தமிழ் பேசும் பிராமணர்.. விவேக் ராமசாமி யார்? முக்கிய பொறுப்புக்கு டிரம்ப் தேர்வு செய்தது எப்படி?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் மற்றும் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோரை அவரது அரசின் செயல்திறன் துறையின் தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். தமிழ் பேசும் பிராமண குடும்பத்தை சேர்ந்த விவேக் ராமசாமியை டொனால்ட் டிரம்ப் அந்த பதவிக்கு தேர்வு செய்தது எப்படி?என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசை தோற்கடித்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 2025 ஜனவரி மாதம் 20ம் தேதி அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது டொனால்ட் டிரம்ப் தனது அரசின் நிர்வாகத்துக்கு ஏற்ப நியமனங்களை செய்து வருகிறார்.

அதன்படி டொனால்ட் டிரம்ப் எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார். எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்க அரசின் செயல்திறன் துறையை வழிநடத்துவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரை அரசின் செயல்திறன் துறை என்பது பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தேவையில்லாத செலவை குறைப்பதில் இந்த துறை முக்கிய பங்காற்றும். அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் டொனால்ட் டிரம்புக்கு பக்கபலமாக இருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு இந்த பதவிகளை டொனால்ட் டிரம்ப் வழங்கி உள்ளார்.
இதில் எலான் மஸ்க் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்பதும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிாரி என்பதும் நமக்கு தெரியும். ஆனால் விவேக் ராமசாமி பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். இவர் யார் என்றால் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்.
இவரது பெற்றோர் கேரளாவை சேர்ந்த தமிழ் பேசும் பிராமணர்கள். விவேக் ராமசாமியின் தந்தை பெயர் கணபதி ராமசாமி. இவர் கொல்கத்தாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் படித்து இன்ஜினியராக பணியாற்றினார். அதன்பிறகு
ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார். விவேக் ராமசாமியின் தாய் பெயர் கீதா. இவர் மைசூர் மருத்துவுக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிப்பை முடித்து சைக்கார்ட்டிஸ்டாக பணியாற்றினார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியில் வசித்து வந்தனர். அதன்பிறகு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். விவேக் ராமசாமி 1985ம் ஆண்டில் அமெரிக்காவின் ஓஹியோவின் சின்சினாட்டி சிட்டியில் பிறந்தார். இந்து மதம் மீது அதிக நம்பிக்கை கொண்டவராக விவேக் ராமசாமி உள்ளார். தற்போது அவர் ஓஹியோவை தலைமையிடமாக கொண்ட பயோ டெக் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் குடியரசு கட்சியில் செயல்பட்டு வருகிறார். அந்த கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினார். ஆனால் கடைசி நேரத்தில் டொனால்ட் டிரம்ப்புக்காக போட்டியில் இருந்து விலகினார். அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் வெற்றிக்காக கடினமாக உழைத்தார். இதனால் தான் டொனால்ட் டிரம்ப் அவருக்கும், எலான் மஸ்க்கிற்கும் இந்த பொறுப்பை வழங்கி உள்ளார்.
மேலும் விவேக் ராமசாமி இந்து மதம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். இதுபற்றி அவர் வெளிப்படையாகவே பேசியிருந்தார். அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட தயாராகி வந்தபோது கடந்த ஆண்டு ‛தி ஃபேமிலி லீடர்' மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் விவேக் ராமசாமி பேசும்போது, ‛‛ நான் ஒரு இந்து. உண்மையாக ஒரு கடவுள் இருக்கிறார் என்பதை நான் நம்புகிறேன். எனது குடும்பம் ஒரு பாரம்பரியமான குடும்பம். குடும்பத்தை பற்றி என் பெற்றோர் எனக்கு கற்று கொடுத்துள்ளனர். குடும்பம் தான் அடித்தளம் என எனக்கு கற்று கொடுத்துள்ளனர். பெற்றோரை மதிக்க வேண்டும். திருமணம் என்பது புனிதமானது.
மேலும் நான் கிறிஸ்டியன் உயர்நிலை பள்ளிக்கு சென்றேன். அங்கு 10 கட்டளைகளை கற்றுக்கொண்டோம். பைபிள் படித்தோம், வேத வகுப்புகள், கடவுள் உண்மையானவர், உண்மையான கடவுள் ஒருவர் இருக்கிறார். பெற்றோரை மதிக்க வேண்டும். பொய் சொல்லக்கூடாது. திருடக்கூடாது. சட்டவிரோதமான உறவில் இருக்க கூடாது என பல விஷயங்களை கற்று கொண்டேன். உண்மையில் இதுபோன்ற விழுமியங்கள் என்பது இந்துக்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ சொந்தமானது அல்ல. இது கடவுளுக்கு சொந்தமானது.
நாடு முழுவதும் கிறிஸ்தவத்தை வளர்க்கக்கூடிய அதிபராக என்னால் இருக்க முடியுமா? என்னால் முடியாது. அதோடு அமெரிக்க அதிபரும் அதைத்தான் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் பாதிக்கப்படுபவர்களுக்காக நான் நிற்பேன். அடுத்த தலைமுறைகளுக்காக நாம் செய்யும் செயல்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்வேன். அது தான் என் கடமை'' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென சீனா பக்கம் திரும்பி நேரடி வார்னிங்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
கடலில் கண்ணிவெடி வச்ச இடத்தை மறந்த ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியில் பெரிய டேஞ்சர்.. போச்சு! -
அடங்க மறுக்கும் ஈரான்.. விடாமல் விரட்டும் ட்ரம்ப்.. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வெடிக்கும் போர்? -
ஒப்பந்தம் ஏற்படாமல் போகட்டு, அப்புறம் இருக்கு.. பேச்சுவார்த்தைக்கு முன்பே ஈரானை மிரட்டும் அமெரிக்கா -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா!












Click it and Unblock the Notifications