காதலனை 108 முறை குத்தி கொன்ற பெண்.. ஆனாலும் விடுவித்த நீதிபதி.. காரணத்தை கேட்டால் ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது காதலனை 108 முறை கொடூரமாகக் குத்தி கொன்ற பெண்ணை நீதிபதி விடுவித்துள்ளார். அதற்கு நீதிபதி சொன்ன காரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதை என்பது எப்போதும் நம்மை அழிக்கக் கூடியது. இதனால் பல நேரங்களில் நாம் மட்டுமின்றி, நம்மைச் சுற்றி இருப்பவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் கஞ்சா போதை என்பது இப்போது மிகவும் ஆபத்தான ஒன்றாக இருக்கிறது.

இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் கஞ்சாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பல இடங்களில் சட்ட விரோதமாகக் கஞ்சா விற்பனை நடக்கவே செய்கிறது. இதனால் நடக்கும் குற்றச் சம்பவங்களும் கூட பகீர் கிளப்புவதாக உள்ளது.
108 முறை கத்தி குத்து: அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனை 108 முறை கத்தியால் குத்திய கொலை செய்தார். இருப்பினும், இந்த குற்றம் நடந்த போது அந்த பெண், கஞ்சாவால் தூண்டப்பட்ட மனநோயால் பாதிக்கப்பட்டதாகவும் இதனால் அந்த பெண்ணுக்கு அவரது செயல்களில் கட்டுப்பாடு இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது,
32 வயதான பிரைன் ஸ்பெஷர கடந்த 2018இல் போதைப்பொருளால் ஏற்படும் மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அப்போது அவர் காதலனைக் கொன்ற குற்றச்சாட்டில் கைதானார். இந்த வழக்கில் தான் நீதிபதி அவருக்குக் குறைந்தபட்ச தண்டனையை வழங்கியுள்ளனர். அவரை சிறைக்கு அனுப்ப மறுத்த நீதிபதி. 100 மணி நேரம் சமூக சேவை செய்யும்படி மட்டும் உத்தரவிட்டார். இந்த பெண் மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருக்குத் தண்டனை தருவது சரியாக இருக்காது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
பெண்: கடந்த 2018 இந்த பெண் தனது காதலுடன் இணைந்து கஞ்சா புகைத்துள்ளார். பிறகு திடீரென அவருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை.. அருகே இருந்த கத்தியை எடுத்து தனது காதலனை 108 முறை குத்தியுள்ளார். மேலும், அந்தப் பெண் தன்னை தானே பல முறை குத்திக் கொண்டார். போலீசார் அந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போது, ரத்தம் சூழ்ந்த இடத்தில் அந்த பெண் இருந்துள்ளார்.
அவர் அருகே போலீசார் சென்ற போது, தனது கழுத்தையும் அவர் அறுத்துக் கொள்ள முயன்றுள்ளார். இருப்பினும், போலீசார் உரிய நேரத்தில் உதவியதால் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உயிர் பிழைத்தார். அப்போது அமெரிக்காவில் நடந்த மிக மோசமான கொலை சம்பவமாக இது பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் தான் நீதிபதி அந்தப் பெண்ணை விடுவித்துள்ளார்.
ஷாக் காரணம்: இந்த பெண் கஞ்சாவால் ஏற்படும் மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் இதனால் தான் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அந்தப் பெண் வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தியே கஞ்சாவைப் புகைக்க வைத்ததாகவும் அந்த வழக்கறிஞர் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அந்த பெண்ணை விடுவித்துள்ளார்.
இருப்பினும், இந்தத் தீர்ப்பு குறித்த விமர்சனங்களும் பரவலாக எழுந்துள்ளது. இதன் மூலம் கஞ்சா மூலம் நடக்கும் குற்ற சம்பவங்களில் இருந்து குற்றவாளிகள் மிக எளிதாகத் தப்பிக்க முடியும் என்றும் இது மிகவும் தவறான ஒரு தீர்ப்பு என்றும் கொல்லப்பட்ட இளைஞனின் தந்தை சாடியுள்ளார்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications