'ராக் மம்மி..' கால் பட்டாலே கல்லாகிவிடுவோம்.. விலங்குகளை சிலையாக மாற்றும் ஏரி.. மிரளும் மக்கள்
வாஷிங்டன்: தான்சானியாவின் வடக்கு எல்லையில் ஏரி ஒன்று இருக்கிறது. அந்த ஏரியில் எந்தவொரு விலங்கு அல்லது பறவை விழுந்தாலும் அது அப்படியே கல் சிலை போல மாறிவிடுகிறது. அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
நாம் இந்த பிரபஞ்சம் குறித்து ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். பல கோடி கிமீ தொலைவில் இருக்கும் கிரகங்கள் குறித்து ஆய்வு செய்ய எல்லாம் ராக்கெட் அனுப்பி வருகிறோம்.
ஆனால், இந்த பூமியே பல மர்மங்களையும் அதிசயங்களையும் கொண்டதாகவே இருக்கிறது. பூமியில் இருக்கும் பல மர்மங்களுக்கே நாம் இன்னும் கூட பதில்களைக் கண்டறியவில்லை. இதற்கான ஆய்வுகளும் தீவிரமாக நடந்த வருகிறது.

பூமி
நமது கிரகத்தில் இயற்கையின் பெரிய மர்மங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துவதாக உள்ளது. முதலில் நாம் சாதாரணமாக நினைத்த விஷயங்கள் பின்னாட்களில் ஆச்சரியப்படுத்துவதாக மாறலாம். அப்படியொன்று தான் இந்தியாவில் உள்ள லோனார் ஏரி. இது பூமிக்கும் மற்ற கிரகத்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டுவதாக உள்ளது. பிங்க் நீர்நிலை என்ற இந்த பகுதி சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளீஸ்டோசீன் காலகட்டத்தில் உருவானது. அப்போது விண்வெளியில் இருந்து வந்த ஒரு மாபெரும் விண்கல் மோதி இந்த நீர்நிலை உருவானதாக நம்பப்படுகிறது.

தான்சானியா
அந்த விண்கல் மோதிய போது, 2 கிமீ அகலத்திற்கு சுமார் 170 மீட்டர் ஆழத்தில் இந்த பள்ளம் உருவானது. உலகிலேயே இதுபோல பாசால்டிக் பாறை மோதியதால் உருவான ஒரே பள்ளம் இதுதான். லோனாரில் உள்ள நீர் அல்கலைன் தன்மை உடையதாகும். அதேபோல சுவாரசியமான மற்றொரு நீர்நிலை உள்ளது. இந்த நீர் நிலையில் எந்தவொரு உயிரினமும் கை பட்டாலே கூட அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அந்த ஏரி தான் நேட்ரான் ஏரி.. இந்த நேட்ரான் ஏரி தான்சானியாவின் வடக்கு எல்லையில் உள்ள ஒரு சால்ட் அல்லது அல்கலைன் ஏரி ஆகும்.

கற்களை போல
அந்த பகுதி ஃபிளமிங்கோ எனப்படும் பூநாரை இன பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் பகுதியாக இருந்தாலும் கூட, இங்கிருக்கும் நீரைத் தொட்டாலே பறவை உள்ளிட்ட மற்ற விலங்கள் உடனடியாக மோசமான பாதிப்பைத் தொடர்பு கொள்கிறது. அவை காலப்போக்கில் கற்களைப் போலக் கடினமாக மாறி சிதைந்து விடுகிறது. தண்ணீரில் இருக்கும் அதிக உப்பு மற்றும் காரத்தன்மை காரணமாக இது நிகழ்கிறது. இந்த ஏரியில் pH 12ஐ விட அதிகமாக இருக்கிறது. இந்த நேட்ரான் ஏரியின் நீருடன் விலங்குகள் தொடர்பு கொள்ளும்போது, அவற்றின் உடல் திசுக்களில் கால்சியம் உப்புகள் குவியத் தொடங்குகின்றன. இது கால்சிஃபிகேஷன் என்று அழைக்கப்படுகிறது.

பிங்க் ஏரி
மேலே பட்ட உடன் அது உயிர் பிழைக்க எந்தவொரு வாய்ப்பும் இல்லாமல் போகிறது. ஏரியில் விழும் விலங்குகள் மேற்பரப்பில் கற்களைப் போல மாற தொடங்குகின்றன. அதன் தனித்துவமான பண்புகள் மற்றும் பாக்டீரியா காரணமாகவே ஏரி பிரகாசமான பிங்க் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. நேட்ரான் ஏரியைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் யாரும் வசிக்கவில்லை. இருப்பினும், அங்கே கால்நடை வளர்ப்பு மற்றும் சாகுபடி நடக்கும். இந்த ஆபத்தான பண்புகளால் மக்கள் யாரும் அங்கு வசிக்கவில்லை என்றாலும் கூட இது முக்கிய சுற்றுலா தளமாகவே இருக்கிறது.

சுற்றுலாப் பயணிகள்
உலகெங்கும் பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்த நேட்ரான் ஏரிக்கு வருகிறார்கள். இருப்பினும், நிர்வாக சிக்கல், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் போவது, மோசமான உள்கட்டமைப்பு ஆகிய காரணங்களால் இது சுற்றுலா தளமாகவும் இருக்கிறது. அதேநேரம் இங்கு வரும் பல புகைப்படக் கலைஞர்கள் நேட்ரான் ஏரியில் மம்மி போல அப்படியே கற்களைப் போல மாறியிருக்கும் பறவைகள் மற்றும் விலங்குகளின் அதிர்ச்சியூட்டும் காட்சிகளைப் படம்பிடித்துள்ளனர்.

படங்கள்
குறிப்பாக நிக் பிராண்ட் இந்த ஏரியில் கல்லாக மாறியிருக்கும் பல விலங்குகளின் படங்களை எடுத்துள்ளார். அவரது பல படங்கள் வினோதமாகவே இருக்கும். வவ்வால்கள், கழுகுகள், நாரை உள்ளிட்ட பறவைகள் எப்படி கற்கலை போல மாறிவிடுகிறது என்பதை இவர் பதிவு செய்துள்ளார்.ஏரியில் விழுந்தவுடன் விலங்குகள் மிகச் சிதையத் தொடங்குகின்றன. அதேநேரம் ஆனால் ஏரியின் விளிம்பில், உயிரினங்கள் உப்பில் மூழ்கிவிடுகின்றன.. இவை கற்கலை போலத் தோற்றமளிக்கின்றன.












Click it and Unblock the Notifications