சொந்த திருமணத்திலேயே மிஸ்ஸான இளம் ஜோடி! லிப்டில் நடந்த அந்த சம்பவம்! அச்சோ! அலறிய மண்டபம்! என்னாச்சு
சொந்த திருமணத்திற்கே ஜோடி வராமல் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: பொதுவாகத் திருமணத்திற்கு நண்பர்கள், உறவினர்கள் வராமல் மிஸ் செய்வார்கள். ஆனால், திருமணம் செய்து கொள்ளும் ஜோடியே திருமணத்திற்கு வராமல் மிஸ் செய்து பார்த்துள்ளீர்கள்.. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
பொதுவாக நம்ம ஊர் பக்கம்.. வீட்டைக் கட்டிப்பார்.. திருமணத்தைச் செய்து பார் என்பார்கள்.. வீட்டைக் கட்டுவதை விடத் திருமணத்தை நடத்திக் காட்டுவது ரொம்பவே கடினம். பலவித பிரச்சினைகளுக்குப் பின்னரே திருமணத்தை நடத்த வேண்டும்.
திருமணம் நெருங்க நெருங்க ஒவ்வொரு வகையில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். பத்திரிக்கை, உணவு என்று கடைசி நொடி வரை பிரச்சினைகள் வந்து திருமணத்தை நடத்துபவர்களை ஒரு வழி செய்துவிடும்.

திருமணம்
இது தவிரத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு தங்கள் திருமணம் இப்படிதான் நடக்க வேண்டும் என்று ஒரு வித கனவு இருக்கும். அதை மனதில் வைத்தே அவர்கள் எல்லாவற்றையும் திட்டமிடுவார்கள். அனைத்திற்கும் பக்காவாக திட்டமிட்டாலும் கூட.. நாம் விரும்பும் அனைத்தும் அப்படியே நடந்துவிடுவதில்லை. திருமணத்தில் எப்போதும் நாம் ஒன்று திட்டமிட்டால்.. நடப்பது ஒன்றாகவே இருக்கும். அப்படியொரு சம்பவம் தான் இந்த தம்பதிக்கு நடந்துள்ளது.

சொகுசு ஹோட்டல்
பொதுவாகத் திருமணத்திற்கு நண்பர்கள், உறவினர்கள் வராமல் மிஸ் செய்வார்கள். ஆனால், திருமணம் செய்து கொள்ளும் ஜோடியோ திருமணத்திற்கு வராமல் மிஸ் செய்து பார்த்துள்ளீர்களா.. அப்படியொரு சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை பனவ் மற்றும் விக்டோரியா ஜா ஆகியோருக்கு திருமணம் நடக்க இருந்தது. இதற்காக அவர்கள் வட கரோலினாவில் உள்ள சார்லோட் நகரில் ஹோட்டலையும் புக் செய்திருந்தார்கள். அங்கு தான் அவர்களுக்குத் திருமணம் நடக்க இருந்தது.

லிப்ட் சம்பவம்
திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்தது. அனைத்து நண்பர்களும் உறவினர்களும் திருமணத்திற்கு வந்துவிட்டனர். அனைவரும் ஆவலாகக் காத்திருந்த நிலையில், ஜோடி மட்டும் மிஸ்ஸிங். ஏதோ திருமணம் பிடிக்காமல் வரவில்லை என்று நினைக்காதீர்கள். இவர்கள் பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொள்ளவிருந்த ஜோடி..இவர்களுக்கு என்ன நடந்தது என்று பலரும் குழம்பிவிட்டனர். அதன் பின்னர் தான் தெரிந்தது.. இவர்களின் திருமண நாளில் சம்பவம் செய்ததே லிப்ட் தான்.

என்னாச்சு
மேலே ரூமில் இருந்து திருமண ஹாலுக்கு இருவரும் லிப்டில் இறங்கியுள்ளனர். ஆனால், சில நொடிகளிலேயே லிப்ட் நின்றுவிட.. இவர்களால் கீழ வர முடியவில்லை. லிப்ட்டை மீண்டும் இயங்க வைக்க இவர்கள் பல முயற்சியை எடுத்த போதிலும் அதன் பலன் தரவில்லை. இதன் காரணமாகவே அவர்களால் தங்கள் திருமணத்திற்கே செல்ல முடியவில்லை. இது குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணமகன் பனவ் கூறுகையில், "நாங்கள் லிப்டில் ஐந்து அடி சென்றிருப்போம்.. லிப்ட் அப்படியே நின்றுவிட்டது. எவ்வளவோ முயன்றும் கூட லிப்ட்டை எங்களால் செயல்பட வைக்க முடியவில்லை" என்றார்.

எல்லாம் செய்தோம்
இந்தச் சம்பவத்தால் திருமணத்திற்கு அழைப்பு இல்லை என்ற போதிலும் அந்த ஊர் தீயணைப்பு வீரர்கள் அங்கு வர வேண்டி இருந்தது. அவர்களும் லிப்டை இயங்க வைக்க அனைத்து வழிகளையும் ட்ரை செய்து பார்த்துவிட்டனர். ஆனாலும், லிப்ட் இயங்கவே இல்லை. இது குறித்துத் தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், "எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். லிப்டில் பெரிய கோளாறு இருந்தது. அதைச் சரி செய்ய முடியவில்லை.. உள்ளே இருவர் சிக்கியிருந்தனர். இதனால் அவர்களைக் கயிறு மூலம் வெளியே அழைத்துவர முடிவு செய்தோம்.. அதன்படி உள்ளே ஒரு சீட் போன்ற அமைப்பை அனுப்பினோம். அதில் அமர வைத்து ஒவ்வொருவராக வெளியே எடுத்தோம்" என்றார்.

ஹேப்பி தான்.
இதனால் அந்த ஜோடி சுமார் 2 மணி நேரம் லிப்டிற்குள் சிக்கி தவித்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி அவர்களால் தங்கள் சொந்த திருமணத்திற்கே செல்ல முடியவில்லை. இது ஆரம்பத்தில் தனக்குக் கஷ்டமாக இருந்தாலும் கூட, திருமண வேலைகள் ஆரம்பித்ததில் இருந்தே பனவ் உடன் பேசக் கூட நேரமில்லாமல் இருந்ததாகவும் இந்த சம்பவம் ஒரு நல்ல உரையாடலுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததாகவும் மணப்பெண் விக்டோரியா ஜா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications