அதானி லஞ்ச விவகாரம்.. வெள்ளை மாளிகை மிக முக்கிய கருத்து.. இந்தியா அமெரிக்கா உறவு என்னவாகும்?
வாஷிங்டன்: அதானி லஞ்ச புகார் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் Solar Energy Corporation of India என்ற பொதுத்துறை நிறுவனத்துடன் அதானி நிறுவனம் முக்கிய ஒப்பந்தங்களைப் போட்டுள்ளன. இந்த திட்டங்களுக்கு அதானி குழுமம் அமெரிக்காவில் இருந்து ரூ 20,000 கோடிக்கு முதலீடுகளைப் பெற்றுள்ளன.

அதானி: அதேநேரம் இந்த எஸ்இசிஐ நிறுவனத்துடன் மாநில அரசுகள் ஒப்பந்தங்கள் செய்தால் மட்டுமே தங்கள் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாது என்பதற்காக பல்வேறு மாநிலங்களின் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. அதாவது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வலுவாக உறவுகள் நிலையில், அதானிக்கு எதிரான லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்த நடவடிக்கையில் அது பெரியளவில் உதவும் என்று வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் தலைவரான அதானிக்கு குற்றச்சாட்டுகள் குறித்து பைடன் நிர்வாகத்திற்குத் தெரியும் என்றும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு: மின்துறை தொடர்பாக பல்வேறு மாநிலங்களின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட சிலர் மீது ஊழல் புகாரை அமெரிக்க அதிகாரிகள் நேற்று குற்றஞ்சாட்டியிருந்தனர். அது தொடர்பான கேள்விக்கே வெள்ளை மாளிகை தரப்பில் இந்த பதில் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக கரீன் ஜீன்-பியர் மேலும் கூறுகையில், "இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எங்களுக்குத் தெரியும்.. அதேநேரம் அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்துக் கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் நீதித் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்" என்றார்.
இந்தியா அமெரிக்கா உறவு: இந்த விவகாரத்தால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு அவர், "இந்தியா அமெரிக்கா இடையே வலுவான உறவு இருக்கிறது. இரு நாட்டு மக்களின் நலன் சார்ந்த இந்த உறவு சுமுகமாகவே இருப்பதாக நம்புகிறோம். எனவே, சிக்கல்களைத் தாண்டி இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.
பின்னணி என்ன: கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசின் SECI நிறுவனத்துடன் அதானி குழுமம் சூரிய ஒளி மின்சார உற்பத்தி குறித்த ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டு இருந்தது. இது 12 ஜிகாவாட் சூரிய சக்தியை வழங்கும் ஒப்பந்தமாகும். இருப்பினும், அப்போது மாநில அரசுகள் அதை வாங்க முன்வரவில்லை என்பதால் அந்த ஒப்பந்தம் ரத்தாகும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே மாநில மின்துறை அதிகாரிகளுக்கு அதானி தரப்பில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. சுமார் ரூ. 2000 கோடி வரை லஞ்சம் தரப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications