ஆபாச நடிகைகள்.. லீக்கான ட்ரம்பின் “லீலைகள்”! விலங்கு மாட்டி கைதாவாரா அமெரிக்க முன்னாள் அதிபர்?
நடிகையின் இந்த புகார் அப்போதே வந்திருந்தால் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று இருப்பது கடினம்.
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆபாச நடிகை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தன்னை போலீசார் கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜோ பைடனுக்கு முன் அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், மிகப்பெரும் தொழிலதிபரும், நடிகரும் ஆவார். அதே நேரம் சர்ச்சைக்குரிய தனது பேச்சுக்களால் உலக மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த 2024 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில் டிரம்பே மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் டிரம்ப் குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்டார்மி டேனியல்ஸ்
இந்த நிலையில்தான் அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு டொனால்டு டிரம்ப் 1.30 லட்சம் அமெரிக்க டாலர்களை டொனால்டு டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. அவர் தற்போது எழுதி இருக்கும் புத்தகத்தில் டொனால்டு டிரம்ப் தன்னுடைய வீட்டுக்கு வந்து தவறாக நடந்துகொண்டதாக ஸ்டார்மி அதில் தெரிவித்து இருக்கிறார்.

பணம் கொடுத்தது ஏன்?
கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டபோது நடிகர் ஸ்டார்மி டேனியல்ஸ் இந்த புகாரை அம்பலப்படுத்த முயன்றார். அதை அறிந்த டிரம்ப் இதுபற்றி வெளியில் சொல்லாமல் இருக்கவே பணத்தை கொடுத்து இருக்கிறார். நடிகையின் இந்த புகார் அப்போதே வந்திருந்தால் அவர் தேர்தலில் வெற்றிபெற்று இருப்பது கடினம்.

மறுப்பு தெரிவித்த டிரம்ப்
நடிகைக்கு வழங்கப்பட்ட தொகையும் தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து எடுத்து கொடுக்கப்பட்டதாகவும், அது சட்டவிரோதமான செயல் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டு அப்போதே லேசாக கசிந்த நிலையில் அதற்கு டொனால்டு டிரம்ப் மறுப்பு தெரிவித்து வந்தார். அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வதந்தி பரப்பப்படுவதாக கூறினார்.

டிரம்பின் வழக்கறிஞர்
கடந்த மார்ச் 13 ஆம் தேதி நடிகைக்கு பணம் வழங்கிய டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹெனுக்கு நியூ யார்க் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அப்போது டிரம்ப் சொன்னதையே தான் செய்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் நடிகை டேனியல்ஸ் சாட்சி சொல்வதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளார் என அவரது வழக்கறிஞர் கூறினார்.

டிரம்ப் ட்விட்டர் பதிவு
இது தொடர்பாக குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், டொனால்ட் டிரம்பையும் வாக்குமூலம் வழங்க அழைப்பு விடுத்துள்ளார்கள். இந்த நிலையில்தான், தன்னுடைய ட்விட்டரில், "குடியரசு கட்சியின் வேட்பாளரும் அமெரிக்க முன்னாள் அதிபரும் கைது செய்யப்படுவார்கள். போராட்டம் செய்ய தயாராகுங்கள்." என்று குறிப்பிட்டு பூகம்பத்தை கிளப்பினார்.

கை விலங்கு மாட்டி கைதா?
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் கை விலங்கு மாட்டி மற்றவர்கள் போல் கைது செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதுபோல் செய்ய மாட்டார்கள் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். டிரம்ப் கைது செய்யப்பட்டால், அவரிடம் கை ரேகை பதிவு செய்யப்படும் என்று கூறி உள்ளார்கள். அவரது ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications