தீபாவளிக்கு "நெட்ல" அதிகம் தேடப்பட்ட கேள்விகள் என்ன? டாப் கேள்வி பெரிய ஷாக் தான்! என்னனு பாருங்க
வாஷிங்டன்: நாடு முழுக்க தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், இது தொடர்பாக அதிகம் தேடப்பட்ட கேள்விகள் லிஸ்ட் கூகுள் தரப்பில் பகிரப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நமது நாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகளில் ஒன்றாகத் தீபாவளி இருக்கம் நிலையில், கொண்டாட்டங்கள் களைகட்டியது.

இந்த முறை தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வந்த நிலையில், பொதுமக்கள் வசதிக்காகத் தீபாவளிக்கு மறுநாளான இன்று திங்கள்கிழமையும் தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்திருந்தது. மேலும், பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் திரும்பிய நிலையில், தீபாவளி நாளில் சென்னையில் டிராபிக் குறைவாகவே இருந்தது.
தீபாவளி: பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தீபாவளியைக் கொண்டாடுவார்கள், அதிகரித்து வரும் காற்று மாசு பிரச்சினை காரணமாக நமது நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் பட்டாசுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சென்னை இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி தரப்பட்ட நிலையில், டெல்லியில் மொத்தமாகத் தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த தடையை மீறி டெல்லியில் பலரும் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் காற்று மாசு அங்கே மோசமான நிலைக்குச் சென்றது. டெல்லி மட்டுமின்றி சென்னை உட்பட பெரும்பாலான நகரங்களில் பட்டாசு காரணமாகக் காற்று மாசு அதிகரித்தது. இப்போது தீபாவளி முடிந்துவிட்ட நிலையில், பொதுமக்கள் மெல்ல தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இப்படி அதிரடியாக இந்திய மக்கள் தீபாவளியைக் கொண்டாடினர்.
அதிகம் தேடப்பட்ட கேள்விகள்: இதற்கிடையே தீபாவளியின்றி கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயம் என்னவென்று கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார். தீபாவளி வாழ்த்துக்களைப் பகிர்ந்த அவர், தீபாவளியன்று கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐந்து கேள்விகளையும் பட்டியலிட்டுள்ளார். இவை தீபாவளியை ஒட்டி போன வாரம் தேடிய கேள்விகளாகும். கூகுள் தளத்தில் தீபாவளி அன்று ஏன் என்பதில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளாக இது இருந்துள்ளது.

"இந்தியர்கள் ஏன் தீபாவளி கொண்டாடுகிறார்கள்" என்ற இந்த கேள்வி தான் அதிக நபர்களால் தேடப்பட்டு டிரெண்டிங்கில் இருந்த கேள்வியாகும். அடுத்து இரண்டாவது இடத்தில் "தீபாவளி அன்று ஏன் ரங்கோலி போடுகிறோம்?" என்ற கேள்வி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. "தீபாவளி அன்று ஏன் விளக்கு ஏற்றுகிறோம்?" என்ற கேள்வி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
மேலும், "தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வது ஏன்?" என்ற கேள்வி நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில், "தீபாவளி அன்று ஏன் எண்ணெய் குளியல் எடுக்கிறோம்?" என்ற கேள்வியில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த ஐந்தும் தான் இணையத்தில் தீபாவளியை ஓட்டி அதிகம் தேடப்படும் கேள்வியாக இருந்துள்ளது.
ஆர்வம் அதிகம்: இப்போது நாம் எந்தளவு டவுட் வந்தாலும் முதலில் கூகுளிடம் தான் கேட்கிறோம். அப்படி தான் பல கோடி மக்கள் இந்த கேள்விகளைக் கூகுளிடம் கேட்டுள்ளார். இதற்கான விடைகளைத் தெரிந்து கொள்ளவே அவர்கள் இதைத் தேடியுள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி குறித்துத் தெரிந்து கொள்ள மக்கள் எந்தளவுக்கு ஆர்வமாக உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications