கைமாறிய WWE.. மெக்மோகன் குடும்பத்துக்கு சம்பந்தமில்ல -அடேங்கப்பா! 21 பில்லியன் டாலருக்கு வாங்கிய UFC
வாஷிங்டன்: உலகின் பிரபல பொழுதுபோக்கு மல்யுத்த போட்டிகளை நடத்தி வரும் WWE நிறுவனத்தை மெக்மோகன் குடும்பத்திடம் இருந்த UFC நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது. எவ்வளவு தொகைக்கு WWE வாங்கப்பட்டது? இதனால் WWE இல் நடக்கப்போகும் மாற்றங்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.
அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்களை என அனைத்து தரப்பினரையும் தன்வசம் ஈர்த்துள்ள மல்யுத்த போட்டி WWE. WWF என்று அழைக்கப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சி 20 ஆண்டுகளுக்கு முன் WWE என்று மாற்றப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தொழில்முறை மல்யுத்தத்தில் பல்வேறு புதுமைகளையும் திரைக்கதைகளையும் புகுத்தி அனைத்து வயது, பாலினங்களை சேர்ந்த பல கோடிக்கணக்கான ரசிகர்களை WWE கொண்டு இருக்கிறது.

WWE யின் வெற்றி
ராக், ஜான் சீனா, ஸ்டோன் கோல்டு, ரெய் மிஸ்டீரியோ, பிக் ஷோ, பாபி லாஷ்லி, சிஎம் பங்க், ரோமன் ரெயின்ஸ், அண்டர் டேக்கர், ஹல்க் ஹோகன், கேன், ட்ரிபிள் எச், மார்க் ஹென்ரி, பூக்கர் டி, செத் ராலின்ஸ் என WWE யால் உலக அளவில் பிரபலமான நாயகர்கள் ஏராளம். பல மல்யுத்த போட்டிகள் உலகளவில் இருந்தாலும் WWE இமாலய வெற்றியை பெற்றதற்கு காரணம் அதற்கு இருக்கும் திரைக்கதை.

மெக்மோகன் ஓய்வு
WWE யை பொய் என்று பலரும் கூறினாலும் அதன் ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருப்பதற்கு காரணம் அதில் சண்டையை தாண்டி ஒரு கதை இருக்கும். இப்படி WWE யை உருவாக்கி உலகளவில் பிரபலப்படுத்திய அதன் நிறுவனர் வின்ஸ் மெக்மோகன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்த நிலையில் கடந்த ஆண்டு அவர் தனது ஓய்வை அறிவித்தார்.

தொடர்ந்து ஒளிபரப்பு
அவருக்கு மாற்றாக தனது மகளும் ட்ரிபிள் ஹெச்சின் மனைவியுமான ஸ்டெஃபானி மெக்மோகன் இடைக்கால தலைமை செயலதிகாரியாக பணியாற்றுவார் என்று அவர் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வாராந்திர எபிசோடுகள், சம்மர் ஸ்லாம், மனி இன் தி பேங்க், ராயல் ரம்பிள், கிரௌவுன் ஜுவெல் போன்ற சிறப்பு எபிசோடுகள் சிறப்பாக நடைபெற்று வந்தன.

கைமாறிய WWE
அதேபோல் WWE இன் தலைசிறந்த எபிசோடாக கருதப்படும் ரெஸில் மேனியா கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி நடந்து முடிந்தது. இது முடிந்த கையோடு WWE ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சிகர தகவல் கிடைத்தது. ஆம், WWE யை மெக்மோகன் குடும்பத்திடம் இருந்து UFC யை மல்யுத்த போட்டிகளை நடத்தி வரும் MMA நிறுவனம் வாங்கிவிட்டதாக வந்த செய்திதான் அது.

UFC யிடம் விற்பனை
Ultimate Fighting Championship எனப்படும் UFC என்பது தொழில்முறை மல்யுத்த போட்டியாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இதில் திரைக்கதை இல்லாத உண்மையான சண்டைகள் நடைபெறும் என்று கருதப்படுகிறது. அந்த நிறுவனம் WWE யை வாங்கி இருப்பதன் மூலம் அதில் நடைபெறும் மல்யுத்தங்களும் மேம்படும் என்று கூறப்பட்டால் பழைய திரைக்கதை வசனங்களுடன் அது இருக்குமா? என்பது சந்தேகம்.

என்ன மதிப்பு?
21 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மெக்மோகன் குடும்பம் UFC யுடன் WWE யை இணைத்து உள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டுடன் WWE இன் ஸ்மாக் டவுன் மற்றும் ரா ஆகிய எபிசோடுகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி உரிமம் முடிவடைய இருக்கும் நிலையில், இந்த இணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதுதான் சரியான நேரம் என்று வின்ஸ் மெக்மோகனும் தெரிவித்துள்ளார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications