மெக் டொனால்ட்’ஸ் சீருடையில் கமலா ஹாரிஸ்.. வைரலான போட்டோ.. அமெரிக்காவில் வெடித்துக் கிளம்பிய விவாதம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கமலா ஹாரிஸ், மெக் டொனால்ட்ஸ் சீருடை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. இது போட்டோ ஷாப் என டிரம்பின் குடியரசு கட்சியினர் விமர்சித்தனர்.
அமெரிக்காவில் அடுத்த வாரம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸுக்கு இடையிலான போட்டி மிகவும் கடுமையானதாக மாறியுள்ளது. இருவரும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனது தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக டொனால்ட் டிரம்ப் பிலடெல்பியாவில் உள்ள மெக் டொனால்ட்ஸ் உணவகத்துக்குச் சென்று உணவு சமைத்தார் . திடீரென சமையல் செய்யும் பகுதிக்கு சென்ற அவர் உருளைக்கிழங்கை வைத்து தயாரிக்கப்படும் ஃபிரென்ச் ஃபிரைஸ் டிஷ்ஷை உற்சாகமாக சமைக்க தொடங்கினார்.
பின்னர் அதனை அட்டைப் பெட்டியில் அடைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவர் விநியோகம் செய்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் டிரம்ப் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். மெக் டொனால்ட்ஸ் நிர்வாகியிடம், எனக்கு வேலை வேண்டும். எனக்கு மெக் டொனால்ட்ஸ் கடையில் வேலை செய்ய வேண்டும் என்பது ஆசை என்று டிரம்ப் கேட்கிறார். அதன் பின்னர் பிரெஞ்ச் ஃபிரைஸ் தயாரித்து, வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்து வாக்கு சேகரித்தார். அவரைக் காண ஆயிரக் கணக்கானோர் அங்கு திரண்டு வந்திருந்தனர்.

கமலா ஹாரிஸ் 1983ஆம் ஆண்டு மெக் டொனால்ட்ஸில் வேலை பார்த்ததாக அவரது பிரச்சார குழு கூறியிருந்தது. இதனையடுத்தே, டொனால்ட் டிரம்பும் மெக் டொனால்ட்ஸில் வேலை செய்து, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் தயாரித்துள்ளார். அதேசமயம், கமலா ஹாரிஸ் மெக் டொனால்ட்ஸில் வேலையே பார்க்கவில்லை எனவும் டிரம்ப் பேசி இருந்தார்.
நாங்கள் மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்ததில், கமலா ஹாரிஸ் அங்கு பணிபுரிந்ததாக எந்தப் பதிவும் இல்லை, அவர் பொய் சொல்கிறார் எனக் கூறி இருந்தார் டிரம்ப். ஆனால், டொனால்ட் டிரம்ப் கூறுவதுதான் பொய் என்று கமலா ஹாரிஸின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், கமலா ஹாரிஸ், மெக் டொனால்ட்ஸில் வேலை செய்தபோது எடுத்த புகைப்படம் என ஒரு படம் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் இந்தப் புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என குடியரசு கட்சியினர் விமர்சித்தனர். இந்தப் படம் உண்மையான மெக்டொனால்ட் ஊழியர் புகைப்படத்தில் இருந்து ஊழியரின் முகம் மற்றும் போட்டோஷாப் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என அவர்கள் குற்றம்சாட்டினர்.
கமலா ஹாரிஸ் மெக் டொனால்ட்ஸில் வேலை செய்தது பற்றிய பதிவுகள் எதுவும் இல்லை என்பது உண்மைதான் என்று மெக் டொனால்டு தரப்பு கூறியுள்ளது. ஆனால், கமலா ஹாரிஸ் மெக்டொனால்டில் வேலை செய்யவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எங்கள் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் பற்றிய எல்லா பதிவுகளும் எங்களிடம் இல்லை. எனினும் முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரின் அன்பான நினைவுகளைக் கேட்டு பெருமிதம் கொள்கிறோம் என மெக் டொனால்ட்ஸ் தெரிவித்துள்ளது.
-
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications