வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது.. அன்னபெல் பொம்மை தப்பிச்சுப் போயிருச்சா.. அலறும் அமெரிக்கா.. என்னதான் நடந்தது?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் கனெக்டிகட்டில் இருக்கும் அக்கல்ட் மியூசியத்தில் இருந்த நிஜ வாழ்க்கை அன்னபெல் பொம்மை தப்பித்து சென்று விட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொம்மை உண்மையிலேயே மியூசியத்தில் இருந்து தப்பித்து விட்டதா என்று பார்ப்போம்.

கடந்த 2014ஆம் ஆண்டில் வெளியான திகில் படமான அன்னபெல் திரைப்படமும் இந்த பொம்மையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்தப் படம் வெளியானபோது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. வெளியாகி இருக்கும் திக்குள் திரைப்படங்களில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்திய படம் என்று கூறப்பட்டது. திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஈத் மற்றும் லோர்ரைன் வாரன் இருவருக்கும் இந்த பொம்மை 1970களில் கிடைத்து இருந்தது. அப்போது இந்த பொம்மைக்கு இறந்த பெண் அன்னபெல் ஆவி பிடித்திருக்கிறது என்று கூறப்பட்டது.

what the social media is saying about Annabelle Doll escape

இந்த பொம்மையை மாணவ செவிலியர் ஒருவர் வைத்து இருந்தார். இந்த பொம்மை வித்தியாசமான செயல்களை வெளிப்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த மாணவர் இந்த பொம்மையை மனநல மருத்துவரிடம் எடுத்துச் சென்றார். அப்போது, இறந்த பெண் அன்னபெல்லின் ஆவி இந்த பொம்மைக்கு பிடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மாணவரும், அவரது நண்பர்களும் அந்த பொம்மையை வளர்க்க முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. இதையடுத்து ஈத் மற்றும் லோர்ரைன் வாரன் வாங்கிக் கொண்டுள்ளனர். இதையடுத்து இந்த பொம்மை வாரனின் அக்கல்ட் மியூசியத்தில் வைக்கப்பட்டது.

what the social media is saying about Annabelle Doll escape

தற்போது இந்த பொம்மை மியூசியத்தில் இருந்து தப்பி சென்று விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனர். சிலர் இந்த பொம்மையை யாரோ திருடிச் சென்றுவிட்டதாகவும் பதிவிட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலானவர்கள் பொம்மை தானாக மியூசியத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். சிலர் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர். கொரோனா கொல்லாவிட்டாலும், தப்பிச் சென்ற அன்னபெல் கொன்று விடும் என்றும் பதிவிட்டுள்ளனர்.

what the social media is saying about Annabelle Doll escape

ஆனால், உண்மையில் இந்த அன்னபெல் தப்பிச் சென்றதா என்றால்? இல்லை. டோனி ஸ்பெரா என்பவர் இந்த பொம்மை அருகே நின்று வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''அன்னபெல் மியூசியத்தில்தான் இருக்கிறது. எங்கும் சென்றுவிடவில்லை. எங்கும் சுற்றுலா சென்றுவிடவில்லை. காதலனை சந்திக்க செல்லவில்லை'' என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கபட்டுள்ளது.

யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன? வருமானம் வந்தால் சரி என நினைப்பது தவறு -மு.க.ஸ்டாலின்யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன? வருமானம் வந்தால் சரி என நினைப்பது தவறு -மு.க.ஸ்டாலின்

English summary
what the social media is saying about Annabelle Doll escape
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X