இந்து என்பதால் இனவெறி பாகுபாடு.. சமூக வலைதளங்களை ‛டெலிட்' செய்த விவேக் ராமசாமி.. அமெரிக்காவில் ஷாக்
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி டொனால்ட் டிரம்ப்பின் குடியரசு கட்சி சார்பில் ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தான் இந்திய வம்சாவளி மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இனவெறி சார்ந்த கருத்துகளை அவர் சமூக வலைதளங்களில் எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதள செயலிகளை அவர் ‛டெலிட்' செய்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் உள்ளார். இவர் குடியரசு கட்சியை சேர்ந்தவர். இவரது கட்சியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி செயல்பட்டு வருகிறார். 2024ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பளராக போட்டியிட விவேக் ராமசாமி முயன்றார்.

அதன்பிறகு அவர் பின்வாங்கினார். இதையடுத்து டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டொனால்ட் டிரம்புக்கும், விவேக் ராமசாமிக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இதனால் எலான் மஸ்க் உடன் விவேக் ராமசாமிக்கு DOGE நிர்வாகியாக அறிவித்தார். ஆனால் விவேக் ராமசாமி அதனை விரும்பாமல் வெளியே வந்தார்.
இதன் அடுத்தக்கட்டமாக விவேக் ராமசாமி அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மகாணத்தின் ஆளுநர் தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளார். இதற்கான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். ஓஹியோ மாகாணத்தின் ஆளுநர் தேர்தல் 2026ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு ஓராண்டுக்கு முன்பே வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும். அதன்படி டொனால்ட் டிரம்ப், விவேக் ராமசாமியை வேட்பாளராக அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் விவேக் ராமசாமி வெற்றி பெறும் பட்சத்தில் 2027 ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி ஓஹியோவின் ஆளுநராக பதவியேற்பார்.
இந்நிலையில் தான் விவேக் ராமசாமி இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளம் உள்ளிட்டவற்றில் இருந்து விலகி உள்ளார். ‛வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பிரபல நாளிதழில் அவர் எழுதிய கட்டுரையில் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ம் தேதியில் இருந்து எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை செல்போனில் இருந்து நீக்கி உள்ளேன். தனிப்பட்ட முறையில் நான் அதனை இனி பயன்படுத்த போவது இல்லை. ஆனால் எனது பிரசார குழு வழக்கம்போல் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்.
சமூக வலைதள கருத்துகள் வெளிநாட்டு சக்திகளாலும், Bot உதவியுடன் உருவாக்கப்படுகின்றன. இதனால் மக்களின் உண்மை மனநிலையை அறிந்து கொள்ள முடிவது இல்லை.இருப்பினும் ஓஹியோ மாகாணத்தில் உள்ள 88 மாவட்டங்களில் நான் வாக்காளர்களை சந்தித்தேன். அவர்கள் என்னிடம் எந்த பாரபட்சமான கருத்துகளையும் தெரிவிக்கவில்லை'' என்றார்.
அதாவது, விவேக் ராமசாமி இந்திய வம்சாவளி மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் பலமுறை விமர்சனம் செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பலரும் அவரை குறிவைத்து இனவெறி கருத்துகளை தெரிவித்தனர். இதனை மறைமுகமாக குறிப்பிட்டு தான் விவேக் ராமசாமி இப்படி தெரிவித்துள்ளார்.
-
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம்












Click it and Unblock the Notifications