"இவர்தான் சரியான தேர்வு" டிரெண்டாகும் விவேக் ராமசாமியின் பழைய வீடியோ! என்ன சொல்லி இருக்காரு பாருங்க
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப், தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பை அளித்துள்ளார். இதற்கிடையே உயர்நிலைப் பள்ளி பட்டம் பெறும் போது விவேக் ராமசாமி ஆற்றிய உரை இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 18 வயதில் அவர் ஆற்றும் உரையைப் பார்க்கும் பலரும் இவருக்குச் சரியான பொறுப்பையே டிரம்ப் கொடுத்துள்ளதாகப் பாராட்டி வருகிறார்கள்.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தேர்தலில் வென்ற டிரம்ப் இப்போது தனது நிர்வாகத்தில் இருப்போரைத் தேர்வு செய்து வருகிறார். இன்னும் சில நாட்களில் இந்த பணிகள் முடியும் எனத் தெரிகிறது.

அதில் விவேக் ராமசாமி மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு அரசு செயல்திறன் அதாவது department of government efficiency துறையைத் தலைமையேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய வீடியோ: இதற்கிடையே விவேக் ராமசாமியின் பழைய வீடியோ ஒன்று இப்போது டிரெண்டாகி வருகிறது. 18 வயதில் உயர்நிலைப் பள்ளி பட்டம் பெறும்போது அவர் ஆற்றிய உரை குறித்த வீடியோ இப்போது பரவி வருகிறது. செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் மாணவனாக இருந்த விவேக் ராமசாமி
அந்த வீடியோவில், விவேக் ராமசாமி தனது பள்ளிப் படிப்பு குறித்து விரிவாகப் பேசுகிறார். அதில் அவர், "எனது உயர்நிலை படிப்பு முழுக்க ரேஸ் போலவே இருந்தது. இறுதியாக முடிக்கும் போது சற்று பிரேக் எடுக்க விரும்புகிறேன்.. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்" என்கிறார். அந்த வயதிலேயே முதிர்ச்சியடைந்த நபர் போல விவேக் பேசியிருப்பதாகப் பலரும் பாராட்டுகிறார்கள்.
தெளிவான பேச்சு: தொடர்ந்து பேசிய அவர், "ஆசிரியர்கள், தோழர்கள் என அனைவரையும் 2003 செயின்ட் எக்ஸ் பட்டமளிப்பு விழாவிற்கு வரவேற்கிறேன். நாம் சென்று சேரும் இலக்கை காட்டிலும் பயணம் சிறந்தது என்பார்கள். அதேபோலத் தான் இப்போது எனக்கும் இருக்கிறது. இந்த பயணம் மிகச் சிறப்பாக இருந்துள்ளது. பள்ளிப் படிப்பு முடிந்துள்ளது என்ற போதிலும் வாழ்க்கை இப்போது தான் தொடங்குகிறது. வாழ்க்கையில் அடுத்து என்னவாக போகிறோம் என்பதை முடிவு செய்யப் போகும் தருணமாக இது இருக்கிறது.
எனது இந்த 2003 பேட்ஜ் பல சாதனைகளைப் படைத்து இருக்கிறது. கால்பந்து வெற்றி, நீச்சல் போட்டியில் மாகாண சாம்பியன்ஷிப் எனப் பல சாதனைகளை வைத்து இருக்கிறோம். அதேநேரம் தனிப்பட்ட முறையில் புனித சேவியர் பள்ளியில் கத்தோலிக்கரல்லாத இந்துவாக இருந்தும் எனது வகுப்பை வழிநடத்தியது எனக்கு நினைவில் நிற்கும்" என்று அவர் சொல்வதோடு அந்த வீடியோ முடிகிறது.
நெட்டிசன்கள்: 18 வயதிலேயே விவேக் ராமசாமி இந்தளவுக்குத் தெளிவாகவும் ஒரு விஷன் உடனும் பேசுவதாகப் பலரும் பாராட்டி வருகிறார்கள். அவரை மிகச் சரியாகவே டிரம்ப் தனது நிர்வாகத்தில் சேர்த்து இருக்கிறார் என்றும் விவேக் ராமசாமியின் பங்களிப்பு முக்கியமானதாகவே இருக்கும் என்றும் நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.
விவேக் ராமசாமியின் பெற்றோர் 1970களில் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர். அவர் சின்சினாட்டியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அங்குள்ள ஆண்களுக்கான கத்தோலிக்க செயின்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் படித்த அவர் 2003இல் பள்ளிப் படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முதலில் விவேக் ராமசாமியும் விருப்பம் தெரிவித்து இருந்தார். இருப்பினும், போதிய ஆதரவைத் திரட்ட முடியாததால் அவர் அதிபர் ரேஸில் இருந்து விலகி டிரம்பிற்கு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications