சந்திரயான்-3 ஓகே.. சத்தமில்லாமல் சீனா நிலவுக்கு போடும் பிளானை பாருங்க.. ஒன்று இல்ல 2 ராக்கெட்டாம்
வாஷிங்டன்: இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில், சீனா நிலவுக்குப் போட்டுள்ள பிளான் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் 3 விண்கலனை வெற்றிகரமாக அனுப்பியது. ஆந்திராவின் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்ணில் சீறிப் பாய்ந்தது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க வேண்டும் என்பதே சந்திரயான் 3 திட்டமாகும்.

நிலவுக்கு இந்தியா அனுப்பும் மூன்றாவது சாட்டிலைட் இதுவாகும். அடுத்த 40 நாட்கள் பயணித்து சந்திரயான் 3 நிலவை அடையப் போகிறது. இது மட்டும் வெற்றிகரமாக இருந்தால் நிலவுக்கு ரோபோவை அனுப்பிய 4ஆவது நாடு என்ற சிறப்பை இது பெறும்.
சீனா: உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் இந்த சாதனைகளை இந்தியா படைத்து வரும் நிலையில், நமது அண்டை நாடான சீனாவும் நிலவைக் குறிவைத்து ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே, அவர்கள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகச் சீனா நிலவுக்கு இரண்டு ராக்கெட்டுகளை அனுப்ப உள்ளது.
இது அமெரிக்கா, ரஷ்யாவின் திட்டங்களில் இருந்து வேறுபட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் அவர்கள் இரண்டு ராக்கெட்களை நிலவுக்கு அனுப்ப உள்ளனர். இதில் ஒன்றில் சீன விண்வெளி வீரர்கள் இருப்பார்கள். இரண்டு ராக்கெட்டுகளும் சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழையும். அதன் பின்னர் அதிலிருந்து விண்வெளி வீரர்கள் நிலவின் மேற்பரப்பில் இறங்க உள்ளனர். வரும் 2030இல் சீனா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் எனத் தெரிகிறது.
இரட்டை ராக்கெட்: சீனாவிடம் ஒரே நேரத்தில் இரண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பி மீண்டும் திரும்ப அழைத்து வரும் அளவுக்கு வலுவான ராக்கெட் இல்லை. இதற்காக அவர்கள் பல ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இதை அவர்களால் வெற்றிகரமாகச் செய்து முடிக்கமுடியவில்லை. இதன் காரணமாகவே அதற்குப் பதிலாக இந்த இரட்டை ராக்கெட் திட்டத்தை அவர்கள் முன்மொழிந்துள்ளனர். இது சீனாவின் தொழில்நுட்ப சிக்கலைச் சமாளிக்க உதவும் என்றே தெரிகிறது.
அதன்படி ஒரு ராக்கெட் மூலம் அவர்கள் நிலவுக்குச் செல்வார்கள். மற்றொரு ராக்கெட் மூலம் மீண்டும் பூமிக்குத் திரும்புவார்கள். நிலவில் ஆய்வுகளை முடித்து, மாதிரிகளைச் சேகரித்த பிறகு, அவர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்ப உள்ளனர். இந்தியா தனது சந்திரயான் -3 திட்டத்தை அனுப்பியுள்ள நிலையில், சீனாவின் இந்த பிளான் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்திரயான் 3 வெற்றிகரமாக முடிந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, சந்திரனின் ரோபோவை அனுப்பிய 4ஆவது நாடாக இந்தியா மாறும்.
உலக நாடுகள்: சந்திரனில் உள்ள கனிம வளங்களைச் சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள் கண்காணித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் போட்டி மீண்டும் உலக நாடுகள் மத்தியில் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவும் மீண்டும் இப்போது தனது ஆர்டெமிஸ் திட்டம் மூலம் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. அடுத்த கட்டமாகச் செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஒரு முன்னோட்டமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவுடன் பல துறைகளில் சீனா போட்டி போட்டாலும் விண்வெளி ஆய்வில் சீனா பின்தங்கியே இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த இரட்டை ராக்கெட் திட்டத்தைச் சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்கள் சூப்பர் ஹெவி லாங் மார்ச் 10 கேரியர் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications