திடீரென மறைந்த சூரியன்! 3000 ஆண்டுக்கு முன் நடந்த நிகழ்வு- மீண்டும் நடக்குதே.. அதுவும் ஒரே நாளில்..!
வாஷிங்டன்: சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென சூரியன் மறைந்ததால் பொதுமக்கள் அஞ்சி அலறி ஒடி இருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன.. அன்று அங்கே என்ன நடந்தது.. அது மீண்டும் நடக்குமா என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்த பூமி இயங்க சூரியன் தான் அடிப்படை. சூரியன் நமக்கு வெளிச்சத்தை மட்டும் தருவதில்லை. அதன் மூலம் தான் செடிகள் தனது உணவை உற்பத்தி செய்கிறது. அதில் இருந்தே அனைத்தும் இயங்குகிறது.

இப்படி பூமிக்கு உயிர்நாடியாக இருக்கும் சூரியின் திடீரென மறைந்தால் என்ன நடக்கும். இதுபோன்ற ஒரு சம்பவம் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.
திடீரென மறைந்தது: அப்போது சூரியன் திடீரென பயங்கரமாக மங்கலான நிலையில், அதன் நடுப்பகுதியும் மறைந்தது.. தற்போது சிரியா இருக்கும் பகுதியில் தான் இது நடந்துள்ளது. அந்த காலத்தில் லைட் எல்லாம் இருக்காது. சூரியன் மட்டுமே பகலில் வெளிச்சத்தைத் தந்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட இருள் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும். அந்தக் காலத்தில் மக்கள் அதைப் பேரழிவின் தொடக்கமாகவே பார்த்துள்ளார்கள்.
அன்று ஒட்டுமொத்த சிரியாவும் அலறிய நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் தெரிய வந்துள்ளது.
என்ன காரணம்: அதாவது அமெரிக்காவிலும் நாளை ஏப்ரல் 8ஆம் தேதி இதேபோல சில பகுதிகள் பகல் நேரத்திலேயே இருளில் மூழ்கப் போகிறது. சூரியன் அஸ்தமிக்காது என்ற போதிலும்.. திடீரென அது இருண்டுவிடும். நிலவு அதை மறைப்பதே அதற்குக் காரணமாகும். நாளை ஏப்ரல் 8ஆம் தேதி சுமார் 4 நிமிடங்கள் மற்றும் 28 நொடிகள் வட அமெரிக்கா கண்டத்தில் பல பகுதிகளில் பகல் நேரத்திலேயே இரவு போன்ற சூழல் நிலவும்.
பண்டைய சிரியர்கள் ஒரு கெட்ட சகுனமாகக் கண்ட இது வேறு எதுவும் இல்லை முழு சூரிய கிரகணம் தான். இது ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒரு முறை பூமியில் எங்காவது ஒரு பகுதியில் நிகழும். இருப்பினும், ஒவ்வொரு முறையும் எல்லா இடங்களிலும் இது நடக்காது. அமெரிக்காவில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நடக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 2031 வரை சூரிய கிரகணத்தைக் காண முடியாது.
கெட்ட சகுனம்: மெசபடோமியர்கள் முதல் எகிப்தியர்கள், மாயன்கள் எனப் பல பண்டைய கலாச்சாரங்களில் கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவர்கள் அதைக் கெட்ட சகுனமாகவே கருதினர்.. இதில் 1948ல் சிரியாவில் கண்டறியப்பட்ட ஒரு தகடு பண்டைய சமூகங்கள் இந்த கிரகண நிகழ்வுகளைக் கொண்டு எந்தளவுக்கு அஞ்சினர் என்றும் இதனால் பேரரசு கூட வீழ்ச்சியடையும் என கருதியதும் அதில் இருக்கிறது.
KTU 1.78 என்று பெயரிடப்பட்ட அந்த தகடு 3,200 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கிமு 1250 மற்றும் கிமு 1175க்கு இடையில் எழுதப்பட்டதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. பகல் நேரத்தில் சூரியன் மறைந்ததை அவர்கள் அச்சத்துடன் பார்த்துள்ளனர். அந்தக் காலகட்டத்தில் இது சூரிய கிரகணத்தால் தான் நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அந்த தகட்டிலும் அதற்கான காரணம் தெரியவில்லை என்றே இருக்கிறது.
இப்போது காரணம் தெரியும்: இப்போது சுமார் 3000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்காவில் இந்த நிகழ்வு நடக்கிறது. இதிலும் சூரியன் மறையப் போகிறது. இருண்ட வானத்தில் நான்கு கிரகங்கள் தோன்றும். அதில் ஒன்று செவ்வாய்க் கிரகமாக இருக்கும். ஆனால், இப்போது நமக்குக் காரணம் தெரியும் என்பதால் அஞ்சத் தேவையில்லை.












Click it and Unblock the Notifications