அழுகும் தோல்.. ஜைலாஜின் மருந்தால் ஜாம்பிகளாக மாறும் மக்கள்.. அமெரிக்காவில் நவீன போதை கலாசாரம்
ஜைலாஜின் எனும் ஒரு வித மருந்தை போதைக்காக எடுத்துக் கொள்வதால் அமெரிக்காவில் பலர் ஜாம்பி போல் சுற்றி திரிகிறார்கள்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜைலாஜின் எனும் ஒரு வித மருந்தை போதைக்காக எடுத்துக் கொள்வதால் மக்கள் எப்படி ஜாம்பிகளாக மாறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
ஜாம்பி எனும் தமிழ் படத்தை பார்த்துள்ளோம். அதில் ஜாம்பி தாக்கப்பட்டவர்கள் ஏற்படுத்தும் சில ரகளையை நகைச்சுவையாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அமெரிக்காவில் ஜாம்பி போல் மக்கள் மாறி வருகிறார்கள்.
அமெரிக்காவில் ஹெராயின் போதை பொருளுக்கு பதிலாக ஜைலாாஜின் எனும் மருந்தை போதைக்காக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் உடலில் உள்ள தோல் அழுகி , நிற்க முடியாமல் தலை தொங்கி போய் நடையில் தள்ளாட்டம், ஆங்காங்கே புண்கள் ஏற்பட்டு ஜாம்பிகளாகவே அலைகிறார்கள்.

ஜாம்பி டிரக்
அதனால் அந்த போதை மருந்துக்கு ஜாம்பி டிரக் என்றும் அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் சரி செய்யாவிட்டால் இது உயிருக்கே உலை வைக்கும் சூழலை உருவாக்கும். ஜைலாஜின் என்பது கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பொருள் அல்ல. இதை கால்நடை மருந்தாக சந்தைப்படுத்தப்படுகிறது. இதை மனிதர்களில் மயக்க மருந்துக்காகவும் வலி நிவாரணியாகவும் தசை தளர்த்தவும் பயன்படுத்தப்படுகிறது.

நரம்பு மண்டலம்
இது நரம்பு மண்டலத்தில் பிரச்சினை, மூச்சுவிடுவதில் சிரமம், குறைந்த இதய துடிப்பு, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் இறப்பை கூட ஏற்படுத்தும். குதிரைகள் மற்றும் மாடுகளில் மயக்க மருந்தாக இந்த ஜைலாஜின் பயன்படுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்தும் போது அளவுக்கதிமான சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம், புண்கள் ஏற்படும்.

தீவிர புண்கள்
அந்த புண்கள் விரைந்து தீவிர புண்களாக மாறும், இதை நாம் கவனிக்காமல் விட்டால் எச்சார் எனும் இறந்த தோலாக மாறும். நாளடைவில் அந்த பாகமே துண்டிக்கப்படும் நிலை ஏற்படலாம். ஜைலாஜின் அமைதிப்படுத்தும் மருந்தாக செயல்படுகிறது. இதை அதிகமாக பயன்படுத்தும் போதுதான் அதிக வினைகளை ஏற்படுத்துகிறது.

தூக்கநிலை
இந்த மருந்தை அதிகம் எடுத்துக் கொள்வதால் எப்போதும் தூக்கநிலையிலேயே இருப்பார்கள், மிகவும் தாமதமாக எழுவார்கள். இந்த போதை மருந்தை பயன்படுத்துவோர் விபத்துகளில் சிக்கும் அபாயமும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படும் நிலையும் ஏற்படும். இந்த நோய் முதலில் ஃபிலடெல்பியாவில்தான் முதலில் தோன்றியது. அதன் பிறகுதான் மேற்கத்திய நாடுகளான சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நாடுகளுக்கு பரவியது.

கால்நடைகளுக்கு
இந்த ஜைலாஜின் மருந்தை கால்நடைகளுக்கு பயன்படுத்தவே உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனமும் அனுமதி கொடுத்துள்ளது. ஃபிலடெல்பியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் 90 சதவீதம் பேருக்கு ஜைலாஜின் மருந்து அவர்களுடைய ரத்தத்தில் இருந்தது. எனவே இந்த மருந்தை விற்பனை செய்வதை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications