சிரித்த முகம் நொடியில் சிவந்தது.. அமெரிக்கா வரலாற்றை மாற்றிய "அந்த" 2 வரி.. உண்மையில் என்ன நடந்தது
வாஷிங்டன்: அமெரிக்கா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் புரட்டிப் போட்ட இரட்டை கோபுர தாக்குதல் சமயத்தில் அப்போது அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் என்ன செய்தார் எனப் பல தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. அதில் எது உண்மை என்பது குறித்துப் பார்க்கலாம்.
அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான நாள் என்றால் அது சந்தேகமே இல்லாமல் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த நாளை சொல்லலாம். கடந்த 2001ஆம் ஆண்டு செப். 11ஆம் தேதி நடந்த இந்த தாக்குதல் ஒட்டுமொத்த உலகையும் மொத்தமாக மாற்றிவிட்டது.

உலக வல்லரசாக இருந்த அமெரிக்காவுக்குள் வந்து, விமானங்களைக் கடத்தி அதை வைத்து இரட்டை கோபுரங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் மீது மோதியது எல்லாம் சாதாரண காரியம் இல்லை. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் மிகப் பெரிய தோல்வியாக இது பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா: இதன் பிறகே அமெரிக்கா அதன் பாதுகாப்பு கட்டமைப்புகளைப் பல மடங்கு வலுவாக்கியது. இந்தத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஒசாமா பின்லேடனை தேடும் படலம் பல ஆண்டுகள் நடந்தன. அமெரிக்க பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து பல ஆண்டுகள் பின்லேடனை தேடியது. பல ஆண்டுகள் அமெரிக்கப் படைகளிடம் இருந்து தப்பிய பின்லேடன் கடைசியாக 2011ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி பாகிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்டார்.
பின்லேடன் கதை முடிந்தாலும் இந்தத் தாக்குதல் அமெரிக்காவில் ஏற்படுத்திய காயம் ஒருபோதும் சரியாகாது. இந்தத் தாக்குதலில் பல அமெரிக்கர்கள் தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் இழந்தனர். மாலை வந்துவிடுகிறேன் என்று செல்ல குழந்தைகளிடம் சொல்லிவிட்டு ஆபீஸ் சென்ற பல பெற்றோர்கள் திரும்பவே இல்லை. இந்த மோசமான தாக்குதல் குறித்து வழக்கம் போலப் பல பொய்யான தகவல்களும் உலா வருகிறது. அதில் ஒன்று அப்போது அமெரிக்க அதிபராக இருந்த புஷ் தாக்குதல் தகவல் கேட்டு என்ன செய்தார் என்பதாகும்.

அதிபர் புஷ்: புஷ்ஷுக்கு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரியும்.. தாக்குதல் தகவல் கிடைத்ததும் கூட அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்று பல தகவல்கள் உலா வருகிறது. உண்மையில் அப்போது புஷ் எங்கே இருந்தார். அவர் என்ன செய்தார் என்பதைப் பார்க்கலாம். அன்றைய தினம் அப்போது அதிபராக இருந்த புஷ் கல்வி சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புளோரிடா மாகாணம் சரசோட்டாவில் உள்ள பள்ளிக்குச் சென்றிருந்தார்.
அங்கே இரண்டாம் வகுப்பு மாணவர்கள் கட்டுரை படிப்பதை புஷ் கேட்டுக் கொண்டிருந்தார். இரட்டை கோபுரத்தில் முதல் விமானம் மோதிய போது இது இவ்வளவு பெரிய தாக்குதல் என்பது யாருக்கும் தெரியாது. ஏதோ ஒரு சிறிய விமானம் தவறுதலாக இரட்டை கோபுரத்தில் மோதிவிட்டது என்றே பலரும் நினைத்தார்கள். இதனால் முதல் செய்தி வந்த போது யாரும் பதறவில்லை. அதேநேரம் சில நொடிகள் கழித்து இரண்டாவது விமானம் இரட்டை கோபுரத்தில் மோதியதாக புஷ்ஷின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் வந்து சேர்கிறது.
இரண்டே வரி: அப்போது தான் நிலைமையின் தீவிர தன்மையை உணர்ந்த புஷ்ஷின் அதிகாரிகள், வகுப்பறையின் உள்ளே நுழைந்தனர். பொதுவாக ரொம்பவே முக்கிய விஷயம் என்றால் மட்டுமே அதிபர் நிகழ்ச்சியில் இதுபோல அதிகாரிகள் உள்ளே வருவார்கள். புஷ்ஷிடம் வந்த அந்த பாதுகாப்பு அதிகாரி மெல்லிய குரலில், "இரண்டாவது விமானம் இரட்டை கோபுரத்தைத் தாக்கியுள்ளது.. America is under attack'என்று இரண்டே வரிகளை தான் சொன்னார்.
அதற்கே புஷ்ஷின் முகம் மொத்தமாக மாறியது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் இப்போதும் டிரெண்டாகும். இருப்பினும், அங்கிருந்தவர்கள் அனைவரும் குழந்தைகள் என்பதால் அவர்களைப் பயப்படுத்தும் வகையில் எந்தவொரு தகவலையும் சொல்லக் கூடாது என்று முடிவுக்கு வந்தார் புஷ். ஒரு குழந்தை அதிபருக்குக் கட்டுரையைப் படித்துக்காட்டிக் கொண்டிருக்க அதை சில நிமிடம் முழுமையாகக் கேட்டார் புஷ்.

புஷ் என்ன செய்தார்: அதன் பிறகே அந்த கிளாஸ் ரூமில் இருந்து வெளியேறினார். முதலில் பக்கத்து கிளாஸ் ரூமிற்கு சென்ற புஷ், அங்கேயே முதற்கட்ட தகவல்கள் குறித்துக் கேட்டறிந்தார். உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உத்தரவிட்டார். மேலும், இது குறித்த செய்தியாளர் சந்திப்பை நொடியும் தாமதிக்காமல் அந்த பள்ளியிலேயே நடத்தி, உண்மை நிலைமையை அமெரிக்கர்களிடம் விளக்கினார்.
சாதாரண பள்ளி சார்ந்த நிகழ்ச்சி இந்தளவுக்கு தலைகீழாக மாறும் என்பதை அப்போது யாருமே எதிர்பார்க்கவில்லை. அதன் பின்னரே புஷ் முதலில் ராணுவ தளத்திற்கும் அதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகைக்கும் வந்து அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட்டார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications