"70 மணி நேரம் தான் டைம்.." மாயமான டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல்.. உள்ளே சிக்கிய பெரும் தொழிலதிபர்கள்
வாஷிங்டன்: நீரில் புதைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களைக் காணச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற கப்பல் மூழ்கிய நிலையில், அது குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான இடத்திற்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டுபிடிக்கும் பணிகள் தான் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது.
டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்களைப் பார்க்கக் கிளம்பி இரண்டு மணி நேரத்தில் சிக்னல் கட் ஆகியுள்ளது. அந்த கப்பலில் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் 70 மணிநேரம் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருக்கும் நிலையில், அதைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

டைட்டானிக்: கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் தான் டைட்டானிக் மூழ்கியது. அதன் சிதிலமடைந்த பகுதிகள் அட்லாண்டிக் கடலில் 3,800 மீட்டர் ஆழத்தில் இருக்கிறது. அதைக் காணச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் தான் இப்போது மாயமாகியுள்ளது. இதற்கிடையே அந்த நீர்மூழ்கிக் கப்பலில் யார் இருந்தார்கள் தொடங்கிப் பல கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலில் அதிகபட்சம் ஐந்து பேரை அழைத்துச் செல்லும் திறன் கொண்டதாகும். மாயமான போது உள்ளே பிரிட்டிஷ் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 வயதான அவர் ஒரு விமானி மற்றும் விண்வெளி சுற்றுலாவில் ஆர்வம் கொண்டவர். மேலும், துபாயில் ஆக்ஷன் ஏவியேஷன் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்களைக் காணச் செல்வதாக அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
பணக்காரர்கள்: பாகிஸ்தான் தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகியோரும் நீர்மூழ்கி கப்பலில் இருந்ததாக சர்வேச ஊடகங்கள் கூறுகின்றன. அவர்களது குடும்பத்தினர், "எங்கள் மீது அக்கறை காட்டியவர்களுக்கு நன்றி... அவர்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாக்கிஸ்தானின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான என்க்ரோ கார்ப்பரேஷனின் துணைத் தலைவராக உள்ளவர் தான் இந்த தாவூத். இந்த நிறுவனம் உரங்கள், வாகன உற்பத்தி, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எனப் பல துறைகளில் முதலீடுகளைச் செய்துள்ளன. அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பிரிட்டனில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அவர்களின் நிலை என்ன: ஓஷன்கேட் (OceanGate) என்ற கம்பெனியின் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ், பிரெஞ்சு விமானி பால்-ஹென்றி நர்ஜோலெட் ஆகியோரும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்ததாக கூறப்படுகிறது. உள்ளே இருந்த இவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. கிளம்பிய 2 மணி நேரத்தில், கப்பல் உடனான சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது
10,432 கிலோ எடை கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் 13,100 அடி ஆழத்தை எட்டும். அட்லாண்டிக் கடல் பகுதியில் இருக்கும் டைட்டானிக் பாகங்களைப் பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளைக் காண இதில் தான் அழைத்துச் செல்வார்கள். இதில் ஒரு முறை செல்லவே கட்டணம் அதிகம் என்பதால் எப்போதும் பெரும் பணக்காரர்களே இதில் பயணிப்பார்கள். அதற்கேற்ப உள்ளே இருப்பவர்களும் பெரும் பணக்காரர்கள் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications