அமெரிக்கா வேண்டவே வேண்டாம்.. மொத்தமாக கனடாவுக்கு செல்லும் இந்தியர்கள்.. உண்மையில் என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: டிரம்ப் வந்த பிறகு அமெரிக்காவில் வெளிநாட்டினருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் குறித்த சமீபத்திய டேட்டா பலருக்கும் ஷாக் தருவதாகவே இருக்கிறது. அதாவது இந்தியர்கள் சமீப காலமாக அமெரிக்கா செல்வதையே தவிர்த்து வருகிறார்களாம். அதற்குப் பதிலாக கனடாவே முதல் சாய்ஸ்ஸாக மாறி வருகிறதாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்படிப்பை வெளிநாட்டில் படித்தால் அங்கேயே செட்டிலாகிவிடலாம் எனப் பலரும் நினைப்பதால் வெளிநாடுகளுக்குப் படிக்க செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Why Indian Students Prefer Canada Over US for Higher Education the reason is beyond geopolitics

அமெரிக்கா வேண்டாம்

இப்படி வெளிநாட்டில் படிக்க செல்வோர் விரும்பி செல்லும் நாடுகளில் ஒன்றாகக் கடந்த காலங்களில் அமெரிக்கா இருந்தது. உயர்கல்விக்கு இந்திய மாணவர்களின் விருப்பமான நாடாக அமெரிக்கா இருந்து வந்தது. ஆனால், அண்மைக் காலமாக நிலைமை மாறிவிட்டது. அமெரிக்காவில் தொடர்ந்து உயரும் கல்விக் கட்டணங்கள், அதிகரித்து வரும் மாணவர் கடன், கடுமையான விசா விதிமுறைகள், அரசியல் சிக்கல்களால் இந்தியர்கள் அமெரிக்கா செல்லவே யோசிக்கிறார்களாம்.

அமெரிக்காவை மொத்தமாகப் புறக்கணிக்கும் இந்தியர்கள் மெல்ல கனடாவுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். கனடா பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி, 2024 இறுதியில் கனடாவில் 4.27 லட்சம் இந்திய மாணவர்கள் இருந்தனர். இதுவே அமெரிக்காவில் 3.37 லட்சம் இந்திய மாணவர்கள் மட்டுமே இருந்தனர்.

கனடாவுக்குப் போகும் இந்தியர்கள்

வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களில் 94% பேர் கனடாவைத் தங்கள் முதல் விருப்ப நாடாகக் குறிப்பிட்டனர். கல்லூரி கட்டணம் குறைவாக இருப்பது, பாதுகாப்பு மற்றும் குடியேற்றத்திற்கு உகந்த கொள்கைகள் ஆகியவைதான் இதற்குப் பிரதானக் காரணமாக இருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய கனடா நாட்டின் கல்வி நிறுவனங்களில் சர்வதேச மாணவர் சேர்க்கை ஏற்கனவே 27% அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையால் ஏற்பட்ட மாற்றமாகும்.

முன்பு ட்ரூடோ பிரதமராக இருந்தபோது இந்தியாவுக்கும் கனடாவுக்கும் மோதல் போக்கு இருந்தது. அப்போது கனடா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. ஆனால், இப்போது ட்ரூடோ போய்விட்டார். தற்போதைய கனடா நிர்வாகத்திற்கும் இந்தியாவுக்கும் ஓரளவுக்கு நல்லுறவே இருக்கிறது. இதனால் மீண்டும் கனடாவுக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

முக்கிய காரணம்

பல இந்தியர்களுக்கு கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மிகப் பெரிய வேறுபாடாகக் கல்விக் கட்டணம் இருக்கிறது. இது தொடர்பாகத் தங்கள் மகள்களை வெளிநாட்டில் படிக்க வைத்த பெற்றோர் ஒருவர் கூறுகையில், "என் மகள்களில் ஒருவர் கனடாவிலும், மற்றொருவர் அமெரிக்காவிலும் இளங்கலைப் பட்டம் பெற்றனர். கனடாவில் செலுத்திய கல்விக் கட்டணம், அமெரிக்காவில் செலுத்தியதில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே. ஒரு வெளிநாட்டு மாணவருக்கு அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் கனடாவில் 50%க்கும் குறைவாகவே செலவாகிறது" என்றார்.

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் பெருந்தொகை நிர்வாகச் செலவுகள் மற்றும் விளையாட்டு செலவுகளுக்கு போய்விடுகிறது.. ஆனால், கனடா பல்கலைக்கழகங்கள் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தைக் கல்விக்கு மட்டும் செலவழிக்கிறது. இதுவே கட்டணம் குறைவாக இருக்க முக்கியமான காரணமாக இருக்கிறது.

வேலைவாய்ப்பு

அதேபோல போட்டி மிகுந்த சந்தையில், வேலைவாய்ப்பும் முக்கியமாக இருக்கிறது. கனடாவின் கொள்கைகள் இதவொரு விஷயத்தில் பலரையும் ஈர்க்கிறது. இப்போது நீங்கள் கனடாவில் சில குறிப்பிட்ட பிரிவுகளில் பட்டம் பெற்றால் Post-Graduation Work Permit கிடைக்கும். இதன் மூலம் அங்கேயே எளிதாக வேலை செய்யலாம்.. பல பல்கலைக்கழகங்களில் அங்கு மாணவர்களுக்குப் படிக்கும்போதே ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் கிடைக்கிறதாம். இதன் மூலம் 92% மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்த ஆறு மாதங்களுக்குள் வேலைவாய்ப்பு பெறுகிறார்களாம்.

டிரம்ப்

இதுபோக பாதுகாப்பும் முக்கிய காரணியாக இருக்கிறது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சின்ன விஷயங்களுக்கும் துப்பாக்கிச் சூடு நடப்பதால் உயிரிழப்பே ஏற்பட்டுவிடுகிறது. இன்னொரு பக்கம் டிரம்ப்பும் இஷ்டத்திற்குக் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இதனால் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா செல்லவே யோசிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் மொத்தமாக கனடா பக்கம் திரும்பிவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+