வைரஸ் பாதித்த குரங்குகள் தப்பியோட்டம்.. பொதுமக்களுக்கு அலர்ட்! அச்சத்தில் அமெரிக்கா
வாஷிங்டன்: லூசியானா மாகாணத்தின் துலேன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆய்வகக் குரங்குகளை ஏற்றி சென்ற வாகனம் ஒன்று, மிஸ்ஸிசிப்பி நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியது. இதனால் இந்த வாகனத்திலிருந்த குரங்குகள் தப்பி சென்றிருக்கின்றன.
இந்த குரங்குகள் வைரஸ் பாதித்தவை என்பதால், அது மற்ற உயிர்களை கடித்து அதன் மூலம் வைரஸ் பரவலாம் என்று அச்சம் எழுந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மற்ற குரங்கு வகைகளுடன் ஒப்பிடுகையில், ரீசஸ் வகை குரங்குகள் மனித மரபணு அமைப்புடன் பெரிய அளவில் ஒத்து போகிறது. எனவே இந்த குரங்குகளை கொண்டு தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் துலேன் பல்கலைக்கழகத்தில் இருந்து மற்றொரு ஆய்வகத்திற்கு இந்த குரங்குகளை விஞ்ஞானிகள் கொண்டு சென்றனர். இதில் இருந்த ஒவ்வொரு குரங்கும் சுமார் 18 கிலோ அளவுக்கு எடை கொண்டது. இந்த குரங்குகள் மனிதர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துக்கொள்ளக்கூடியவை.
இந்நிலையில் இந்த குரங்குகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதால் அனைத்து குரங்குகளும் எஸ்கேப் ஆகியிருக்கின்றன. இந்த குரங்குகள் கோவிட் 19 மற்றும் ஹெபடைடிஸ் சி போன்ற வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மனிதர மரபணு அமைப்புடன் இந்த குரங்குகள் ஒத்து போவதால் இதை வைத்து விஞ்ஞானிகள் தொடர் ஆய்வை மேற்கொண்டிருக்கின்றனர். எனவே இந்த குரங்கை பார்த்தால், அதை சீண்டாமல் தள்ளி இருக்க வேண்டும் என்று காவல்துறை எச்சரித்திருந்தது. மட்டுமல்லாது உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தது.
வைரஸ் பாதிக்கப்பட்ட குரங்குகள் தப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரு குரங்கை தவிர மற்ற குரங்குகள் அனைத்தும் கொல்லப்பட்டிருக்கின்றன. தப்பித்த ஒரே ஒரு குரங்கை தேடும் பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன.
ஆய்வுதுறை வரலாற்றில் இந்த குரங்குகள் நமக்கு பல வழிகளில் உதவியிருக்கிறது. அதாவது 1948ம் ஆண்டு அமெரிக்காவால் முதன்முறையாக இந்த வகை குரங்கு ஒன்று விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்படி நாம் இந்த குரங்குகளை நாம் ஆய்வுக்கு பயன்படுத்தியிருக்கிறோம்.
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications