இது ஓவரா இருக்கே.. மொபைல் வாங்க.. பிளைட்டில் பறக்கும் மக்கள்.. மொத்த நாடே அப்படிதானாம்! ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஐபோன்களுக்கு எப்போதுமே தனியாக ஒரு மவுசு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இந்த நாட்டில் யாரும் தங்கள் சொந்த நாட்டில் ஐபோன் தொடங்கி எந்த ஆப்பிள் தயாரிப்புகளையும் வாங்க மாட்டார்களாம். அது ஏன்? ஐபோன் வாங்க என்ன செய்வார்கள் என்பதை பார்க்கலாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு டெக் உலகில் எப்போதுமே தனியாக ஒரு மவுசு இருக்கவே செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் ஐபோன் வெளியீட்டு விழா என்பது கிட்டதட்ட சினிமா பட விழாக்களைப் போலப் பல பில்டப்கள் உடன் தான் நடக்கும்.

முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது பெரிய மாற்றம் இல்லையென்றாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் ஐபோனை மாற்றப் பலரும் வரிசை கட்டி நிற்பார்கள். நம்மைச் சுற்றிலும் நாம் நிச்சயம் பலரை இப்படிப் பார்த்திருப்போம்.

 why Brazilians flying to US to buy iphone and other apple products

ஐபோன்கள்: வெளிநாடுகளில் இது இன்னுமே மோசமாக இருக்கும் அவர்களுக்கு ஐபோன்கள் மீது அவ்வளவு ஆர்வம் இருக்கும். இதனிடையே இந்த நாட்டில் ஐபோன்களை வாங்குவதற்காகவே இவர்கள் வெளிநாட்டிற்கு அதிலும் குறிப்பாக அமெரிக்காவிற்கு விமானத்தில் சென்று வாங்குவார்களாம். அதிலும் ஏதோ ஓரிருவர் இல்லை. இங்கே ஐபோன் வாங்க விரும்பும் பலரும் இப்படிதான் வாங்குகிறார்கள். இதற்கு என்ன காரணம் ஏன் சொந்த நாட்டில் வாங்காமல் அமெரிக்கா சென்று வாங்குகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புதிய வகை ஐபோன்களை வெளியிட்டு வருகிறது. அதன் லேட்டஸ்ட் மொபைல் ஐபோன் 14 சீரியஸ். இதில் ஐபோன் 14 மினி தொடங்கி பல்வேறு வகைகளில் போன்கள் உள்ளன. கடந்த செப். மாதம் வெளியான பல அட்டகாசமான வசதிகளுடன் வெளியான இந்த ஐபோன் வெளியானது முதலே ஹிட் அடித்துவிட்டது

 why Brazilians flying to US to buy iphone and other apple products

விலை: பொதுவாகவே மற்ற போன்களை பார்த்தால் பெரும்பாலும் அவை உலகளவில் கிட்டதட்ட ஒரே விலையில் தான் இருக்கும். ஆனால், ஐபோன்கள் அப்படியில்லை. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் விலை என்பது மாறுபடும். அதற்கு முக்கிய காரணமே.. வரி, போக்குவரத்து செலவு உள்ளிட்டவை இதற்குக் காரணமாகும். அனைத்து மொபைல் நிறுவனங்களுக்கும் இந்த செலவு இருந்தாலும், பெரும்பாலும் அந்த நிறுவனங்களே லாபத்தைக் குறைத்து இந்த செலவை எடுத்துக் கொள்ளும். ஆனால், ஆப்பிள் அப்படிச் செய்யாது.

என்ன விலை கொடுத்தும் ஐபோன் வாங்க மக்கள் தயாராக இருப்பதால், அவர்கள் விலையை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு ஏற்றிவிடுவார்கள். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் ஐபோன் 15 ப்ரோ மாடல் அமெரிக்காவில் அதன் விலை வெறும் 799 டாலர் (ரூபாய் 79,648) தான். அதேநேரம், இதே பிரேசில் நாட்டில் ஐபோன் ப்ரோ வாங்க வேண்டும் என்றால் 1.45 லட்சம் தர வேண்டும். இந்தியாவில் இதன் விலை 1.29 லட்சம் வரை இருக்கும். உலகளவில் ஐபோன் மிகவும் காஸ்ட்லியாக உள்ள நாடுகளில் ஒன்றாகப் பிரேசில் இருக்கிறது.

 why Brazilians flying to US to buy iphone and other apple products

பிரேசில்: இந்த நாட்டை சேர்ந்தவர்கள் தான் சொந்த நாட்டில் ஐபோன் வாங்க மாட்டார்களாம். பிரேசில் நாட்டில் ஐபோன்கள் விலை அதிகரிக்க 3 காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் வரிகள். வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யப் பிரேசில் நாட்டில் அதிக வரி செலுத்த வேண்டி உள்ளது. இதனால் அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் சிக்கல் தான். உதாரணத்திற்கு ஒரு 1000 டாலர் மதிப்பிலான பொருளைப் பிரேசிலில் இறக்குமதி செய்ய சுமார் 600 டாலரை வரியாகச் செலுத்த வேண்டும்.

அடுத்தகட்டமாகப் பிரேசில் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாகப் பிரேசில் உள்ளது. உலகில் 5ஆவது பெரிய நாடாகும். எனவே, கப்பலில் வரும் ஐபோன்களை அனைத்து பகுதிகளிலும் ஆகும் செலவே கணிசமாக இருக்கும். மூன்றாவது பிரேசில் நாட்டில் திட்டமிட்டு நடக்கும் கொள்ளை சம்பவங்கள் அதிகம். கேங்காக இருந்து அவர்கள் விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையடித்துவிடுவார்கள்.

அமெரிக்காவுக்குச் செல்லும் மக்கள்: போலீசாரை நம்பிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. எனவே, தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களுக்கு இவர்கள் பணம் தர வேண்டும். அதுவே கணிசமான தொகையாக இருக்கும். இந்த மூன்றும் சேர்ந்து தான் ஐபோன்கள் விலையை உச்சத்தில் வைத்துள்ளது. இப்போதும் உலகில் ஆப்பிள் தயாரிப்புகள் அதிகபட்ச விலைக்கு விற்கும் நாடுகளில் ஒன்றாகவே பிரேசில் இருக்கிறது.

 why Brazilians flying to US to buy iphone and other apple products

இதனால் பிரேசில் நாட்டில் உள்ள மக்கள் சில சமயங்களில் ஆப்பிள் தயாரிப்புகளை வாங்கவே அமெரிக்கா செல்வார்களாம். அமெரிக்கா அருகே இருப்பதால் விமான கட்டணத்தைக் கணக்கிட்டால் கூட ஐபோன்களை அமெரிக்காவில் வாங்குவது தான் லாபம் என்கிறார்கள். இதனால் அங்கே ஐபோன் அல்லது மேக்புக் போன்றவற்றை அமெரிக்கா சென்று தான் வாங்குவார்களாம். ஒருவர் சென்று சில ஐபோன்கள், மேக்புக்களை வாங்கி வாங்கி வந்தாலும் கூட லாபம் தான்.

அதேநேரம் இப்படி வெளிநாட்டிற்குச் சென்று வாங்கி வந்தாலும் கூட ஐபோன்களுக்கு பிரேசிலில் பாதுகாப்பு இல்லையாம்.. ஐபோன்களை குறிவைத்துத் திருடவே அங்குப் பலர் இருக்கிறார்கள். இவர்கள் குழுவாக ஐபோன்களை திருடி, அதை வெளியே கள்ளச் சந்தையில் விற்றுவிடுகிறார்கள். ஐபோன் விலை ஆப்பிள் ஷோரூமில் அதிகமாக இருப்பதால் சிலர் இப்படியும் வாங்குகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+