"ஒரே வாந்தி.!" எலான் மஸ்க் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. அடக்கவே முடியாமல் மேனேஜர் செய்த காரியம்! பரபர
வாஷிங்டன்: எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடன் செய்த காரியம் அங்குள்ள பல ஊழியர்களுக்கும் முகம் சுளிக்கும் வகையிலேயே இருந்தது.
உலகின் பெரும்பாலான டெக் நிறுவனங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் கூட, ட்விட்டர் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக ஒன்றும் செயல்படவில்லை.
பொருளாதார ரீதியாகவும் ட்விட்டர் நிறுவனத்திற்குப் பெரிய லாபம் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே கடந்த 5 ஆண்டுகளாக ட்விட்டர் பங்குகளும் பெரிய லாபம் தரவில்லை.

எலான் மஸ்க்
இந்தச் சூழலில் தான் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதாக உள்ளே வந்தார். இடையில் போலிக் கணக்குகளைக் காரணம் காட்டி பின்வாங்க முயன்றாலும் கூட போர்ட் உறுப்பினர்கள் மிரட்டியதால் வெறு வழியின்றி அவர் ட்விட்டர் தளத்தை வாங்க ஒப்புக் கொண்டார். சுமார் 44 மில்லியன் டாலர் கொடுத்து அவர் ட்விட்டரை வாங்கினார். கடந்த மாதம் தான் ட்விட்டர் நிறுவனம் ஒட்டுமொத்தமாக எலான் மஸ்க் கைகளில் சென்றது.

ஆட்குறைப்பு
அதன் பின்னர் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் ட்விட்டர் ஊழியர்கள் மட்டுமின்றி உலகெங்கும் கடும் அதிருப்தியைக் கிளப்பி உள்ளது. முதலே நாளே அவர் டாப் அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பினார். அடுத்து சில நாட்களில் ஆட்குறைப்பிலும் ஈடுபட்டார். மொத்தம் இருந்த 7500 ஊழியர்களில் சுமார் 50% பேர் ஒரே மெயிலில் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

என்ன நடந்தது
இந்தச் சூழலில் ஆட்குறைப்பு படலத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை ட்விட்டர் ஊழியர்கள் அந்நாட்டு ஊடகத்திற்குப் பகிர்ந்துள்ளனர். இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் 36 ட்விட்டர் ஊழியர்களிடம் பேசி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய உடனேயே ஒரு இன்ஜினியர் மேனேஜரை எலான் மஸ்கின் ஆலோசகர்கள் அணுகியுள்ளனர்.

பல நூறு பேர்
இந்த ஆலோசகர்கள் ட்விட்டர் ஊழியர்கள் மஸ்கின் ரவுடிகள் என்றே அழைக்கிறார்கள். பல நூறு ஊழியர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலுடன் அந்த இன்ஜினியர் மேனேஜரிடம் சென்ற மஸ்க் ஆலோசகர்கள் இவர்கள் அனைவரையும் வேலையை விட்டுத் தூக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் அந்த மேனேஜருக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. தான் என்ன செய்ய வேண்டும் என்பதை சில நொடிகளில் உணர்ந்த அவருக்கு வாந்தியே வந்துவிட்டது" என்று கூறப்பட்டு உள்ளது.

ஒரே வாந்தி
அந்த மேனேஜர் அருகே இருந்த குப்பை தொட்டியிலேயே வாந்தி எடுத்து விட்டார். இப்படிப் பல மோசமான நிகழ்வுகள் எஸ்க் ட்விட்டரை வாங்கியது முதலே அரங்கேறி வருகிறது. எலான் மஸ்க் குறுகிய காலத்தில் முடிக்கும்படி பல உத்தரவுகளைப் பிறப்பித்து உள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்றால், அதற்குப் பல மணி நேரம் கூடுதலாக வேலை செய்ய வேண்டும். இதனால் பல ட்விட்டர் ஊழியர்கள் வீடுகளுக்குக் கூட செல்லாமல் அலுவலகத்திலேயே உறங்குகின்றனர்.

எலான் மஸ்க்
மேலும், எலான் மஸ்க் நிறுவனத்தை வாங்கிய உடன் கூறிய தகவல்களையும் அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. முதல் நாளே ஊழியர்களை அழைத்த எலான் மஸ்க், "வெற்றிக்காகக் கடினமாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு ட்விட்டர் மிகச் சிறப்பான ஒரு இடமாக இருக்கும். அதேநேரம் மற்றவர்களுக்கு இது ஏற்ற இடமாக இருக்காது. வேறு நிறுவனத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.

ப்ளு டிக்
இப்படி எலான் மஸ்கின் அடாவடி நடவடிக்கைகளால் ட்விட்டர் ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இப்படிதான் அனைவரது ஆலோசனைகளையும் புறந்தள்ளி எலான் மஸ்க் ப்ளூ டிக் கட்டண திட்டத்தைக் கொண்டு வந்தார். அதில் யேசு பெயர் தொடங்கி பல்வேறு போலிக் கணக்குகளும் வெறும் 8 டாலர் செலுத்தி ப்ளு டிக் பெற்றது. இதுவும் கூட நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications