வாட்ஸ் அப்பில் வரப்போகும் அசத்தலான அப்டேட்.. குரூப் அட்மின்களுக்கு சூப்பர் பவர்.. என்னனு பாருங்க
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப், தனது பயனர்களுக்கு அசத்தலான இரண்டு புதிய அம்சங்களை வாட்ஸ் அப்பில் கொண்டு வரப்போகிறதாம். அது என்னவென்று இங்கே பார்க்கலாம்.
தற்போதைய நவீன உலகில் மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் போன்களை பார்ப்பதே அரிதாக இருந்த காலம் போய் தற்போது செல்போன் பயன்படுத்தாத நபர்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. அதுவும் ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியே ஏற்பட்டு விட்டது எனலாம்.

ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கம் காரணமாக சமூக வலைத்தள பயன்பாடும் மக்கள் மத்தியில் பெருமளவு அதிகரித்து விட்டது. குறுஞ்செய்தி பரிமாறிக் கொள்ளும் வசதியுடன் அறிமுகம் ஆன வாட்ஸ் அப் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றது. இரவு தூங்க போகும் போது கடைசியாக பார்ப்பதும் வட்ஸ் அப்தான்... காலையில் விழித்ததும் முதலில் பார்ப்பது வாட்ஸ் அப் ஆகத்தான் இருக்கும் என்றும் சொல்லும் அளவுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் மத்தியில் வாட்ஸ் அப் பிரபலம் ஆகிவிட்டது.
வாட்ஸ் அப் செயலி இல்லாத ஸ்மார்ட் போன்களே இல்லை என்று சொல்லிவிடலாம். மெசேஜ் மட்டும் இன்றி வீடியோக்கள், பிடிஎப் வடிவிலான கோப்புகள், இமேஜ்கள் ஆகியவற்றையும் அனுப்பிவிடலாம். போதாக்குறைக்கு குரூப் உருவாக்கி மொத்தமாக தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். இப்படி பல பல வசதிகளை வாட்ஸ் அப் தனது யூசர்களுக்கு கொடுத்து வருகிறது.
அதேபோல், ஸ்டேடஸ் வைக்கும் வசதியை வாட்ஸ் அப் கொண்டு வந்தது. போட்டோக்களையும் வீடியோக்களையும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதன்பிறகு வாய்ஸ் நோட்ஸ்களையும் வைக்கும் வசதியை கொண்டு வந்தது. அண்மையில் கூட இரண்டு போன்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
இப்படி பயனர்களை கவர அவ்வப்போது புது புது அப்டேட்களை அறிமுகம் செய்து வரும் வாட்ஸ் அப் அந்த வரிசையில், தற்போது அசத்தலான இரண்டு அப்டேட்களை கொண்டு வர உள்ளது. அதாவது, குரூப்களில் ஏதேனும் முறையற்ற, பொருத்தம் இல்லாத மெசேஜ்கள் யாராவது உறுப்பினர்கள் பதிவிட்டால் அதை குரூப் அட்மின் பார்வைக்கு குழுவில் உள்ள பிற நபர்கள் ரிபோர்ட் செய்யலாம்.
அதே போல், இதுபோல ரிப்போர்ட் செய்யும் மெசேஜை குழுவில் உள்ள பிற உறுப்பினர்களும் அழிக்கும் வசதியை குரூப் அட்மின் வழங்க முடியும். குரூப் செட்டிங்ஸ் பேஜில் இதற்கான ஆப்ஷன் இடம் பெற்றிருக்கும். குரூப் அட்மின் மட்டுமே இந்த வசதியை செயல்படுத்த முடியும். குரூப் இன்ஃபோ செட்டிங்ஸில் குழுவில் உள்ளவர்களால் ரிபோர்ட் செய்யப்படும் மெசேஜ்கள் அட்மின்களுக்கு காட்டும்.

அதேபோல், முன் பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை பயனர்கள் மியூட் செய்து வைக்க முடியும். வாட்ஸ் அப்பின் பிரைவேசி செட்டிங்சில் இதற்கான வசதியை வாட்ஸ் அப் கொடுத்துள்ளது. முன் பின் தெரியாத எண்களில் இருந்து அழைப்புகளை மியூட் செய்தாலும் போன் வருவதை பார்க்க முடியும்.
அதேபோல், கால்ஸ் டேப்பில் கடைசியாக வந்த கால்களின் வரிசையிலும் காட்டும். வாட்ஸ் அப்பில் வரப்போகும் புதிய அப்டேட்கள் குறித்து தகவல்களை வெளியிட்டு வரும் WABetaInfo- தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பில் விரைவில் வரப்போகும் என்று கூறப்படும் இந்த அப்டேட்கள் பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications