வெளிநாடுகளில் அதிக சொத்து.. முதலிடத்தில் அமெரிக்கா இல்லை.. அப்போ யார்! அது சரி இந்தியா எங்கே பாருங்க
வாஷிங்டன்: பொதுவாகவே பல்வேறு காரணங்களுக்காகத் தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களைக் கணிசமாக வெளிநாடுகளில் வைத்துக் கொள்வார்கள். இது உலகின் அனைத்து நாடுகளிலும் இருக்கும் நடைமுறை தான். இதற்கிடையே வெளிநாடுகளில் அதிக சொத்துகள் கொண்ட நாடுகள் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. இதில் முதலிடத்தில் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெரு நிறுவனங்கள், பிஸ்னஸ்மேன்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். குறிப்பாகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பு, குறைந்த வரி உள்ளிட்டவை முக்கிய காரணமாக இருக்கிறது.

இது குறிப்பிட்ட நாட்டின் செல்வம் தான் என்றாலும் அவை சொந்த நாட்டில் இல்லாமல் வெளிநாடுகளில் இருக்கும். இதை ஆங்கிலத்தில் offshore wealth என்று அழைப்பார்கள்.
அதிக சொத்து: இப்படி வெளிநாடுகளில் அதிக சொத்துகளைக் கொண்ட நாடுகள் எவை என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக இதுபோன்ற முதலீடு, பொருளாதாரம் சார்ந்த லிஸ்ட் என்றால் முதலில் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகள் தான் வரும் என்றே பலரும் நினைப்போம். ஆனால், உண்மையில் இந்த லிஸ்டில் டாப் இடத்தில் அமெரிக்காவும் இல்லை ஐரோப்பிய நாடுகளும் இல்லை.
முதலிடம் அமெரிக்கா இல்லை: வெளிநாடுகளில் அதிக சொத்துகள் கொண்ட நாடுகள் லிஸ்டில் முதலிடத்தில் சீனா இருக்கிறது. சீனா சுமார் 2.1 டிரில்லிடன் டாலர் சொத்துகளை இதுபோக ஆஃப் ஷோர் சொத்துகளாக வைத்துள்ளது. சீனாவை இரண்டாம் இடத்தில் தான் அமெரிக்கா வருகிறது. அமெரிக்கா சுமார் 1.6 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை வெளிநாடுகளில் வைத்துள்ளது.
மூன்றாவது இடத்தில் தான் ஐரோப்பிய நாடான பிரிட்டன் வருகிறது. அந்த நாடு சுமார் 1.2 டிரில்லியன் டால் சொத்துகளை வெளிநாடுகளில் வைத்திருக்கிறது. இந்த 3 நாடுகள் மட்டுமே 1 டிரில்லியன் டாலருக்கு மேலான சொத்துகளை வெளிநாடுகளில் வைத்துள்ளது.
எங்கே: இவை குறிப்பிட்ட நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என்று அனைத்து தரப்பும் வெளிநாட்டில் வைத்திருக்கும் சொத்துகள் ஆகும். சீனா $2 டிரில்லியனுக்கு மேல் சொத்துக்களை வெளிநாட்டில் வைத்துள்ள நிலையில், இது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மெக்சிகோவின் ஜிடிபிக்கு இணையானதாகும். சீன மக்கள் பெரும்பாலும் ஹாங்காங்கில் தான் தனது சொத்துகளை அதிகம் வைத்துக் கொள்கிறார்களாம். இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்க மக்கள் கேமன் தீவுகள், சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் தான் சொத்துகளை அதிகம் வைத்துக் கொள்கிறார்கள்.
இந்தியா எங்கே: இந்த டாப் 3 நாடுகளுக்குப் பிறகு தைவான் 700 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்தில் வருகிறது. அதைத் தொடர்ந்து 570 பில்லியன் டாலருடன் ஐக்கிய அமீரகம் 5வது இடத்திலும், 545 பில்லியன் டாலருடன் பிரான்ஸ் 6ஆவது இடத்திலும் வருகிறது. தொடர்ந்து சவதி அரேபியா (407 பில்லியன் டாலர்), ஜெர்மனி (377 பில்லியன் டாலர்), ஜப்பான் (352 பில்லியன் டாலர்), கனடா (301 பில்லியன் டாலர்) ஆஃப்ஷோர் சொத்துக்கள் டாப் 10 இடங்களில் உள்ளன.
இதில் இந்தியா டாப் 20 நாடுகளில் கூட இல்லை.. இந்தியா இந்த லிஸ்டில் 48ஆவது இடத்தில் உள்ளது. இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சுமார் 29 பில்லியன் டாலரை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது..
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications