்த்தை
ஆனால், வெள்ளை மாளிகை தரப்போ டிரம்ப் செய்தது சரி என்றே கூறி வருகிறது. ரெசிப்ரோக்கல் வரி அறிவிக்கப்பட்ட பிறகு, 50க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவை அணுகி வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து வரும் நிலையில், அதன் பாதிப்பு பெரியளவில் இல்லை என்றே வெள்ளை மாளிகை அதிகாரிகள் தொடர்ந்து கூறினர்.
மந்த நிலை ஏற்படாது
இது தொடர்பாக அமெரிக்க டிரஷரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில், "பங்குச்சந்தை சரிகிறதா என கேட்டால்.. ஆம் சரிகிறது.. ஆனால், இதை பார்த்து அச்சப்பட எதுவும் இல்லை. மேலும், இதனால் பொருளாதார மந்தநிலை எல்லாம் ஏற்படாது. மார்க்கெட் புதிய முறைக்கு ஏற்ப தன்னை சரி செய்து வருகிறது அவ்வளவு தான். ரெசிப்ரோக்கல் வரி என்பது பக்காவாக திட்டமிட்டு அறிவிக்கப்பட்ட ஒன்றாகும்" என்றார்.
மேலும், ரெசிப்ரோக்கல் வரி அறிவிக்கப்பட்ட பிறகு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த 50க்கும் மேற்பட்ட நாடுகள் வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொண்டதாக மற்றொரு டிரம்பின் ஆலோசகரான கெவின் ஹாசெட் கூறினார். இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு நன்மையையே தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அழகான விஷயம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தள பக்கத்தில், "சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளுடன் நமக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி, வரி விதிப்புகள் மட்டுமே. இந்த வரிகள் இப்போது அமெரிக்காவிற்கு பல பில்லியன் டாலர்களை கொண்டு வருகின்றன.
அவை ஏற்கனவே நடைமுறையில் இருந்தன. ஆனால், பைடன் காலத்தில் அந்த வரிகள் நீக்கப்பட்டன. நாங்கள் அதை மாற்றப் போகிறோம், சீக்கிரமே மாற்றப் போகிறோம். அமெரிக்காவுக்காக விதிப்பது என்பது அழகான விஷயம். அதை மக்களும் உணர்வார்கள்" என்று பதிவிட்டுள்ளார். அதாவது நிலைமையை சரி செய்ய டிரம்ப் உடனடியாக ஏதாவது அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கும்போதிலும், டிரம்ப் அதுபோல எதையும் செய்ய மாட்டார் என்றே தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications