400 அடி உயரம்! 100 பேருடன் செவ்வாய்க்கு பறக்கும் திறன்! மெகா ராக்கெட் ஸ்டார்ஷிப்.. வீழ்ந்தது எப்படி
வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை நடைபெற்ற நிலையில், அது தோல்வியில் முடிந்தது. இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் குறித்தும் அது ஏன் முக்கியம் என்பது குறித்தும் பார்க்கலாம்.
இன்று உலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராக்கெட் டெஸ்டிங்க் நடந்தது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட்டை உருவாக்கியிருந்தது. இதுதான் உலகிலேயே இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகப் பெரிய ராக்கெட் ஆகும்.

இதனால் இதன் டெஸ்டிங் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அமெரிக்க மெக்சிகோ எல்லையில் நடந்த இந்த ராக்கெட் சோதனையைக் காண அதிகப்படியான மக்கள் நேரிலேயே குவிந்திருந்தனர்.
ஸ்டார்ஷிப் ராக்கெட்: இருப்பினும், திட்டமிட்டபடி இந்த ராக்கெட் சோதனை நடைபெறவில்லை. ராக்கெட் கிளம்பிய சில நொடிகளிலேயே பூஸ்டர் தனியாகப் பிரிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதன்மூலம் உலகின் மிகப் பெரிய ராக்கெட்டின் சோதனை தோல்வியில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்டார்ஷிப் சோதனை ஏன் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இதன் சிறப்புகள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தான் இந்த பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. வரும் காலத்தில் விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை நடத்த இந்த ராக்கெட் பயன்படும் என்றே கருதப்பட்டது. சந்திரனுக்கும் செவ்வாய்க் கிரகத்திற்கும் மனிதர்களை அழைத்துச் செல்லும் இலக்கை கொண்டே இந்த மிகப்பெரிய மற்றும் வலிமையான ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக பெரிய ராக்கெட்.. எலான் மஸ்கின் ஸ்டார் ஷிப் நடுவானில் வெடித்து சிதறியது! என்ன நடந்தது?
பிரம்மாண்ட ராக்கெட்: சுமார் 400 அடி (120 மீட்டர்) உயரத்தில் மிகப் பிரம்மாண்டமான ராக்கெட்டாக இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் உள்ளது. துருப்பிடிக்காத எஃகு மூலம் கட்டப்பட்ட இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் மொத்தம் 33 இன்ஜென்களை கொண்டது. 16.7 மில்லியன் பவுண்டுகள் உந்தும் திறனைக் கொண்டுள்ளது. மீத்தேன்-எரிபொருளைக் கொண்ட, முதல்-நிலை எஞ்சின்களில் இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் ஜனவரியில் சோதனை செய்யப்பட்டது. அப்போது அது நன்றாகவே இருந்தது.
இதுவரை வடிவமைக்கப்பட்ட ராக்கெட்களில் மிகவும் வலிமையான ஒன்றாக ஸ்டார்ஷிப் ராக்கெட் இருக்கிறது. இந்த ஸ்டார்ஷிப் மூலம் 250 டன் எடையைக் கூட தூக்க முடியும். மேலும், செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்லும் போது அதிகபட்சம் 100 பேர் வரை இதில் பயணிக்கலாம். இதன் சாட்டிலைட் பகுதியில் ஆறு என்ஜின்கள் இருக்கிறது. இது 164 அடி (50 மீட்டர்) உயரமாகும்.. வரும் காலங்களில் சாட்டிலைட் அனுப்ப இந்த ராக்கெட்களை பயன்படுத்தவே எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
மிகவும் வலிமையானது: ஸ்டார்ஷிப் நாசா இதுவரை உருவாக்கிய அனைத்து ராக்கெட்களையும் விட மிக மிக வலிமையானது. இன்று நடந்த டெஸ்டிங் மொத்தம் 1.30 மணி நேரம் நடக்க இருந்தது. பூமியின் முழு சுற்றுப்பாதையில் சுற்ற இருந்தது. ஸ்டார்ஷிப் ஏவப்பட்ட மூன்று நிமிடங்களில் பூஸ்டர் பிரிந்து மெக்சிகோ வளைகுடாவில் விழ வேண்டும். இதுவே ஒர்ஜினல் திட்டம். ஆனால், திட்டமிட்டபடி பூஸ்டர் பிரியாததால் அதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே அது வெடித்துச் சிதறியது.
ஸ்டார்ஷிப் முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் அதன் செலவு வெகுவாக குறையும். ஆனால், டெஸ்டிங்கில் அது முற்றிலுமாக தோல்வியடைந்துள்ள நிலையில், அது மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.












Click it and Unblock the Notifications