ஈஸியாக பணக்காரராக எந்த நாடு பெஸ்ட் தெரியுமா.. இந்தியா எந்த இடம் தெரியுமா?
வாஷிங்டன்: பல தலைமுறைக்கான செல்வத்தைக் கட்டியெழுப்ப எந்த நாடுகள் சிறந்தவையாக இருக்கும் என்பது குறித்த லிஸ்டை ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் டாப் இடத்தை பிடித்துள்ள நிலையில், இந்தியாவின் நிலை சற்று மோசமாகவே இருக்கிறது.
பல தலைமுறை செல்வத்தைக் கட்டியெழுப்ப உலகின் சிறந்த நாடுகள் பட்டியலை ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டிற்கான பட்டியலை ஹென்லி & பார்ட்னர்ஸ் அமைப்பு இப்போது வெளியிட்டுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. சுவிட்சர்லாந்து 85 மார்க் பெற்று இந்த லிஸ்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்து: வருமானம் ஈட்டும் திறன், தொழில் சூழல், வேலை வாய்ப்புகள், நல்ல கல்வி, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் என மொத்தம் ஆறு விஷயங்களைக் கணக்கிட்டு இந்த மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதில் சுவிட்சர்லாந்து வருமானம் ஈட்டும் திறனில் 100 மார்க், தொழில் முன்னேற்றத்தில் 95 மார்க், வேலைவாய்ப்புகளில் 94 மார்க் பெற்றுள்ளது. வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் சுவிட்சர்லாந்து 75 மார்க் பெறும் நிலையில், கல்வியில் 72 மார்க் பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்திற்கு அடுத்து அமெரிக்கா 82 மதிப்பெண்கள் உடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வேலை வாய்ப்புகளில் அமெரிக்கா 94 மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், வருமானம் ஈட்டும் திறனில் 93 மதிப்பெண்களும், தொழில் முன்னேற்றத்தில் 86 மதிப்பெண்களும் வாழ்வாதாரத்தில் 68 மதிப்பெண்களும் பெற்றுள்ளது. தொடர்ந்து வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வியில் அமெரிக்கா 74 மதிப்பெண்கள் பெற்றுள்ளன.
அடுத்தடுத்த இடங்கள்: மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர் இருக்கிறது.. தொழில் முன்னேற்றத்தில் 66 மதிப்பெண்கள் பெற்றுள்ள சிங்கப்பூர், கல்வியில் 55 மதிப்பெண்கள், வாழ்வாதாரத்தில் 65 மதிப்பெண்கள், பொருளாதாரத்தில் 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது. வருமானம் ஈட்டும் திறனில் 66 மதிப்பெண்கள், தொழில் முன்னேற்றத்தில் 79 மதிப்பெண்கள், வேலை வாய்ப்புகளில் 84 மதிப்பெண்கள், கல்வியில் 73 மதிப்பெண்கள், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் 74 மதிப்பெண்களை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.
இதில் 5ஆவது இடத்தில் கனடா இருக்கிறது. வருமானம் ஈட்டும் திறனில் 67 மதிப்பெண்களைப் பெற்றுள்ள கனடா, தொழில் முன்னேற்றத்தில் 79 மதிப்பெண்களையும் கல்வியில் 71 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. அதேபோல பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் முறையே 73 மற்றும் 72 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. அதேநேரம் வேலைவாய்ப்பில் அது வெறும் 49 மதிப்பெண்களை மட்டுமே பெறுகிறது.
டாப் 5 நாடுகள்: ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது சுவிட்சர்லாந்து மொத்தமாக 85 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்கா (82 மதிப்பெண்கள்), சிங்கப்பூர் (79 மார்க்), ஆஸ்திரேலியா (75 மார்க்), கனடா (74 மார்க்), பிரிட்டன் (73 மார்க்) ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளது. தொடர்ந்து ஆஸ்திரியா (64 மார்க்). ஹாங்காங் (64 மார்க்), ஸ்பெயின் (63 மார்க்), ஐக்கிய அமீரகம் (63 மார்க்), இத்தாலி (63 மார்க்) ஆகிய நாடுகள் டாப் 10 நாடுகள் லிஸ்டில் இருக்கிறது.
இதில் இந்தியாவின் நிலை ரொம்பவே மோசமாக இருக்கிறது.. இந்தியாவின் மொத்த மதிப்பெண்கள் 32ஆக இருக்கிறது. வருமானம் ஈட்டும் திறனில் 30 மதிப்பெண்களைப் பெற்றுள்ள இந்தியா, தொழில் முன்னேற்றத்தில் 43 மதிப்பெண்களையும், கல்வியில் 42 மதிப்பெண்களையும் வாழ்வாதாரத்தில் 39 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் இந்தியா மிக குறைவான 8 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளதாக ஹென்லி & பார்ட்னர்ஸ் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications