'கவலை வேண்டாம்.. வெற்றி நமக்கு தான்..' 5 மாத அமைதிக்கு பிறகு.. திடீரென கிளம்பிய டிரம்ப்..முழு விவரம்
வாஷிங்டன்: சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிரம்ப், வரும் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வடக்கு கரோலினா மாகாணத்தில் குடியரசு கட்சி தான் வெல்லும் எனப் பேசியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்ட டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார்.
அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் தேர்தலில் தோல்வியடைவது கடந்த 20 ஆண்டுகளில் இது தான் முதல்முறையாகும்.

நாடாளுமன்ற வன்முறை
இருப்பினும், டிரம்ப் கடைசி வரை தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். தேர்தல் முடிவுகளை மாற்ற நீதிமன்ற கதவுகளையும் தட்டினார். ஆனால் முடிவுகளை மாற்ற இயலவில்லை. அவரது வன்முறை பேச்சு காரணமாக, கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஜோ பைடனை அதிபராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வில் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறை ஏற்பட்டது. அமெரிக்க ஜனநாயக வரலாற்றில் இது ஒரு கருப்பு நாளாகவே பார்க்கப்படுகிறது.

5 மாதங்கள் மாயம்
இதையடுத்து டிரம்ப் மீது பதவி நீக்க தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், குடியரசு கட்சியினரின் ஆதரவு டிரம்பிற்கு இருந்ததால், அந்த தீர்மானம் வெற்றி பெறவில்லை. இருப்பினும், கடந்த ஜனவரி 20ஆம் தேதி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய டிரம்ப், அதன் பிறகு எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமலேயே இருந்தார்.

வெல்வது நாம்தான்
இந்நிலையில், சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு வடக்கு கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற குடியரசு கட்சியின் மாநாட்டில் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "நாம் வடக்கு கரோலினாவில் ஜெயிக்க போவது உறுதி. அடுத்து நடைபெறும் தேர்தலில் வட கரோலினா மாகாணத்தில் மீண்டும் குடியரசு கட்சி கைப்பற்றுவது உறுதி. 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்காக நான் ஆவலாக உள்ளேன்"என்று டிரம்ப் கூறினார்.

சீனா காரணம்
மேலும், கொரோனா பரவலுக்குச் சீனா தான் காரணம் என்றும் சீனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளுக்கும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "அமெரிக்கா சீன பொருட்களுக்கு உடனடியாக 100% வரை வரியை அதிகரிக்க வேண்டும். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை ஈடு செய்யும் வகையில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து சீனாவிடம் இருந்து 10 டிரில்லியன் டாலரை நஷ்டஈடாகப் பெற வேண்டும்.

10 டிரில்லியன் டாலர்
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு உலக நாடுகளில் பொருளாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாகச் சீனாவுக்கு எந்த நாடும் கடன்பட்டிருக்கவில்லை என நாம் அதிகரிக்க வேண்டும். சீனா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 10 டிரில்லியன் டாலரை நஷ்டஈடு தர வேண்டும். சீனாவால் பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜைடன் - சீனா தொடர்பு
சீனாவுக்கு எதிராக அதிபர் ஜோ பைடன் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மாட்டார். ஏனென்றால், அவரும் அவரது குடும்பத்தினரும் சீனாவிடம் இருந்து கோடிக்கணக்கான டாலரைப் பெற்றுவிட்டனர். அமெரிக்க மக்களிடம் அவர் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். மிகப் பெரிய டெக் நிறுவனங்களும் போலி செய்தி நிறுவனங்களும் இது குறித்துப் பேச விரும்புவதில்லை" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications