இது புதுசா இருக்கே.. விண்வெளியில் கேட்கும் மர்ம சத்தம்.. "ஹம்.." இது எப்படி சாத்தியம்! விளக்கம் என்ன
வாஷிங்டன்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதன்முதலில் கற்பனை செய்த ஈர்ப்பு அலைகள் இருப்பதைச் சர்வதேச ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். குறைந்த அதிர்வு எண் கொண்ட ஈர்ப்பு அலைகளைக் கேட்க முடிவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் புவியீர்ப்பு அலைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த புவியீர்ப்பு அலைகள் மட்டும் இல்லாமல் போனால் நாம் மிதந்து கொண்டு தான் இருப்போம். இது மட்டுமின்றி இந்த புவியீர்ப்பு அலைகள் பல்வேறு விஷயங்களுக்கு நமக்கு உதவுகிறது.

இதற்கிடையே குறைந்த அதிர்வு எண் கொண்ட ஈர்ப்பு அலைகளை ஆய்வாளர்கள் இப்போது உறுதி செய்துள்ளனர். பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவை விண்வெளியில் சுற்றி நகர்ந்து மோதுவதால் இந்த மெல்லிய சத்தம் கேட்பதாகக் கூறப்படுகிறது.
மர்ம ஓசை: பிரபஞ்சத்தில் இந்த மெல்லிய அதிர்வு எண் கேட்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று நானோகிராவின் இணை இயக்குனர் மௌரா மெக்லாலின் தெரிவித்துள்ளார். இந்த ஈர்ப்பு அலைகள், குறைந்த அதிர்வெண்களில் கண்டறியப்பட்டுள்ளது. இது பிரபஞ்சத்தில் ஹம், அதாவது "hum" என்ற ஓசையை உருவாக்குவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் எல்லா இடங்களிலும் இந்த அலைகள் இருக்கிறதாம்.
இவை முதலில் மிக பெரிய பிளாக் ஹோல்களில் இருந்து உருவாகி, ஒன்றிணைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஐன்ஸ்டீன் ஈர்ப்பு அலைகள் அல்லது விண்வெளி சிற்றலைகள் இருப்பதை 1916இல் குறிப்பிட்டார். புவியீர்ப்பு என்பது மேட்டரால் ஏற்படும் இடம் மற்றும் நேரத்தின் சிதைவு என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டிருந்தார். 1970கள் முதல் இதற்கு மறைமுக ஆதாரங்களையே ஆய்வாளர்கள் நம்பி இருந்தனர். 2016ஆம் ஆண்டில் தான் இதற்கான ஆதாரத்தை ஆய்வாளர்கள் முதலில் நேரடியாகக் கண்டறிந்தனர்.
என்ன காரணம்: இப்போது நடத்தப்பட்ட இந்த ஆய்வு பல்சர்களை பெரிதும் நம்பியுள்ளது, அவை அசாதாரண வேகத்தில் சுழலும் வெடித்த நட்சத்திரங்களின் அடர்த்தியான சிறு பகுதிகளாம். இது குறித்து ஒரேகான் மாநில பல்கலைக்கழக ஆய்வாளர் கூறுகையில், "புவியீர்ப்பு அலைகள் என்பது நமது பிரபஞ்சத்தில் உள்ள அடர்த்தியான பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. சுற்றுப்பாதை இயக்கத்தில் இந்த அலைகள் பயணிக்கும்போது, இது போன்ற நிகழ்வு ஏற்படும்" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 15 ஆண்டுகளில், அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த 190க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களைக் கொண்ட NANOGrav குழு இது தொடர்பான தகவல்களைச் சேகரித்துள்ளது. பிரபஞ்சத்தின் ஈர்ப்பு அலையை ஆய்வாளர்கள் பெரிய கூட்டத்தின் போது ஏற்படும் ஏற்படும் ஓசையுடன் ஒப்பிடுகின்றனர். அதைத் தனிப்பட்ட குரல்களாக வேறுபடுத்த முடியாது.
7 ஆண்டுகளுக்குப் பிறகு: கடந்த 2016இல் தொலை தூரத்தில் இருக்கும் இரண்டு கருந்துளைகளால் உருவாகும் ஈர்ப்பு அலைகளில் முதலில் இந்த ஹம் ஒலியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இப்போது சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அதை ஆய்வாளர்கள் மீண்டும் உறுதி செய்துள்ளனர். கருந்துளைகள் மற்றும் பிற பொருட்களின் இயக்கம் என்பது இந்த ஈர்ப்பு அலைகளை உருவாக்க முடியும். அதுவே இந்த ஹம் ஓசையை உருவாக்குகிறது.
விண்வெளி சார்ந்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வரும் நிலையில், இது ரொம்பவே முக்குமானதாகப் பார்க்கப்படுகிறது. வரும் காலத்தில் இது குறித்துக் கூடுதல் தகவல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை












Click it and Unblock the Notifications