Ali Khamenei: கமேனி கொல்லப்பட்டாரா? குண்டு மழையாக இறங்கி அடித்த இஸ்ரேல்.. ஈரான் சொல்வது என்ன?
தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் உச்ச தலைவரை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இஸ்ரேல் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டு இருக்கலாம் என்று இஸ்ரேலிய ஊடங்களில் செய்தி வெளியானது பரபரப்பை கிளப்பிய நிலையில், ஈரான் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் அதற்கான அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

3வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி
இந்த விவகாரத்தில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அருகே அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஈரான் மீது எந்த நேரத்திலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவி வந்தது. அமெரிக்காவுக்கு ஆதரவாக இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என்ற தகவல் வெளியானது.
அதேவேளையில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில் ஜெனீவாவில் நடந்த அமெரிக்கா - ஈரான் இடையேயான 3-வது சுற்று பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
சரமாரியாக குண்டுகளை வீசியது
இந்த நிலையில் இன்று ஈரான் தலைநகர் தெக்ரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. தெக்ரானின் பல இடங்களில் இன்று காலை பயங்கர குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன. அங்கு புகை மூட்டங்கள் எழும்பின.
இதனால் தெக்ரானில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பீதியடைந்த பொதுமக்கள் அலறியடித்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். தெஹ்ரான் முழுவதும் 30 இடங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தின. தெக்ரானுக்குள் அமெரிக்க போர் விமானங்கள் நுழைந்து சரமாரியாக குண்டுகளை வீசியது.
அலி கமேனி கொல்லபட்டதாக
குறிப் பாக உச்ச தலைவர் அய துல்லா அலி கமெனியின் வீடு, தலைமையகம், அதிபர் மாளிகை மற்றும் ஈரான் உளவுத்துறை கட்டிடம் ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகின. இதில் அந்த கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லபட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஈரான் வெளியுறவு அமைச்சர்
ஆனால், இதனை ஈரான் வெளியுறவு அமைச்சர் அயதுல்லா மறுத்துள்ளார். இஎஸ்ரேலின் சேனல் 12 வெளியிட்ட செய்தியில், 86 வயதான கமேனி கொல்லப்பட்டதற்கான அறிகுறிகள் அதிகரித்து இருப்பதாக கூறியது. இதைபின்பற்றி மற்ற செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டன.
எனினும், தகவல் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்ற எச்சரிக்கையுடன் இதனை வெளியிட்டன. ஆனால், இதனை மறுத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அர்கச்சி, எனக்கு தெரிந்தவரை கமேனி இன்னும் உயிருடன் தான் இருக்கிறர்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications