"முதலில் அழியப்போகும் 5 நாடுகள்.." கடைசி நாடு ரொம்ப பெரிய ஷாக்.. லிஸ்டில் இந்தியா இருக்கா? பகீர்
வாஷிங்டன்: கடந்த நூற்றாண்டில் உலகின் பல்வேறு நாடுகளும் மக்கள் தொகை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. ஆனால், அது எந்தளவுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பதை இப்போது தான் உணர தொடங்கியுள்ளன. இந்த மக்கள் தொகை பிரச்சினையால் அதிக ஆபத்தில் இருக்கும் 5 நாடுகள் குறித்து நாம் பார்க்கலாம்.
இன்று உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடந்த நூற்றாண்டில் பல நடவடிக்கைகளை எடுத்த நிலையில், இப்போது அதுவே உலக நாடுகளுக்குத் தலைவலியாக மாறியுள்ளது.

அப்படி மக்கள் தொகை சரிவால் மிகப் பெரிய பிரச்சினையை எதிர்கொள்ளும் 5 நாடுகள் குறித்து நாம் பார்க்கலாம்.
ஜப்பான்: இதில் லிஸ்டில் முதலில் இருக்கும் நாடு ஜப்பான்.. கடந்த 2017இல் ஜப்பான் நாட்டில் மக்கள் தொகை அதிகபட்சமாக 12.8 கோடியாக இருந்தது. இருப்பினும், அதன் பிறகு தொடர்ந்து அந்நாட்டு மக்கள்தொகை சரிந்தே வருகிறது. இதே நிலையில் தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் ஜப்பான் மக்கள் தொகை சரிபாதியாக அதாவது 5.3 கோடியாகக் குறையும்.
இப்போதே உலகில் அதிக வயதானவர்களைக் கொண்ட நாடாக ஜப்பான் இருக்கிறது. இதனால் அங்கு இப்போதே பலவித நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. வரும் காலத்தில், மக்கள் தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், இது பிரச்சினையை மேலும் மோசமாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2040க்குள் ஜப்பான் மக்கள் தொகையில் முதியவர்கள் எண்ணிக்கை 35%ஆக இருக்கும். இதனால் அந்நாட்டுப் பொருளாதாரமே கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஜப்பான் இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இதுவே முக்கிய பிரச்சினையாகும். அங்கு இப்போது பிறப்பு விகிதம் 1.4ஆக உள்ளது. ஆனால், இப்போதுள்ள மக்கள் தொகையைப் பராமரிக்கவே பிறப்பு விகிதம் 2.1ஆக இருக்க வேண்டும். குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பலன் கிடைப்பதில்லை. இதனால் ஜப்பான் பேரழிவை எதிர்நோக்கி உள்ளது.
இத்தாலி: அதேபோல இத்தாலியும் கிட்டதட்ட அதேபோன்ற பிரச்சினையைத் தான் எதிர்கொண்டுள்ளது. கடந்த 2017இல் இத்தாலி மக்கள் தொகை 6.1 கோடியாக இருந்த நிலையில், இந்த நூற்றாண்டின் இறுதியில் அது 2.8 கோடியாகச் சரியும் ஆபத்து இருக்கிறது. ஜப்பானைப் போலவே இத்தாலியிலும் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இத்தாலி மக்கள்தொகையில் 23%க்கும் அதிகமானோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
குழந்தை பிறப்பு விகிதம் குறைவதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இத்தாலி அரசு ஊக்கத் தொகையை எல்லாம் கொடுக்கிறது. இருப்பினும், எதுவும் பலன் தரவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே குறைவான பிறப்பு விகிதத்தைக் கொண்ட நாடாக இத்தாலி இருக்கிறது. இதனால் பல இத்தாலிய நகரங்கள் ஆட்களே இல்லாமல் பேய் நகரங்களாக மாறி வருகிறது.
தென்கொரியா: தென்கொரியாவிலும் உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் மக்கள் தொகை படுவேகமாக சரிந்து வருகிறது. உலகிலேயே மிகக் குறைவாக தென்கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் 0.78ஆக உள்ளது. தென்கொரிய மக்கள்தொகை 5.2 கோடியாக இருக்கும் நிலையில், பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை என்றால் 100 ஆண்டுகளில் அது 1.2 கோடியாகக் குறையும் அபாயம் இருக்கிறது.
இளைஞர்களிடையே வேலை குறித்த பாதுகாப்பின்மை, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, குழந்தை பராமரிப்பு செலவு அதிகரிப்பது, வயதான மக்கள்தொகை ஆகியவை தென்கொரியா மக்கள் அதிகம் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கக் காரணமாகும்.
ஈரான்: இஸ்லாமிய நாடாக இருந்தாலும் ஈரான் நாடும் மக்கள் தொகை சரிவை எதிர்நோக்கி இருக்கிறது. 1979 இல் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு நாடு மக்கள்தொகை அதிகரித்தாலும், அந்நாட்டு அரசு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கையை அமல்படுத்தியது. இதனால் மக்கள் தொகை படுவேகமாக சரிவடைந்தது. இப்போது அடுத்த 30 ஆண்டுகளில் வயதான நாடுகளில் ஒன்றாக மாறும் ஆபத்தும் ஈரானுக்கு இருக்கிறது.
சீனா: இந்த லிஸ்டில் 5வது இருக்கும் நாடு சீனா.. இந்த லிஸ்டில் சீனா வரும் என சில ஆண்டுகளுக்கு முன்பு யாராவது சொல்லி இருந்தால் அதை யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். 100+ கோடி மக்கள் தொகையுடன் 2ஆவது அதிகபட்ச மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருக்கும் சீனாவிலும் இதே சிக்கல் என்றால் பலரும் அதை நம்ப மாட்டார்கள். இதற்கு முக்கிய காரணமே சீனா 1970களில் கொண்டு வந்த ஒரு குழந்தை பாலிசி தான்.
இதை மிகக் கடுமையாக அமல்படுத்தியதால் மக்கள் தொகை சரிய ஆரம்பித்துள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் அதன் மக்கள் தொகை சரிபாதியாகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது சீனாவுக்குப் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய அடியைக் கொடுக்கும். அந்நாட்டின் பொருளாதாரமே நாசமடைய வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications