செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்? விவாதங்களை கிளப்பிய புகைப்படம்.. உண்மை இதுதான்! விஞ்ஞானிகள் ஷாக்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தின் துருவ பகுதியில் பனி கட்டி இருப்பதை போன்ற படங்களை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டிருந்தது. இந்த பனி கட்டிகளுக்கு கீழ் நீர் இருக்கலாம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், நாசா தற்போது புதிய விளக்கத்தை அளித்திருக்கிறது.
கடந்த 2018ம் ஆண்டு துருவ பகுதியில் பனி கட்டி இருக்கும் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டிருந்தது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் எனும் ஆர்பிட்டர் கருவி எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்தபோது, பனிக்கு அடியில் மிகவும் பிரகாசமான ரேடார் சிக்னலைக் கண்டறியப்பட்டது.

அதிக உப்புத்தன்மை கொண்ட திரவ நீர், ரேடார் சிக்னல்களைக் கண்ணாடியைப் போல வலுவாகப் பிரதிபலிக்கும் என்பதால், இது உப்புத் தண்ணீருடன் கூடிய நிலத்தடி ஏரியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் முதலில் நம்பினர்.
இந்நிலையில், அதிநவீன ரேடார் நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில், ஏரியாக இருக்கலாம் என கருதப்பட்ட இந்தப் பகுதி, பெரும்பாலும் பாறைகள் மற்றும் தூசியால் ஆனது என்பது தெரியவந்துள்ளது.
அதாவது தற்போது ரேடார் மூலம் 120 டிகிரி சுழற்சியுடன் கூடிய சிக்னல்கள் அனுப்பப்பட்டன. இந்த சிக்னல்கள், பனிகட்டிகளுக்கு உள்ளே இருப்பது நீர் கிடையாது என்பதையும், அது வெறும் பாறை என்பதையும் உறுதி செய்திருக்கிறது. இதன் மூலம் விஞ்ஞானிகள் சற்று பின்னடைவை சந்தித்திருக்கின்றனர். இருப்பினும், இந்த ஆய்வு செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை பற்றி ஆய்வு மேற்கொள்வதற்கான புதிய முறைகளை வெளிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீர் இருப்பதாக தவறாக கணிக்கப்பட்டதால், செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் இருக்கலாம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. இப்படி இருக்கையில் தற்போது விஞ்ஞானிகள் மறு ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications