ரொம்ப முடியல! மருத்துவமனைக்கு ஓடிய நோயாளி! வாயை திறந்ததால்.. ஐய்யோ! கடைசியில இப்படி ஆகிடுச்சே!
அமெரிக்காவை சேர்ந்த கேன்சர் நோயாளிக்கு வினோத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கேன்சர் பாதிப்பு ஏற்படவே அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இருப்பினும், சிகிச்சையின் போது அவருக்கு ஏற்பட்ட மாற்றம் ஆய்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முன்பு அரிதாக ஏற்பட்ட நோய்கள் கூட இப்போது அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் முன்பைவிட நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து செய்தால் மோசமான உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதேபோல சில சமயங்களில் நோய்ப் பாதிப்பு நாம் எதிர்பார்க்காத சைட் எபக்டகளை கூட கொடுத்துவிடும்.

அமெரிக்கா
அப்படியொரு சம்பவம் தான் இப்போது அமெரிக்காவில் நடந்துள்ளது. இதைப் பார்த்து மருத்துவர்களே வாயடைத்துப் போய்விட்டார்களாம். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் இது தொடர்பாக விரிவாக விளக்கியும் உள்ளனர்.. 50 வயதான அந்த நபரின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் அதில் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவின் வட கரோலினாவில் வசித்த அவருக்கு ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டர்ஹாமில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மெட்டாஸ்டேடிக் ஹார்மோன்-சென்சிட்டிவ் புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

வினோத பாதிப்பு
இரண்டு ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென அவரது பேசும் முறை மாறியுள்ளது. அதாவது அமெரிக்கர்கள் பொதுவாக ஆங்கிலத்தை அமெரிக்கன் ஆக்சென்ட் எனப்படும் அமெரிக்க உச்சரிப்பில் தான் பேசுவார்கள். ஆனால், கேன்சர் சிகிச்சை பெற்று வந்த இவரது பேச்சு திடீரென அயர்லாந்து ஆக்சென்ட் எனப்படும் அயர்லாந்து உச்சரிப்பிற்கு மாறியுள்ளது. இது மருத்துவர்களைப் பெரிய குழப்பத்தில் ஆழ்த்தியது. அவருக்கு ஏன் இதுபோல அயர்லாந்து உச்சரிப்பு வருகிறது என்று மருத்துவர்களுக்கு ஆய்வாளர்களுக்குத் தெரியவில்லை. அவருக்கு முதலில் தான் எப்படி உச்சரிக்கிறோம் என்றே தெரியவில்லை. ஏனென்றால், அவர் இதுவரை அயர்லாந்திற்குச் சென்று வந்ததே இல்லை.

மருத்துவர்கள் விளக்கம்
மேலும், அவரது குடும்ப உறுப்பினர்களும் யாரும் அயர்லாந்து சென்றதில்லையாம். திடீரென இப்படி கேன்சர் உறுதியானவுடன் அவர் அயர்லாந்து உச்சரிப்பில் முதல்முறையாகப் பேசியது அனைவரையும் குழப்பியது. மருத்துவர்களுக்கு இவருக்கு வெளிநாட்டு உச்சரிப்பு பாதிப்பு (Foreign Accent Syndrome) ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.. அதாவது குடும்பத்தில் யாருக்கும் நேரடி தொடர்பு இல்லாத போதிலும் வெளிநாட்டின் உச்சரிப்பில் பேசத் தொடங்குவதே இந்த பாதிப்பாகும். 20 மாத சிகிச்சைக்குப் பின்னர் அவர் உயிரிழந்த நிலையில், கடைசி வரை அவர் ஐரிஷ் உச்சரிப்பில் தான் பேசினார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரிய குழப்பம்
அங்குள்ள இரு வேறு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இது தொடர்பாக ஆய்வு செய்துள்ளனர். இருப்பினும், அவர்களால் இதற்கான காரணத்தைக் கண்டறியவே முடியவில்லையாம். சுமார் 20 மாதங்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஐரிஷ் உச்சரிப்பே தொடர்கிறது. மேலும், அவர் உயிரிழக்கும் முன்பு, பக்கவாதம் ஏற்பட்டு படிப்படியாக அவரது உடல் பாதிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அந்த நபர் தனது 20களில் பழகிய சிலர் அயர்லாந்து சேர்ந்தவர்கள் மற்றும் தொலைதூர உறவுகளில் சிலர் அயர்லாந்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், அவர் அயர்லாந்திற்குச் சென்றதே இல்லையாம்.

நரம்பியல் சோதனை
மேலும், சிகிச்சை தொடங்கும் வரை அவருக்கு ஐரிஷ் உச்சரிப்பு எப்படி இருக்கும் என்று கூட தெரியாதாம். இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "அவருக்கு நாங்கள் நரம்பியல் பரிசோதனை கூடச் செய்தோம். அதில் அவருக்கு எந்தவொரு பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அவரது மூளையில் அசாதாரண மாற்றங்கள் எதுவும் தெரியவில்லை. கீமோதெரபி சிகிச்சை காரணமாக அவருக்கு ஏற்பட்ட புரோஸ்டேட் கேன்சர் சரியாகத் தொடங்கியது. இருப்பினும், மூளையில் ஏற்பட்ட மற்றொரு பாதிப்பால் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்" என்று கூறினர்.

என்னவாக இருக்கலாம்
பரனோபிளாஸ்டிக் நரம்பியல் கோளாறு (paraneoplastic neurological disorder) எனப்படும் பாதிப்பால் அவருக்கு இப்படி உச்சரிப்பு மாறியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கேனசர் நோயாளிகளின் சொந்த நோயெதிர்ப்பு அமைப்பே அவர்களின் மூளையின் பகுதிகளையும், தசைகள், நரம்புகள் மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றைத் தாக்கும் போது இது ஏற்படுகிறது. அவரது ஐரிஷ் உச்சரிப்பு கட்டுப்படுத்தவே முடியாததாக இருந்ததாகவும் அது தொடர்ந்து அதிகரித்தே வந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இரண்டே பேருக்கு மட்டும்
சமீப காலங்களில் உலகெங்கும் இதுவரை இரண்டு பேருக்கு மட்டுமே இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். 2009 மற்றும் 2011களில் இந்தச் சம்பவம் ஏற்பட்ட நிலையில், இரண்டும் 50 மற்றும் 60களில் இருக்கும் பெண் கேன்சர் நோயாளிகளுக்கே ஏற்பட்டுள்ளது. அதேநேரம் புரோஸ்டேட் கேன்சர் நோயாளி ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படுவது இதுவே முதல்முறை. மேலும், இவருக்கு ஏற்பட்ட பாதிப்பு முந்தைய இரு நோயாளிகளைக் காட்டிலும் தீவிரமாக இருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications