Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென சிரியாவில் குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... உண்மையில் என்ன காரணம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவம் சமீபத்தில் தான் வெனிசுலா நாட்டில் தாக்குதலை நடத்தியிருந்த நிலையில், இப்போது சிரியா மீதும் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் கடந்த பல காலமாகவே உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. அங்கு அமைதியான சூழலே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து அமைதியற்ற ஒரு சூழலையே ஏற்படுத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் திடீரென சிரியாவில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

What is the main reason behind US Launching Large-Scale Airstrikes Across Syria in Retaliation

அமெரிக்கா தாக்குதல்

அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாத இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆபரேஷன் "ஹாகெய் ஸ்ட்ரைக்" கீழ் அமெரிக்க ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின்படி இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கமாண்ட்(சென்ட்கோம்) கூறியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகத்திடம், "சிரியாவில் 35க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது 90 துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. F-15, A-10 ஜெட்டுகள், AC-130 கன்ஷிப்கள், MQ-9 ட்ரோன்கள் மற்றும் ஜோர்டானிய F-16 போர் விமானங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டன" என்றார்.

பதற்றம்

இந்தத் தாக்குதல்கள் துல்லியமாக எந்த இடத்தில் நடத்தப்பட்டன.. இதில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்பது குறித்த விவரங்களை அமெரிக்கா பகிரவில்லை. இது மத்தியக் கிழக்கில் மேலும் பதற்றத்தைப் பல மடங்கு அதிகரிப்பதாகவே இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்கா எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தியது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

காரணம்

அதாவது கடந்த டிசம்பர் 13ம் தேதி அமெரிக்கப் படைகளின் முகாம்கள் அமைந்துள்ள பால்மைராவில் ஐ.எஸ். படைகள் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அந்தத் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழி பெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே அமெரிக்கா இப்போது இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் தனது கூட்டாளி படைகளைப் பாதுகாக்கவே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக சென்ட்கோம் கூறியிருக்கிறது. எங்கள் வீரர்களுக்குத் தீங்கு விளைவித்தால், உங்களை உலகில் எங்கு இருந்தாலும் கண்டுபிடித்து அழிப்போம் என சென்ட்கோம் எச்சரித்தது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர்

இது தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்ஷெத் ட்விட்டரில், "நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம், ஒருபோதும் விட்டுவிட மாட்டோம்," எனப் பதிவிட்டார். இந்தத் தாக்குதலால் அங்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 20 முதல் 29 வரை அமெரிக்க ராணுவம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் சுமார் 25 ஐஎஸ் போராளிகள் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் என்று சென்ட்கோம் தெரிவித்தது.

ஐ.எஸ். அமைப்பு ஒரு காலத்தில் சிரியா, ஈராக்கின் பெரிய பகுதிகளைக் கட்டுப்படுத்தியது. இருப்பினும், அதன் பிறகு சர்வதேச நாடுகள் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்தன. சர்வதேச படைகளின் தொடர் தாக்குதல்களால் ஐஎஸ் வீழ்ந்தது. இருப்பினும், ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை. சிரியாவின் சில பகுதிகளில், குறிப்பாகப் பாலைவனப் பகுதிகளில், இன்றும் செயல்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+