"ஏலியன்களின் வருகையா.." அமெரிக்கா சுட்டு வீழ்த்திய மர்ம பொருள்! என்னவாக இருக்கலாம்! பகீர் காரணங்கள்
அமெரிக்காவில் பறந்த மர்மப் பொருள் என்னவாக இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்கா இன்று தனது வானில் பறந்த மர்மப் பொருள் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியுள்ளது. அது என்னவாக இருக்கும்... அமெரிக்கா ஏன் அதிரடியாக இந்த நடவடிக்கையில் இறங்கியது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மீது பறந்த சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சுட்டு வீழ்த்தியது. அந்த பலூனில் இருக்கும் கருவிகள் என்ன என்பது குறித்த விரிவான ஆய்வுகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இந்த பரபரப்பு ஓய்வதற்குள் இப்போது அதேபோல மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் அலாஸ்கா மீது பறந்து சென்ற மர்மப் பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இது உலகெங்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

மர்ம பொருள்
அமெரிக்க வான் பரப்பிற்குள் நுழைந்த அந்த கார் அளவு கொண்ட மர்மப் பொருளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் அறிவித்தது. இந்த மர்ம பொருள் முதன்முதலில் பிப்ரவரி 9ஆம் தேதி ரேடாரில் கண்டறியப்பட்டது.. இது ஒரு சிறிய காரின் அளவில் இருந்ததாக அமெரிக்க விமானப்படை பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் தெரிவித்தார். இது வடகிழக்கு திசையில் சுமார் 40,000 அடி உயரத்தில் பறந்து வந்துள்ளது. கடந்த வாரம் சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனை போல இது இல்லை என்றும் இதில் எந்தவொரு பேலோட்டும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
முதலில் அந்த மர்ம பொருளை அருகே விமானத்தில் சென்று ராணுவத்தினர் ஆய்வு செய்தனர். அவர்கள் அதிபர் பைடனிடம் அளித்த தகவல் அடிப்படையில், அதைச் சுட்டு வீழ்த்த அதிபர் பைடன் உத்தரவிட்டார். அதன்படி இரு எஃப் 22 ரக விமானங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவில் சுட்டு வீழ்த்தினர். அலாஸ்காவில் இருக்கும் உறைந்த ஆற்றில் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்த மர்ம பொருளின் பாகங்கள் விழுந்துள்ளது. அதன் பாகங்களை எடுத்து ஆய்வு செய்யும் முயற்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

விடை தெரியாத கேள்விகள்
சரி.. இந்த மர்ம பொருள் எங்கிருந்து வந்தது என்று பலருக்கும் கேள்வி எழலாம். உண்மையில் நமக்கு அதற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை. அது யாருக்குச் சொந்தமானது.. அது எப்படி இங்கு வந்தது.. அது என்ன செய்து கொண்டிருந்தது என்று யாருக்கும் எதுவும் துல்லியமாகத் தெரியவில்லை. அதன் பாகங்களைத் தீவிரமாக ஆய்வு செய்த பிறகே பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுவும் சீனாவின் பலூனாக இருக்குமோ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதை உறுதியாக சொல்ல முடியாது" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர். அதேபோல என்ன வேகத்தில் வந்தது என்பது குறித்த தகவல்களையும் அவர்கள் பகிரவில்லை.

அச்சுறுத்தல்
அமெரிக்க மீது பறந்த சீன பலூனை போல இல்லாமல், இந்த மர்மப் பொருள், அமெரிக்க விமானங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றே அதிகாரிகள் குறிப்பிட்டனர். சீன பலூன் சுமார் 60,000 அடி உயரத்தில் பறந்து நிலையில், இது சுமார் 40,000 அடி வரம்பிற்குள் பறந்துள்ளது. வானத்தில் எது கண்டறியப்பட்டாலும் விரிவான ஆய்வுக்கு பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சீன பலூனை சுட்டு வீழ்த்த பைடன் நிர்வாகம் அதிக காலம் எடுத்துக் கொண்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கேள்வி எழுப்பினர். எனவே, அரசியல் அழுத்தம் காரணமாக பைடன் நிர்வாகமே இப்படிச் செய்திருக்குமோ என்றும் சிலர் சந்தேகத்தைக் கிளப்புகின்றனர்.

காரணம் 1- எதிரி நாடுகள்
கடந்த வாரம் நடந்த சம்பவத்தால் பலருக்கும் இதுவும் சீனா, ரஷ்யா அல்லது மற்ற எதிரி நாடுகளின் வேலையாக இருக்கும் என்றே தோன்றும். ஏனென்றால் சீனா கடந்த 2017 முதலே இதுபோன்ற பலூன்களை அனுப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அலாஸ்காவிலும் எதிரி நாடுகள் தெரிந்து கொள்ளத் துடிக்கும் பல முக்கிய இடங்கள் இருக்கவே செய்கின்றனர். 9 அமெரிக்க ராணுவ தளங்கள், 18000 இராணுவ வீரர்கள், எண்ணெய் உள்கட்டமைப்பு, பல்வேறு ரேடார் எனப் பல முக்கிய கருவிகள் உள்ளன. எனவே, இது ஒரு காரணமாக இருக்கலாம்.

காரணம் 2- வானிலை ஆய்வு
மற்றொன்று இது அமெரிக்காவின் பலூனாகவே கூட இருக்கலாம். ஏனென்றால், ஆராய்ச்சியாளர்கள் ஆர்க்டிக் வானத்தில் ஆர்வமாக உள்ளனர். இதை அறிந்து கொள்ளத் தினசரி பல பலூன் உள்ளிட்ட ஆய்வு பொருட்கள் கொண்ட கருவிகளை வானத்திற்கு அனுப்பி வருகின்றனர். அதுபோன்ற ஒன்றைத் தவறுதலாக நினைத்துக் கூட அமெரிக்கா சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் கூறும் ஆய்வுகள் சற்று பகீர் கிளப்புவதாகவே உள்ளது.

காரணம் 3 - ஏலியன்கள்
அதாவது அமெரிக்கா ஏலியன்கள் பயன்படும் பறக்கும் தட்டு ஒன்றைச் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த கேலக்ஸியில் உயிரினங்கள் வாழக் கூடிய ஒரு பகுதியாகப் பூமி மட்டும் இருக்காது.. பூமியைப் போலவே வேறு கிரகங்களிலும் நிச்சயம் உயிரினங்கள் வாழும் என்பதே பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்து. இந்த ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கலாம் என்பது குறித்தும் அமெரிக்க ராணுவம் சில மாதங்களாக ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று அமெரிக்கச் சுட்டு வீழ்த்தியது அதவாகக் கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், அதற்கான வாய்ப்புகள் குறைவே.. எதுவாக இருந்தாலும் சில நாட்களில் உண்மை தெரிந்துவிடும்.
-
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications