இந்தியா கனடா மோதல்.. அமெரிக்காவின் ஆதரவு யாருக்கு இருக்கும்.. போட்டு உடைத்த Ex பென்டகன் அதிகாரி
வாஷிங்டன்: ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவை விடக் கனடாவுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறிய முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின், இந்த மோதலில் இந்தியா கனடா நாடுகளில் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அங்கே காலிஸ்தான் பயங்கரவாதி கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு இந்தியா காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும்.

இதற்கிடையே இது குறித்து அமெரிக்கா பாதுகாப்புத் துறையான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக அமெரிக்கா யாருடைய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் என்பது குறித்தும் அவர் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
மிகப் பெரிய தவறு: இது குறித்து அவர் கூறுகையில், "பிரதமர் ட்ரூடோ மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்றே நினைக்கிறேன். திரும்பி எடுக்கவே முடியாத சில குற்றச்சாட்டுகளை அவர் இப்போது முன்வைத்துள்ளார். ட்ரூடோவிடம் இப்போது அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என நினைக்கிறேன். அனைத்தையும் தாண்டி அவரது அரசு பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு ஏன் அடைக்கலம் கொடுத்தது என்பதை அவர் விளக்க வேண்டும்.
இந்த இரண்டில் எதாவது ஒரு நாட்டிற்கு நிச்சயம் ஆதரவாக இருக்க வேண்டும் என்ற நிலைக்கு அமெரிக்கா தள்ளப்படவில்லை. இருப்பினும், அப்படி இந்த இரு நட்பு நாடுகளுக்கு இடையே ஒரு நாட்டை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அமெரிக்கா இந்தியா ஆதரவு நிலைப்பாட்டையே எடுக்கும் என நினைக்கிறேன். இதற்கான காரணம் ரொம்பவே சிம்பிள். முதலில் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் ஒரு பயங்கரவாதி.. அடுத்து இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு இப்போது ரொம்பவே முக்கியமாகும்.
ஏன் இந்த முடிவு: இருப்பினும். இப்படியொரு முடிவை எடுத்தால் அது அமெரிக்கா கனடா உறவைப் பாதிக்குமே என நீங்கள் கேட்கலாம். ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் நிச்சயம் நீண்ட காலம் பிரதமராக இருக்கப் போவது இல்லை. எனவே, அவருக்குப் பிறகு வேறு ஒருவர் பிரதமரான பிறகு, அமெரிக்கா உடனான உறவைச் சரி செய்யலாம்.
நான் உளவு பார்க்கும் பிரிவிலும் வேலை செய்துள்ளேன். எனது அனுபவத்தில் நான் சொல்கிறேன்.. தொலைப்பேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்பதில் இருந்து கிடைக்கும் தகவல்களை நாம் முழுமையாக நம்ப முடியாது. அவை கட் ஆகி கட் ஆகி இருக்கும். எனவே, அதை மட்டுமே ஒரு ஆதாரமாக எல்லாம் சொல்ல முடியாது.

கொலை செய்துள்ளார்: நீங்கள் மற்றொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் வெறுமனே ஒரு பிளம்பர் அல்ல. ஒசாமா பின்லேடனை எப்படி ஒரு சாதாரண என இன்ஜினியர் எனச் சொல்ல முடியாதே.. அதேபோல ஹர்தீப்பை வெறும் பிளம்ர் எனச் சொல்ல முடியாது. அவர் பல்வேறு தாக்குதல்களில் பலரைக் கொலை செய்துள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் இந்தியாவும் கனடாவும் மாறி மாறி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கனடா நாட்டவருக்கான அனைத்து விசா நடைமுறைகளையும் இந்தியா மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் வரும் காலத்தில் மேலும் மோசமாகும் என்றும் அஞ்சப்படுகிறது.
-
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications