Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"H-1B விசா வைத்திருக்கும்.. ஒவ்வொரு நபரையும் வீட்டிற்கு அனுப்புவோம்.." டிரம்ப் கட்சி தலைவர் பகீர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-1பி விசா மீதான கெடுபிடிகள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஹெச்-1பி விசா வைத்திருக்கும் அனைவரையும் வேலையில் இருந்து அனுப்பப் போவதாகச் சொல்லி டிரம்ப் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பகீர் கிளப்பியுள்ளார். அவரது பேச்சு இணையத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக வந்த பிறகு, அங்கு வெளிநாட்டினருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இல்லாமல்.. சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கும் கூட கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Will Fire All H-1B Visa Holders from State Jobs Trump party James Fishback s Immigration Crackdown

ஹெச்-1பி விசா

இதற்கிடையே அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவுக்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூட குரல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் தீவிர வலதுசாரிகள் இதை வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும், ஹெச்-1பி விசாவை எடுத்தும் கவிழ்த்தோம் என நிறுத்தினால் அது அமெரிக்காவுக்கே அதிக இழப்பைத் தரும் எனப் பலரும் எச்சரிக்கிறார்கள்.

இதற்கிடையே புளோரிடா கவர்னர் தேர்தலுக்குப் போட்டியிடும் ஜேம்ஸ் ஃபிஷ்பேக் என்பவர் ஹெச்-1பி விசா குறித்துக் கூறியுள்ள சில கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 30 வயதான ஜேம்ஸ் ஃபிஷ்பேக்கி, டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். ஹெச்-1பி விசா வைத்திருப்போரைக் காலி செய்யும் வகையில் இவர் கடுமையான கருத்துகளைக் கூறியுள்ளார். புளோரிடா கவர்னராக தேர்வு செய்யப்பட்டால் H-1B விசாக்களில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என உறுதியளித்துள்ளார்..

வீட்டுக்கு அனுப்புவேன்

மேலும், அனைத்து H-1B விசா ஊழியர்களையும் பணியிலிருந்து நீக்குவேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும், "புளோரிடா கவர்னராக நான் வந்தவுடன்.. மாகாண அரசின் துறைகளில் பணியாற்றும் H-1B விசா ஹோல்டர்களை பணிநீக்கம் செய்வேன். மேலும், தகுதியான புளோரிடா மக்களுக்குப் பதிலாக H-1B விசா வைத்திருப்போரைப் பயன்படுத்தும் நிறுவனங்களுடனான மாகாண அரசின் ஒப்பந்தங்களையும் ரத்து செய்வேன். அமெரிக்கர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஒரு தேர்தலுக்கு ஒரே கட்சியில் இருந்து பலரும் போட்டியிட விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்களுக்கு உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு யார் அதில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறதோ.. அவர்களே வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள். அதன்படி போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களில் ஒருவர் தான் இந்த ஜேம்ஸ் ஃபிஷ்பேக்கி.

அமெரிக்கா சட்டம்

இவர் குடியேற்றத்திற்கு எதிராகக் கடுமையான கொள்கைகளை அறிவிக்கப் போவதாகச் சொல்லி பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், உள்ளூர் மக்களுக்குக் குறைந்த விலையில் வீடுகள் கிடைப்பதை உறுதி செய்யப்போவதாகவும் சொல்கிறார். மேலும், வீடுகளுக்கான சொத்து வரியையும் ரத்து செய்யப் போவதாகக் குறிப்பிடுகிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஹெச்-1பி உள்ளிட்ட அனைத்து விசாக்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அங்குள்ள பெடரல் அரசுக்கே இருக்கிறது. ஆனாலும், புளோரிடாவில் வலதுசாரிகள் அதிகம் என்பதால் அவர்கள் வாக்குகளைப் பெற வைத்து ஜேம்ஸ் ஃபிஷ்பேக் பிரச்சாரம் செய்து வருகிறார்.

வாய்ப்பே இல்லை

அதேநேரம் ஹெச்-1பி விசா விவகாரத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்றே சொல்லலாம். ஐடி உள்ளிட்ட பல துறைகளில் இன்னும் போதியளவில் திறமையான அமெரிக்க ஊழியர்கள் இல்லை. எனவே, ஹெச்-1பி விசாவை ரத்து செய்தால் அது அமெரிக்கா பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கவே செய்யும். இதன் காரணமாகவே டிரம்ப் கூட ஹெச்-1பி விசா தேவை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவரது கருத்து இணையத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் போதிய அளவு திறமையான ஊழியர்கள் இல்லாத நிலையில், வெளிநாட்டினரை வீட்டிற்கு அனுப்பிவிட்டால் என்ன செய்வீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், ஹெச்-1பி விசா வைத்திருப்போர் உரிய வரிகளைச் செலுத்தியே அமெரிக்காவில் வசிக்கிறார்கள் என்றும் இதுபோல தேவையில்லாத மிரட்டல்களை விடுக்கக்கூடாது என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+