டிரம்ப் குடும்பத்தில் பிரச்சினை? பேமிலி போட்டோவில் கூட மனைவி மெலனியா மிஸ்ஸிங்! என்ன காரணம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அதன் பிறகு அங்கு மரபுபடி நடக்கும் நிகழ்வுகள் தொடங்கியுள்ளன. ஆனால், அதில் எதிலும் டிரம்பின் மனைவியான மெலனியாவை பார்க்கவே முடிவதில்லை.. இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவும் நிலையில், உண்மையில் மெலனியாவுக்கு என்னாச்சு! அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்துவிட்டது.. அதில் கமலா ஹாரிஸை வீழ்த்தி குடியரசு கட்சியின் டிரம்ப் வென்று, 47ஆவது அதிபராக தேர்வாகியிருக்கிறார்.

டிரம்ப்: அமெரிக்காவை பொறுத்தவரை என்ன தான் நவ. மாதமே தேர்தல் முடிந்தாலும் புதிய அதிபர் அடுத்தாண்டு ஜன. மாதம் தான் பதவியேற்பார். இந்த இடைப்பட்ட காலத்தில் அங்கு மரபுபடி பல நிகழ்ச்சிகள் நடக்கும். அந்த நிகழ்வுகள் எல்லாம் இப்போது தொடங்கிவிட்டன. அதில் டிரம்பும் அவரது சகாக்களும் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால், அதில் டிரம்ப் மனைவி மட்டும் மிஸ்ஸிங்.. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இப்போது என்று இல்லை.. பிரச்சாரத்தின் போதே மெலனியாவை பெரியளவில் பார்க்க முடியவில்லை.. அமெரிக்காவில் எப்போதும் அதிபர் வேட்பாளரின் குடும்பத்தினர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். கடந்த 2016, 2020 தேர்தல்களிலும் கூட டிரம்பிற்காக அவரது மனைவி மெலனியா பிரச்சாரம் செய்து இருந்தார். ஆனால், இந்த முறை பிரச்சாரத்திலேயே கூட அவரை பார்க்கவே முடியவில்லை. அதேபோல வெற்றிக்கு பிறகு, டிரம்ப் தனது குடும்பத்துடன் போட்டோ எடுத்திருந்தார். அதில் எலான் மஸ்க் கூட இருந்தார். ஆனால், மெலனியா மட்டும் மிஸ்ஸிங்.
மெலனியா: இதற்கிடையே நாளை வெள்ளை மாளிகையில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்ச்சியிலும் மெலனியா கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அங்கு பாரம்பரியமாக, சிட்டிங் அமெரிக்க அதிபரின் மனைவி புதிதாக அதிபராக தேர்வாகியுள்ள நபரின் மனைவிக்கு வீட்டில் தேநீர் விருந்து அளிப்பார். கடந்த 2016ல் மிச்செல் ஒபாமா இதுபோல தான் மெலனியாவுக்கு தேநீர் விருந்து அளித்திருந்தார். 2020ல் தேர்தல் முறைகேடு புகார் இருந்ததால் அப்போது தேநீர் விருந்து நடைபெறவில்லை.
அதேநேரம் இந்தாண்டும் தேநீர் விருந்தில் மெலனியா கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பைடனின் மனைவி ஜில் பைடன் சார்பில் தேநீர் விருந்துக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ள போதிலும், அதில் மெலனியா கலந்து கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. மெலனியாவுக்கு நெருக்கமானவர்கள் அவர் பங்கேற்க மாட்டார் என்றே கூறுகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு டிரம்பை தொடர்பு கொண்டு பைடன் வாழ்த்து சொன்ன போதிலும், இன்னும் ஜில் பைடன்- மெலனியா பேசிக் கொள்ளவே இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
காரணங்கள் என்ன: இதற்கு இரு காரணங்களை சொல்கிறார்கள். முதலில் 2020 தேர்தல் முறைகேடு புகாருக்கு பிறகே ஜில் பைடன்- மெலனியா இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதுவே முக்கிய காரணமாக சொல்கிறார்கள். குடியரசு கட்சியை சேர்ந்த தலைவர்கள் மெலனியாவை ஜில் பைடன் நிகழ்வுக்கு செல்ல சொல்லி வலியுறுத்தினாலும் கூட அவர் அதற்கு ரெடியாக இல்லையாம்.
மகன்: மேலும், டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகும் கூட மெலனியா வெள்ளை மாளிகைக்கு வருவாரா என்பது உறுதியாக தெரியவில்லை என்றே சொல்லப்படுகிறது. ஏனென்றால் மெலனியா டிரம்ப் தனது மகன் பரோன் டிரம்புடன் அதிக நேரம் செலவிட விரும்கிறாராம். 18 வயதான பரோன் டிரம்ப் நியூயார்க் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேரும் நிலையில், அவருடன் இருந்து மெலனியா டிரம்ப் உதவுகிறாராம். இதன் காரணமாக இந்த முறை டிரம்ப் காலத்தில் அவருடன் மெலனியாவை பெரியளவில் பார்க்க முடியாது என்கிறார்கள்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications