வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மொத்தம் 140 சம்பவங்கள்.." அடிக்கடி பூமிக்கு விசிட் அடித்த ஏலியன்கள்? தனி டீமை இறக்கிய அமெரிக்கா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்டகன் வேற்று கிரக வாசிகள் குறித்த நடத்தி வரும் ஆய்வுகள் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போலவே நிச்சயம் வேறு எதாவது கிரகத்திலும் கூட உயிர்கள் வசிக்க வாய்ப்புகள் ரொம்பவே அதிகம். இதைத் தான் வேற்று கிரக வாசிகள் எனக் குறிப்பிடப்படுகிறது. வேற்று கிரக வாசிகள் குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடந்து வருகிறது.

குறிப்பாக, நாசா இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. மேலும், கடந்த காலங்களில் கூட வேற்று கிரக வாசிகள் நமது பூமிக்கு வந்து இருக்கலாம் என்று சில வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

கைநிறைய சம்பளம்.. இந்து அறநிலையத்துறையில் நல்ல வேலைவாய்ப்பு.. சீக்கிரம் விண்ணப்பக்கலாம் வாங்க!கைநிறைய சம்பளம்.. இந்து அறநிலையத்துறையில் நல்ல வேலைவாய்ப்பு.. சீக்கிரம் விண்ணப்பக்கலாம் வாங்க!

அமெரிக்கா

அமெரிக்கா

வேற்று கிரக வாசிகள் UFOs எனப்படும் பறக்கும் தட்டுக்குள் மூலம் பூமிக்கு வந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாகவே பூமியில் இந்த பறக்கும் தட்டுகள் குறித்த மர்மம் நீட்டித்தே வருகிறது. இந்த பறக்கும் தட்டுக்கள் மூலமே ஏலியன்கள் பூமிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த பறக்கும் தட்டுகள் குறித்து மட்டும் தனியாக ஆய்வு செய்ய அமெரிக்கா பாதுகாப்புத் துறையான பென்டகன் தனியாக ஒரு துறையை அமைத்திருந்தது. இது குறித்த முக்கிய தகவல்களை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இப்போது பகிர்ந்துள்ளனர்.

ஆதாரம் இல்லை

ஆதாரம் இல்லை

கடந்த காலங்களில் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்தது தொடர்பாகவோ அல்லது எதிர்பாராத விதமாகப் பூமியில் மோதியது குறித்தோ எந்தவொரு ஆதாரம் இல்லை என்று அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்தனர். நீருக்கு அடியே, விண்வெளியில் இருக்கும் முரண்பாடான, அடையாளம் காணப்படாத பொருள்கள் குறித்து பென்டகன் இப்போது ஆய்வு செய்து வருகிறது. இருப்பினும், ஏலியன் குறித்துக் குறிப்பிடத் தகுந்த விஷயங்கள் எதையும் இந்த குழுவால் கண்டுபிடிப்பு முடியவில்லை.

விரிவான ஆய்வு

விரிவான ஆய்வு

இது குறித்து அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரிகள் கூறுகையில், "வேற்று கிரக வாசிகளின் வருகை அல்லது அது போன்ற ஏதாவது ஒன்றை உறுதி செய்யும் விதமாக எங்களால் எதையும் கண்டறிய முடியவில்லை.. அதேநேரம் ஏலியன்கள் குறித்த முழுமையாகவும் நிராகரிக்க நம்மால் முடியாது. இது குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வை நடத்தி வருகிறோம். தற்போது நம்மிடம் உள்ள தரவுகளை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். இதில் எதாவது முக்கிய விஷயங்களைக் கண்டறிய முடியுமா என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்" என்றார்.

140 சம்பவங்கள்

140 சம்பவங்கள்

நாசாவின் இந்த புதிய பிரிவு ராணுவத்திற்குச் சொந்தமான ஏர் ஸ்பேஸ், தடைசெய்யப்பட்ட வான்வெளி உள்ளிட்ட பகுதிகளில் பதிவாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறது. இதனால் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற கோணத்தில் இந்த குழு விசாரணை செய்து வருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் மட்டும் மொத்தம் 140க்கும் மேற்பட்ட பறக்கும் தட்டுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது புகார்கள் கிடைத்துள்ளன.

1945 முதல்

1945 முதல்

இதில் பெரும்பாலான கேஸ்களில் பெரிய காற்றழுத்த பலூனுக்கு போன்ற அமைப்புகளையே பார்த்துள்ளனர். மற்ற கேஸ்களில் போதுமான தகவல்கள் இல்லை என்ற போதிலும், இது குறித்து தீவிர ஆய்வை பென்டகன் செய்து வருகிறது. இதுவரை மொத்தம் 400க்கும் மேற்பட்ட பறக்கும் தட்டுகளின் நடமாட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1945 முதல் பதிவான பறக்கும் தட்டுகள் குறித்த அனைத்து தகவல்களையும் பெறும் முயற்சியிலும் கூட பென்கடன் இறங்கியுள்ளது.

பறக்கும் தட்டுகள்

பறக்கும் தட்டுகள்

இந்த பறக்கும் தட்டுகள் பெரும்பாலும் வட்டமான வடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக இது குறித்து ஆய்வுகள் நடந்தாலும் பல்வேறு கேள்விகளுக்கு விடை இல்லை. அதேபோல அது எங்கிருந்து வருகிறது, திடீரென எப்படி மாயமாகிறது, எங்கே செல்கிறது என்பது குறித்தும் நமக்கு எதுவும் தெரியவில்லை. இதனிடையே இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள 16 ஆய்வாளர்களைக் கொண்ட சிறப்புக் குழுவை நாசா அமைத்து உள்ளது.

English summary
Pentagon says No evidence of space aliens visited earth: Pentagon latest report about aliens visiting earth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X