விண்வெளியில் "அல்வா" கொடுக்கும் சுபன்ஷு சுக்லா! விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லும் உணவுகள் இவைதான்
வாஷிங்டன்: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா இன்று தனது விண்வெளி பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவரது ராக்கெட் பிற்பகல் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. இதற்கிடையே சுபன்ஷு சுக்லா விண்வெளிக்கு எடுத்துச் சென்றுள்ள உணவு குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியா கடந்த பல ஆண்டுகளாகவே விண்வெளி துறையில் தொடர்ச்சியாகப் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. உலகமே வியக்கும் வகையில் இஸ்ரோவின் சாதனைகள் இருந்து வருகிறது. இஸ்ரோவுக்கு முக்கிய மைல்கல்லாக இன்று சுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் செல்கிறார். ஆக்சியம் மிஷன் 4 திட்டம் மூலம் அவர் விண்வெளிக்குச் செல்கிறார்.

சுபன்ஷு சுக்லா
டிராகன் விண்கலம் ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பிற்பகல் 12.01 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அவர் 25 மணி நேரம் விண்வெளியில் பயணிக்க இருக்கிறார். சரியாக நாளை மாலை 4.30 மணிக்கு அவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்கிறார். இதற்கிடையே சுபன்ஷு சுக்லா இந்த பயணத்தில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துச் செல்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாம் சாதாரணமாக இங்குச் சாப்பிடும் எல்லா உணவுகளையும் விண்வெளியில் சாப்பிட முடியாது. பல ஆண்டு ஆய்வுக்குப் பிறகு விண்வெளி பயணத்திற்கு ஏற்ற உணவுகளை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். சுபன்ஷு சுக்லா உட்பட அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் இந்த உணவுகளே வழங்கப்படும்.
சுபன்ஷு சுக்லா உணவுகள்
அதேநேரம் சுபன்ஷு சுக்லா தனக்குப் பிடித்த சில உணவுகளைத் தனது சொந்த ஊரிலிருந்து எடுத்துச் செல்கிறார். இது தொடர்பான தகவல்களை அவர் விண்வெளிக்குச் செல்லும் முன்பு செய்தியாளர்களிடம் பேசும் போது பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "விண்வெளியில் சாப்பிடுவதற்கு நிறைய உணவு இருக்கும்.. ஆனால், எனக்குப் பிடித்த மாம்பழ ஜூஸ் (mango nectar), கேரட் அல்வா (கஜர் கா அல்வா), மற்றும் மூங் தால் அல்வா ஆகியவற்றை எடுத்துச் செல்வேன்" என்றார்.
என்ன காரணம்
விண்வெளியில் இருப்பது சாதாரணமான காரியம் இல்லை. நமது உடல் பிறந்தது முதலே பூமியில் இருக்கும் சூழலுக்குத் தகுந்தபடியே இருக்கிறது. திடீரென புவி ஈர்ப்பு விசை கூட இல்லாத விண்வெளிக்குச் செல்லும்போது அது முற்றிலும் புதிதாக இருக்கும். அதுபோன்ற நேரத்தில் உடலுக்குப் பிடித்த உணவு முக்கியம். இதன் காரணமாகவே சுக்லாவுக்கு பிடித்த சில உணவுகளும் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
மசாலாப் பொருட்கள்
உணவு இந்தளவுக்கு முக்கியம் என்றால் இந்தியா உணவுகளையே முழுமையாக எடுத்துச் சென்று இருக்கலாமே என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.. ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது இந்திய உணவுகளில் மசாலாப் பொருட்கள் அதிகம் இருப்பதால்... அவற்றை எடுத்துச் செல்ல அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்கிறார் அவரது சகோதரி சுசி சுக்லா. தீவிர ஆய்வுக்கு பிறகே சில வகை உணவுகளை மட்டுமே அனுமதித்ததாக சுசி சுக்லா கூறினார்.
மேலும், சுக்லா இந்த பயணத்தில் ஒரு சிறிய வெள்ளை பொம்மை உடன் எடுத்துச் சொல்கிறார். விண்கலம் சுற்றுப்பாதையை அடைந்ததும், பொம்மை மிதக்க ஆரம்பிக்கும்.. விண்கலம் ஈர்ப்பு விசை இல்லாத நிலையை அடைந்துவிட்டதை இது காட்டுகிறது.












Click it and Unblock the Notifications