"நடுக்கம்.. மயக்கம்.. மஞ்சள் கலரில் மாறிய எலான் மஸ்க்!" பதறி போன தாயார்.. அப்போது என்ன நடந்தது?
வாஷிங்டன்: உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவான எலான் எஸ்க் மலேரியாவால் பாதிக்கப்பட்டு நடுங்கிக் கொண்டிருந்தாராம். இது குறித்த தகவல்களை அவரது தாயார் பகிர்ந்துள்ளார்.
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி எனப் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். குறிப்பாக டெஸ்லா குறித்துச் சொல்ல வேண்டும்.
மின்சார வாகனங்கள் என்றாலே போரடிக்கும், சலிப்பாக இருக்கு என்று இருந்த எண்ணத்தை மாற்றியவர் எலான் எஸ்க்கும் அவரது டெஸ்லா நிறுவனமும் தான். இவர் கடந்தாண்டு தான் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் தளத்தை வாங்கியிருந்தார்.

நஷ்டத்தில் இயங்கி வரும் ட்விட்டரை மீண்டும் லாபகரமானதாக மாற்ற அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேநேரம் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் அவர் கடந்த கால நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது பதிவிடுவார். அதன்படி அவர் சமீபத்தில் பதிவிட்ட ஒரு ட்வீட் இணையத்தில் டிரெண்டானது.
எலான் மஸ்க்: இதற்கிடையே எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்குச் சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விளக்கியுள்ளார். அதில் அவர், இந்த உலகம் நவீன மருத்துவ முறையைக் கொண்டிருப்பது அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டார். மேலும், நவீன மருந்துகளால் தன்னை மலேரியாவிலிருந்து காப்பாற்றியதாகவும் தான் உயிருடன் இருக்க அதுவே காரணம் என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நவீன மருத்துவத்தைப் பெற நாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். குளோரோகுயின் மற்றும் டாக்ஸிசைக்ளின் இல்லாமல் போய் இருந்தால் நான் மலேரியாவால் உயிரிழந்திருப்பேன். அதேநேரம் அதை நாம் புனிதமானதாகவும் கருதிவிடக் கூடாது. இது குறித்து நாம் தொடர்ந்து கேள்வி எழுப்ப வேண்டும்.
எலான் மஸ்க் அம்மா: அறிவியலின் அடித்தளமே கேள்வி எழுப்புவது தான். எனவே, மருந்துகள் குறித்தும் கேள்வி எழுப்பலாம். அது நம்மை உண்மைக்கு அருகே அழைத்துச் செல்லும்" எனப் பதிவிட்டுள்ளார். எலான் மஸ்கின் இந்த ட்வீட் உடனடியாக டிரெண்டிங் ஆனது. குறிப்பாக அவர் சிறு வயதிலேயே மலேரியாவால் உயிரிழந்திருப்பேன் எனச் சொன்னதைப் பலராலும் நம்பவே முடியவில்லை. இதற்கிடையே எலான் மஸ்கின் தாயார் மே மஸ்க்கும் இது குறித்து சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க் ட்வீட்டிற்கு பதிலளித்த அவர், "உனக்கு மலேரியா தொற்று ஏற்பட்ட போது என்ன நடந்தது என்பது எனக்குத் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. நீ பல நாட்களாகச் சுயநினைவின்றி மயக்கத்தில் இருந்தாய்.. உடல் மஞ்சள் கலரில் மாறி நடுங்கிக் கொண்டே இருந்தாய்.. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அது ஒரு பயங்கரமான காலம்.. நவீன மருத்துவம் உன்னைக் காப்பாற்றியது. அதில் சந்தேகமே வேண்டாம்" எனப் பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் எலான் மஸ்க் டவீட்டிற்கு அவரது தாயார் மே மஸ்க் பதிலளிப்பது இது முதல் முறை இல்லை. முன்பு ஒரு முறை தான் மர்மமான முறையில் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக எலான் மஸ்க் பதிலளித்திருந்தார். அதற்கு அவரது தாயார், "இந்த போஸ்டை வேடிக்கையானது இல்லை. இதை ஜோக்காக பார்க்க முடியாது" என பதிவிட்டார். உடனடியாக தனது தவறை உணர்ந்து அம்மாவிடம் மன்னிப்பு கேட்ட எலான் மஸ்க், "சாரி, நான் உயிருடன் இருக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று பதிலளித்திருந்தார்.












Click it and Unblock the Notifications