"சாப்பாட்டிற்குக் கூட வழியில்லை.." அமெரிக்காவில் பரிதவிக்கும் மாணவி! தென்னந்தியாவை சேர்ந்தவராம்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்ற ஹைதராபாத் இளம்பெண் ஒருவர், உணவுக்குக் கூட வழியில்லாமல் நடுரோட்டில் பரிதாபமாக இருக்கும் வீடியோ பகீர் கிளப்பி வருகிறது.
வெளிநாடுகளுக்குச் சென்றால் நல்ல வேலை கிடைக்கும் என்பதை நம்பி இங்கிருந்து பலரும் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். இன்னும் சிலர் அங்கேயே படித்து அப்படியே வேலையில் சேர்ந்துவிடலாம் என நினைக்கிறார்கள்,
இதற்காக பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு பலரும் மேற்படிப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அப்படி மேற்படிப்பிற்கு இந்தியர்கள் பலரும் விரும்பி செல்லும் இடமாக அமெரிக்கா இருக்கிறது.

அமெரிக்கா: நமது நாட்டில் மேற்படிப்பிற்குப் பலரும் விரும்பி செல்லும் இடமாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து பல நூறு பேர் அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்கிறார்கள். இப்படி வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும் நபர்களுக்கு சில மோசமான சம்பவங்களும் நடக்கிறது. அப்படி அங்கு நடந்த ஒரு மோசமான சம்பவம் குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி.. இவர் முதுகலை படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையில், இப்போது அவர் தான் தெருவில் தள்ளப்பட்டுள்ளார். சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாமல் பட்டினியால் மிக மோசமான நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். அங்குள்ள மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அம்ஜெத் உல்லா கான் இது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தெலங்கானா பெண்: சையதா லுலு தெருவில் பாவமாக அமர்ந்து கொண்டிருப்பது போன்ற வீடியோவை மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்தப் பெண்ணால் தன் பெயரைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு அவர் மோசமான ஒரு நிலையில் இருந்தார். அந்த வீடியோவில் அவரது உடல்நிலை குறித்துக் கேட்கப்படுகிறது.
அதில் அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இருப்பினும் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்ட பிறகு உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக அவர் அதில் கூறுகிறார். அவர் மோசமான நிலையில் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சருக்குக் கடிதம்: இதற்கிடையே அந்த விவகாரம் குறித்து பெண்ணின் தாயார் சையதா வஹாஜ் பாத்திமா வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு உதவி கேட்டு கடிதம் எழுதியுள்ளார். தனது மகளை இந்தியாவுக்கு அழைத்து வர உதவுமாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது ட்விட்டரில், "ஹைடியைச் சேர்ந்த சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி, மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். சிகாகோவில் உள்ள அவரது உடல்நிலை, மிக மோசமான நிலையில் இருக்கிறது. அவரது தாயார் தனது மகளைத் திரும்ப அழைத்து வருமாறு கடிதம் எழுதியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
Syeda Lulu Minhaj Zaidi from Hyd went to persue MS from TRINE University, Detroit was found in a very bad condition in Chicago, her mother appealed @DrSJaishankar to bring back her daughter.@HelplinePBSK @IndiainChicago @IndianEmbassyUS @sushilrTOI @meaMADAD pic.twitter.com/GIhJGaBA7a
— Amjed Ullah Khan MBT (@amjedmbt) July 25, 2023
என்ன நடந்தது: தனது மகளின் அவரது உடைமைகள் திருடப்பட்டதால் அவரது மனநிலை மிக மோசமாக இருப்பதாக பாத்திமா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "தெலுங்கானாவைச் சேர்ந்த எனது மகள் சையதா லுலு மின்ஹாஜ் ஜைதி, ஆகஸ்ட் 2021இல் டெட்ராய்டில் தனது முதுகலைப் படிப்பிற்காகச் சென்றார். அவர் தொடர்ந்து எங்களுடன் டச்சில் தான் இருந்தார். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக அவர் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை..
எனது மகளின் உடைமைகளை யாரோ திருடிவிட்டதாகவும் இதனால் உணவுக்குக் கூட வழியில்லாமல் பட்டினியாக இருப்பதாகவும் அங்குள்ள ஹைதராபாத் இளைஞர்கள் மூலம் எங்களுக்குத் தெரிய வந்தது" என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது மகளைக் கண்டுபிடித்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த சிகாகோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், 'சையத் லுலு மின்ஹாஜ் வழக்கைப் பற்றி நாங்கள் இப்போதுதான் அறிந்தோம். விரைவில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications