இரும்புக்கு நிகரான அடர்த்தி.. நிலவிற்குள் இருப்பது என்ன? விஞ்ஞானிகள் ஆய்வில் வெளியான புது தகவல்கள்
வாஷிங்டன்: நிலவின் உள்மையப்பகுதி திடமானதாக இருக்குமா அல்லது உருகிய நிலையில் இருக்குமா? என பல்வேறு விவாதங்களும் நீண்ட காலமாகவே இருந்து வரும் நிலையில், இந்த கேள்விகளுக்கான விடையை கண்டு பிடித்து இருக்கிறார்கள் பிரான்சை சேர்ந்த ஆர்தர் ப்ரியாட் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான குழுவினர்.
நாம் வாழும் இந்த பூமி மட்டும் இல்லாது இந்த பிரபஞ்சமே பேரதிசயங்களை உள்ளடக்கியது. சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கோளான பூமியை போல வேறு கிரகங்களிலும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று விஞ்ஞானிகள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் இது தொடர்பான ஆய்வில் நாசா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்கள் தீவிர ஆய்வில் உள்ளது. பூமியின் ஒரே துணைக்கோளாக நிலவு பற்றிய ஆய்வும் நடந்து வருகிறது. நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதில் தொடங்கி நிலவின் மேற்பரப்பு எப்படி உள்ளது என்பது வரை தொடர் ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நிலவில் குடியேறுவதற்கான திட்டங்களை கூட உலக நாடுகள் பலவும் வகுக்கக் தொடங்கி அதற்கான பணிகளையும் தொடங்கி வருகின்றன. நிலவை பொருத்தவரை அது மிகவும் குளிர்ச்சியான கிரகம் ஆகும். நிலவில் தண்ணீர் திரவ நிலையில் இல்லை என்றாலும் ஐஸ் பாறைகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இத்தனைக்கும் நிலவில் தண்ணீர் இருப்பதை முதலில் சந்திராயன் மூலம் இஸ்ரோ தான் கண்டுபிடித்தது. இந்தியாவின் இந்த கண்டுபிடிப்பை பின்னர் நாசாவும் உறுதி செய்தது. அதேவேளையில் நிலவின் உள்மையப்பகுதி (இன்னர்கோர்) எப்படி இருக்கும் என்ற ஆர்வம் விஞ்ஞானிகள் மத்தியில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
அதாவது நிலவின் உள்மையப்பகுதி திடமானதாக இருக்குமா அல்லது உருகிய நிலையில் இருக்குமா? என பல்வேறு விவாதங்களும் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. தற்போது நிலவில் உள்மையப் பகுதி எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கு விடையை கண்டு பிடித்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.. அறிவியல் குறித்த செய்திகளை வெளியிட்டும் சயின்ஸ் அலார்ட் இந்த செய்தியை பகிர்ந்துள்ளது.
பிரான்சை சேர்ந்த ஆர்தர் ப்ரியாட் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. நிலவின் உள்மையப்பகுதி குறித்த இந்த ஆய்வு முடிவு நிலைவை பற்றியும் சூரிய குடும்பத்தை பற்றியும் துல்லியமாக புரிந்து கொள்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறுகையில், நிலவின் வெளிப்புறம் திரவமாக இருப்பதை நாம் அறிவோம்.

ஆனால், அதன் உள்மைய பகுதி எப்படி இருக்கும் என்பது பெரும் விவாதத்திற்கு உரிய ஒன்றாகவே இருந்தது. சந்திரனின் உள்மையப்பகுதி கிட்டதட்ட பூமிக்கு நிகராகவே இருக்கிறது. வெளிப்புற மையம் 362 கி.மீட்டர்கள் அளவிற்கும் (range) உள் மையம் சுமார் 258 கி.மீட்டர்கள் அளவிற்கும் கொண்டதாக இருக்கிறது. நிலவின் உள்மையமானது ஒரு கன மீட்டருக்கு 7,822 கிலோகிராம் அடர்த்தி கொண்டதாக உள்ளது. இந்த அடர்த்தி இரும்புக்கு நிகரானது" எனவும் கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications