"என்றும் இளமை.." 17 வயது மகனின் ரத்தத்தை தனக்குள் செலுத்தும் தொழிலதிபர்! மிரளும் நெட்டிசன்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ரத்த பிளாஸ்மா சிகிச்சையை எடுத்துக் கொள்கிறார். இது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பிரையன் ஜான்சன் என்பவருக்கு வயது 45.. ஆனால், அவரை பார்த்தால் 45 வயதான நபரைப் போல இருக்க மாட்டார். பார்க்க 20களில் இருக்கும் நபரைப் போலவே இருப்பார்.

அவரால் மட்டும் இந்த வயதில் எப்படி இளமையாக இருக்க முடிகிறது. இதற்காக அவர் என்ன செய்கிறார் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இவர் செய்த இந்த காரியத்தைக் கேட்டால் பலரும் ஒரு நிமிடம் ஷாக் ஆகிவிடுவார்கள்.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி 45 வயதான இந்த பிரையன் ஜான்சன் தனது தந்தை ரிச்சர்ட் (70 ), மகன் டால்மேஜ் (17) உடன் டல்லாஸுக்கு அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அதிகாலை வந்த அவர்களுக்குத் தொடர்ச்சியாகப் பல மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரத்த பிளாஸ்மாவை மாற்றும் சிகிச்சை தரப்பட்டுள்ளது.
என்ன சிகிச்சை: முதலில் ஒரு லிட்டர் ரத்தத்தை 17 வயதான டால்மேஜ் உடலில் இருந்து எடுத்துள்ளனர். ஒரு இயந்திரம் மூலம் திரவ பிளாஸ்மா, சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை பிரித்து எடுத்துள்ளனர். அடுத்து பிரையனுக்கும் இதேபோல செய்துள்ளனர்.. கூடுதலாக அவரது மகனின் பிளாஸ்மாவை செலுத்தியுள்ளனர். அதேபோல தந்தை ரிச்சர்ட்டுக்கு பிரையனின் பிளாஸ்மைவை செலுத்தியுள்ளனர்.
எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு இளைஞர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் திரவங்களை தங்கள் ஊடலில் செலுத்திக் கொள்ளும் வயதான பணக்காரர்கள் குறித்து நாம் பல ஹாலிவுட் படங்களில் பார்த்து இருப்போம். ஆனால், இப்போது அதுவே தான் உண்மையில் நடந்து வருகிறது.

இது குறித்த ஆய்வுகள் பல காலமாக எலிகளை வைத்து நடத்தியுள்ளனர். வயதான எலிகளின் உடல்களில் இளம் வயது எலிகளின் ரத்தத்தைச் செலுத்தும் போது அது புத்துணர்ச்சியாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதன் பின்னர் பல கட்ட சோதனைக்குப் பின்னரே மனிதர்களை வைத்து இந்த சோதனையைச் செய்யத் தொடங்கியுள்ளனர். இதில் ஓரளவுக்கு வெற்றியும் கிடைப்பதாகவே மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
யார் இவர்: டெக் துறையில் முக்கிய தொழிலதிபராக வலம் வரும் ஜான்சனுக்கு இது ஒன்றும் புதிய முறை இல்லை. அவர் இதுபோல மாதங்களாகத் தொடர்ச்சியாக இந்த முறையில் உடலில் பிளாஸ்மாவை ஏற்றிக் கொண்டே வந்துள்ளார். இதன் காரணமாகவே அவரால் எப்போதும் இளமையாக இருக்க முடிந்துள்ளது. ஆனால், சொந்த குடும்பத்தினரிடம் இருந்து அவர் பிளாஸ்மாவை பெறுவது இதுவே முதல்முறையாம்.
வழக்கமாக அவர் யாரென்றே தெரியாத நபர்களிடம் இருந்து தான் பிளாஸ்மாவை பெறுவாராம். அதேநேரம் யாரிடம் இருந்து பெறப்படுகிறது என்பதையும் அவர் தீவிரமாக ஆய்வு செய்வாராம். அவர் இளைஞராக மட்டுமின்றி ஃபிட்டாகவும் எந்தவொரு நோயும் இல்லாமல் இருப்பதையும் பிரையனே ஒவ்வொரு முறையும் உறுதி செய்து கொள்வாராம்.

பல கோடி செலவுL பிரையன் ஜான்சன் இப்படி எப்போதும் இளமையாக இருக்கவே ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் டாலர்களைச் செலவழித்து வருகிறார்.. மேலும் வயதாகும் செயல்முறையைத் தடுக்க வேண்டும் என உறக்கம், உடற்பயிற்சி, உணவு என அனைத்தையும் அவர் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார். இதற்காகவே தனியாக அவர் ஒரு மருத்துவர் குழுவையும் வைத்துள்ளார்.
மேலும், ஜான்சன் தான் பின்பற்றும் செயல்முறை மற்றும் முடிவுகளைப் பொதுவெளியில் தொடர்ந்து வெளியிடுகிறார். இதன் மூலம் மற்றவர்கள் பயனடையலாம் என்பது அவரது கருத்து.
பொதுவாக பிளாஸ்மா சிகிச்சை என்பது, கல்லீரல், தீக்காயங்கள், ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றின் சிகிச்சைக்குப் பயன்படும். கொரோனா காலகட்டத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களிடம் இருந்து பிளாஸ்மாவை எடுத்து நோயாளிகளுக்கு அளித்தும் சிகிச்சை தரப்பட்டது. அந்த பிளாஸ்மாவை தான் இவர் எப்போதும் தன்னை இளமையாக வைத்துக் கொள்ளப் பயன்படுத்தி வருகிறார்.
-
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
"Make Kerala Great Again.." கேரளாவில் வீதி வீதியாக வாக்கு கேட்கும் டிரம்ப்.. டிரெண்டாகும் வீடியோ -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications